தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து உலக சினிமாவையே இந்தியா பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி.
இவர் தற்போது ராம் சரண் மற்றும் ஜீனியர் என்டிஆர் நடிக்கும் RRR படத்தை இயக்கி வருகிறார்.
அதாவது ஒரு ஹீரோ கேரக்டரை நீரை போன்றும் மற்றொரு கேரக்டரை நெருப்பை போன்றும் உருவாக்கியுள்ளார்.
இவர்களுடன் ஆலியா பட் அஜய்தேவ்கன் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
RRR படத்தின் வேலைகள் முடித்துவிட்டு பழம்பெரும் தயாரிப்பாளர் KL நாராயணனின் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.
அதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிப்பார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
ராஜமௌலிக்கு சரி.. மகேஷ் பாபுக்கும் சரி வணிக வியாபாரம் மிகப்பெரிய அளவில் உள்ளது. ஓப்பனிங்கும் பெரியளவில் இருக்கும். எனவே படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.
SS Rajamouli and Mahesh Babu to team up for mega project