‘மாமன்னன்’ பட டிரைலரை வெளியிடும் இந்திய சினிமாவின் பிரபலம்

‘மாமன்னன்’ பட டிரைலரை வெளியிடும் இந்திய சினிமாவின் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்னன்’.

இப்படத்தில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நாயகுடு

‘மாமன்னன்’ திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘நாயகுடு’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயகுடு

udhayanidhi’s maamannan telugu movie trailer releasing today

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘டிமான்டி காலனி 2’ பட சிறப்பு வீடியோ அப்டேட்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘டிமான்டி காலனி 2’ பட சிறப்பு வீடியோ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி -2’ படத்தின் சிறப்பு வீடியோ இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

arulnidhi’s demonte colony special video releasing

உங்களுக்கு தான் வேலை அடுத்தவனுக்கு இல்லையா.? உங்களுக்குன்ன ரத்தம்.. அடுத்தவனுக்கு தக்காளி சட்னியா.? மொமண்ட்

உங்களுக்கு தான் வேலை அடுத்தவனுக்கு இல்லையா.? உங்களுக்குன்ன ரத்தம்.. அடுத்தவனுக்கு தக்காளி சட்னியா.? மொமண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது 32 ஆவது படத்தின் படப்பூஜை ஜூலை 5ஆம் தேதி சென்னை வானகரம் பகுதியில் உள்ள பி ஜி எஸ் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

‘ஜீனி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பூஜையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் அர்ஜுனன் ஜூனியர், நாயகிகள் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தேவயானி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பங்கேற்றனர்.

இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த பூஜை விழா காலை 8:30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின்னால் இந்த பூஜை தொடங்கப்பட்டது.

பொதுவாக படப்பூஜை என்றாலே நல்ல நேரம் பார்த்து தொடங்குவார்கள் என்பதால் பத்திரிகையாளர்கள் அனைவரும் 8:30 – 9:00 மணிக்குள் ஆஜராகிவிட்டனர்.

ஆனால் ஜெயம் ரவி கீர்த்தி செட்டி ஆகியோர் கிட்டத்தட்ட 10.30 மணி அளவில் மட்டுமே அந்த தளத்திற்கு வந்தனர். ஆனாலும் விழா தொடங்க 11 மணி ஆனது.

இந்த ‘ஜீனி’ படப்பூஜை மேடையில் பேசிய ஒருவர் கூட தாமதத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் பூஜை முடிந்த பின்னர் ரவி புறப்பட்டு செல்லும்போது ரவியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள சிலர் அனுமதி கேட்டனர்.

அதற்கு அவர் “எனக்கு வேலை இருக்கு.. என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ‘இப்போது வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்..’ என்று கூட கூறி சென்று இருக்கலாம்.. ஆனால் தனக்கு மட்டுமே வேலை இருப்பது போல தோரணையில் கூறிவிட்டு உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சரிதான்.. நீங்கள் பிசியான நடிகர் தான். உங்களுக்கு 1000 வேலைகள் இருக்கும்.

ஆனால் உங்களுக்காக பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடக சமூக வலைத்தளங்கள் இணையதளங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 300+ மேற்பட்டோர் 3 மணி நேரமாக காத்திருந்தார்களே அது உங்களுக்கு தெரியவில்லையா ஜெயம் ரவி.?

ஒரு 1/2 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் தாமதம் என்றால் கூட பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக இத்தனை பேரை காக்க வைத்தது எந்த விதத்தில் நியாயமாகும்.?

உங்கள் ஒருவருக்காக இத்தனை பேரை நீங்கள் காக்க வைத்தது மட்டும் நியாயமா.? உங்களுக்கு மட்டும் தான் வேலை இருக்கிறதா? அவர்களுக்கு வேற வேலை இல்லையா.?

இனியாவது உங்கள் நேரத்தை போன்று மற்றவர்கள் நேரத்தையும் கருத்தில் கொண்டு நடந்து கொண்டால் இனி எல்லாம் ஜெயமே..!

Please respect others timing too Jayam Ravi

ஜிவி பிரகாஷ் கைவசம் படங்கள்.; நடிகராக எத்தனை.? இசையமைப்பாளராக எத்தனை.?

ஜிவி பிரகாஷ் கைவசம் படங்கள்.; நடிகராக எத்தனை.? இசையமைப்பாளராக எத்தனை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். ஒரு கட்டத்தில் இவர் நடிகராகவும் உருவெடுத்து பல படங்களில் நாயகனாக நடித்தார்.

கிட்டத்தட்ட மாதத்திற்கு ஒரு படம்.. வாரத்திற்கு ஒரு படம்.. என பல படங்களை அதிரடியாக கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதிரடியான ஹிட் பாடல்களை கொடுத்து வந்தார்.

தனுஷின் ‘அசுரன்’.. சூர்யாவின் ‘சூரரை போற்று’ உள்ளிட்ட பல படங்கள் ஜி வி பிரகாஷ் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.. இந்த இரு படங்களும் தேசிய விருதையும் பெற்றது.

எனவே இசையில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஜிவி பிரகாஷ்.

இந்த நிலையில் மறுபடியும் இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார் ஜீவி பிரகாஷ்.. அவர் நடிகராக எத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.? இசையமைப்பாளராக எத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறார்? என்பது குறித்த பார்வை இதோ…

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் :

தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி, சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான், கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் SK21, அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 – அச்சம் என்பது இல்லையே, சூர்யா நடிப்பில் வாடிவாசல், கார்த்தி நடிப்பில் ஜப்பான், வசந்த பாலனின் அநீதி மற்றும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ் இசையில் தயாராகி வருகின்றன.

நடிகர் ஜிவி. பிரகாஷ் படங்கள்..:

தினேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடியே, சீனுராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம், 13, கள்வன், டியர், ரெபல் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.

upcoming movies of acting and music compose in gvprakash

ஆண் குழந்தைக்கு தாயானார் சிம்பு – விஷால் பட ஹீரோயின்.!

ஆண் குழந்தைக்கு தாயானார் சிம்பு – விஷால் பட ஹீரோயின்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சனாகான்.

இதை தொடர்ந்து ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைவன்’, ‘அயோக்யா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நடிகை சனாகான் கடந்த 2020-ல் முப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஃப்தார் விருந்தில் தனது கணவர் முஃப்தி அனஸ் சயத்துடன் சனா கான் கலந்து கொண்டிருந்தார். அவருடைய கையை பிடித்து விறு விறுவென வேகமாக இழுத்து சென்றிருக்கிறார். இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா? இழுத்து செல்வது என்றெல்லாம் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து நிலையில், காற்றோட்டம் இல்லாத பகுதியில் நின்றதால் சோர்வாக உணர்ந்தேன். இதனால் தண்ணீர் குடிக்க கணவர் வேகமாக அழைத்து சென்றார் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், நடிகை சனாகானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை வலைத்தளத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.

திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் சனாகானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

actress Sana Khan has born a baby boy

‘மாவீரன்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்ட்டிஃபிகேட் என்ன.?

‘மாவீரன்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்ட்டிஃபிகேட் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில்,இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘மாவீரன்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

மாவீரன்

Sivakarthikeyan’s ‘Maaveeran’ movie certified U/A

More Articles
Follows