நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று..; ஐதராபாத் மருத்துமனையில் அனுமதி

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று..; ஐதராபாத் மருத்துமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamannaah coronaகொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது.

ஏழை முதல் பணக்காரர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கோடிகளில் சிகிசலசைக்கு பணம் கொடுத்தாலும் பணக்காரர்களே இதன் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

பாடகர் எஸ்பிபி, தொழிலதிபர் வசந்தகுமார், அரசியல்வாதி ஜெ. அன்பழகன் உள்ளோட்டோர் அண்மையில் மரணமடைந்தனர்.

பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினர், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தெரிவித்திருந்தார்.

தற்போது நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Actress Tamannaah tests positive for COVID 19

அந்த அவார்ட் கிடைச்சா தான் அதெல்லாம்..; கல்யாணத்துக்கு இப்படியொரு கண்டிசன் போட்டாரா நயன்தாரா.?

அந்த அவார்ட் கிடைச்சா தான் அதெல்லாம்..; கல்யாணத்துக்கு இப்படியொரு கண்டிசன் போட்டாரா நயன்தாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara vignesh shivanதென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் 1 நடிகை நயன்தாரா.

‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து பணிபுரிந்த போது நயன்தாரா & விக்னேஷ் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

அதன் பின்னர் பல வருடங்களாக இருவரும் காதலர்களாகவே வலம் வருகின்றனர்.

ஆனால் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என்ற கேள்வி அடிக்கடி எழும்.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் குறித்த ஒரு தகவல் பரவி வருகிறது.

தனக்கு தேசிய விருது கிடைத்த பின்னர்தான் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளாராம் நயன்.

இந்த தகவல் உண்மையா? என்பது ஒரு புறம் இருந்தாலும் அவருக்கு எப்போது தேசிய விருது கிடைப்பது? எப்போது திருமணம் நடப்பது? என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Nayanthara’s marriage condition to Vignesh Shivan

அரியநாச்சியாக வாழும் அனைவருக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.. – ஐஸ்வர்யா ராஜேஷ்

அரியநாச்சியாக வாழும் அனைவருக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.. – ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ka pae ranasingamவணக்கம்,

‘க/பெ ரணசிங்கம்’ படத்துக்கு ஆதரவு அளித்து வரும் தினசரி பத்திரிகையாளர்கள், இணைய பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள், யூடியூப் விமர்சகர்கள், பண்பலையாளர்கள், சமூக வலைதள பயனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி. இந்த நன்றி என்ற மூன்று எழுத்துக்குள் தான் என்னுடைய தற்போதைய நிலையை சொல்லக் கூடிய கட்டாயத்தில் உள்ளேன். கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று வைத்து நன்றிச் சொல்லியிருப்பேன். அந்தளவுக்கு ‘க/பெ ரணசிங்கம்’ படத்தின் விமர்சனங்களில் எனது நடிப்பைப் பாராட்டி எழுதியிருக்கிறீர்கள், பேசியிருக்கிறீர்கள்.

நான் நடிக்க தொடங்கியதிலிருந்தே உங்களுடைய ஆதரவு இருந்து வருகிறது. சரியான நடிப்பின் போது தட்டிக் கொடுப்பது, தவறான படத்தின் போது குட்டு வைப்பதும் என உங்களுடைய விமர்சன வரிகளால் தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன்.

‘க/பெ ரணசிங்கம்’ படத்தின் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்தளவுக்கு கதையை ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார் இயக்குநர் விருமாண்டி சார்.

வசனங்களை கத்தி முனை போன்று கூர்மையாக எழுதியிருந்தார் சண்முகம் சார்.

ஒரு கதையே படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது என்பார்கள். இவர்கள் இருவரும் தான், தற்போது இந்தப் படம் அடைந்திருக்கும் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

இந்தக் கதையை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் ராஜேஷ் சார், என்னுடன் நடித்த விஜய் சேதுபதி சார் மற்றும் சக நடிகர்கள் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் சார், இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் என உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எனது நன்றி.

எனது திரையுலக வாழ்க்கையில் ‘க/பெ ரணசிங்கம்’ ரொம்ப முக்கியமான படம். கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகி கொண்டாடப்பட்டு இருக்கும்.

இப்போது ஜீ ப்ளக்ஸ் டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் படம் பார்க்கும் போதே இந்தளவுக்கு பாராட்டு மழை என்றால், திரையரங்கில் வெளியாகி இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மகிழ்கிறேன். அனைவரும் எழுதியிருக்கும் விமர்சனங்கள், பேசிய வார்த்தைகள் என அனைத்தையும் கேட்டேன்.

கண்டிப்பாக அனைத்து வார்த்தைகளையும் என் இதயத்தின் ஓரத்தில் வைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக நல்ல படங்களில் எனது பயணம் தொடரும்.

இந்த அரியநாச்சி கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், அப்படியே பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது.

கண்டிப்பாக இந்த அரியநாச்சியைப் போல் எத்தனையோ பேர் இங்கு வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வணங்கி, இந்தப் படத்தின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!

என்றும் நன்றியுடன்…

ஐஸ்வர்யா ராஜேஷ்
03-10-2020

Actress Aishwarya Rajesh thanked media for their support to her in Ka Pae Ranasingam

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு நாட்கள் குறைப்பு..? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு நாட்கள் குறைப்பு..? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanவிஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்தில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெறும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நடைபெறும் என செய்திகள் வெளியானது.

ஆனால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அதிகாரபூர்வமாக இந்த நிகழ்ச்சி 105 நாட்கள் நடப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ஹாட்ஸ்டார் ட்விட்டரில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ் ரசிகா’ என 105 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

New official update on Bigg Boss total days

நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க 200 கிலோமீட்டர் நடந்தே வந்த வெறியர்

நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க 200 கிலோமீட்டர் நடந்தே வந்த வெறியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Allu Arjunதெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.

இவரின் பாடல்களும் நடனங்களும் தெலுங்கு சினிமாவில் பிரபலம்.

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க அவரது ரசிகர்… ரசிகர் என்பதை விட வெறியர் என்றே சொல்லலாம்.

ஆந்திராவில் குட்டூரில் மாச்சேர்லா என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒரு ரசிகர் 200 கிலோமீட்டர் நடந்தே ஹைதராபாத் வந்துள்ளார்.

இதனையடுத்து அவரை அல்லு அர்ஜுன் சந்தித்து வாழ்த்தி அவருக்கு மரக்கன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Allu Arjun fan walks 250 kms to meet Allu Arjun

கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரம்.; ‘அடல்’ நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை திறந்து வைத்த மோடி

கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரம்.; ‘அடல்’ நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை திறந்து வைத்த மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modiஹிமாச்சல பிரதேசம் மணாலியிலிருந்து- லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரை, 9 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைக்க, கடந்த 2000-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது.

இப்பணிகளுக்கு 2002ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பல்வேறு இயற்கை பேரிடர் சவால்களை கடந்து, “அடல்” நெடுஞ்சாலை சுரங்கப் பாதை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த சுரங்க பாதை அமைந்துள்ளது.

இந்த மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

PM Modi inaugurates world’s longest highway tunnel Atal in Himachal Pradesh

More Articles
Follows