ஜப்பானில் ஜூனியர் என்டிஆர் மற்றும் எஸ் எஸ் ராஜமௌலியுடன் தீபாவளியை கொண்டாடிய ராம் சரண்

ஜப்பானில் ஜூனியர் என்டிஆர் மற்றும் எஸ் எஸ் ராஜமௌலியுடன் தீபாவளியை கொண்டாடிய ராம் சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை வீட்டில் கொண்டாடத் தவறிவிட்டார், அதைப் பற்றி அவர் பெரிதாக வருத்தப்படவில்லை.

காரணம் அவர் ஜப்பானில் ஜூனியர் என்டிஆர் மற்றும் எஸ்எஸ் ராஜமௌலியுடன் சேர்ந்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை விளம்பரப்படுத்துகிறார்.

சமீபத்திய ட்வீட்டில், என்டிஆர் மற்றும் ராஜமௌலியுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“தீபாவளிக்கு வீட்டில் இருப்பதைத் தவறவிட்டேன், ஆனால் ஜப்பானிய பார்வையாளர்களிடமிருந்து RRR மீதான அன்பை காண நேர்ந்தது என பதிவிட்டுள்ளார்.

மீண்டும் இணையும் விஜய் – அட்லீ கூட்டணி..

மீண்டும் இணையும் விஜய் – அட்லீ கூட்டணி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய்.

விஜய்யை வைத்து ‘தெறி’ , ‘மெர்சல்’ , ‘பிகில்’ என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ.

அட்லீ தற்போது ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

அட்லீ அடுத்த விஜய்யின் ‘தளபதி 68’ படத்தை இயக்க உள்ளதாக ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது விஜய் – அட்லீ இணையும் நான்காவது படமாகும்.

vijay atlee joins for a new flim

‘தளபதி 67’ அப்டேட் எப்போது கிடைக்கும் ? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

‘தளபதி 67’ அப்டேட் எப்போது கிடைக்கும் ? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், படத்தின் நடிகர்கள் மற்றும் கதைக்களம் குறித்து பல ஊகங்கள் உள்ளன.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியில் தளபதி 67 பற்றி மனம் திறந்தார்.

அவரது அடுத்த படம் எப்போது அறிவிக்கப்படும் என்று கேட்டதற்கு அடுத்த படம் குறித்த அறிவிப்புகளை இப்போதே அறிவிப்பது சரியாக இருக்காது.

டிசம்பரில் இருந்து எனது அடுத்த பட அறிவிப்பு நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று லோகேஷ் கனகராஜ் கூறினார்.

பொங்கல் தினத்தில் விஜய் – அஜித் மோதலை தவிர்க்க புது ப்ளான்.; ‘வாரிசு’ ஓடிடி & டிவி ரைட்ஸ் அப்டேட்ஸ்

பொங்கல் தினத்தில் விஜய் – அஜித் மோதலை தவிர்க்க புது ப்ளான்.; ‘வாரிசு’ ஓடிடி & டிவி ரைட்ஸ் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம்.

இந்த படம் ஏற்கெனவே 2023 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கலுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே ஜனவரி 11ம் வெளியாகும் என கூறப்படுகிறது.

அதாவது அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாகும் ‘துணிவு’ படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதன்மூலம் விஜய் – அஜித்தின் படங்களின் நேரடி மோதலை தவிர்க்கலாம் எனத் தெரிகிறது. மேலும் முதல்நாள் வசூலும் பிரியாமல் இருக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் OTT உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாகவும் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Varisu & thunivu movies OTT & Satlight rights updates

சீனு ராமசாமியுடன் 1.. யோகிபாபுவுடன் 1.; அறுசுவை மன்னன் ‘மாதம்பட்டி’ ரங்கராஜ் அப்டேட்ஸ்

சீனு ராமசாமியுடன் 1.. யோகிபாபுவுடன் 1.; அறுசுவை மன்னன் ‘மாதம்பட்டி’ ரங்கராஜ் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமையல் கலையில் வல்லுனர் ‘மாதம்பட்டி’ ரங்கராஜ். கோவை மாவட்டத்தில் உள்ள பிரபல விஐபி நிகழ்ச்சிகளுக்கு இவரது சமையல் தான் பேவரைட்.

மேலும் அரசு & சினிமா நிகழ்ச்சிகளுக்கும் உணவளித்து அசத்தி வருகிறார் ரங்கராஜ்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வெற்றி விழாவிற்கும் அறுசுவை விருந்து தயாரித்துக் கொடுத்திருந்தார்.

சமையல் கலை மட்டுமில்லாமல் சினிமா துறையிலும் வேகமாக வளர்ந்து வருகிறார்.

சூப்பர் ஹிட்டான ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண் குயின்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் இவர்.

இந்த நிலையில் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். ‘மெஹந்தி சர்க்கஸ்’ போலவே இப்படமும் ஓர் அழகான காதல் கதையாம்.

மேலும் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த லதா என்பவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் ஜோடியாக ஆத்மிகா நடிக்க முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்து வருகிறார்.

இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் பற்றி அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Aarusavai Mannan ‘Madhampatti’ Rangaraj Updates

V என்றால் வெற்றி.; ‘வாரிசு’ அப்டேட் கொடுத்த விஜய்யின் நெருங்கிய நண்பர்

V என்றால் வெற்றி.; ‘வாரிசு’ அப்டேட் கொடுத்த விஜய்யின் நெருங்கிய நண்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம்.

இப்படத்தை தமிழகத்தில் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிடுகிறார்.

இப்பட பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதில் விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக ஸ்ரீமன் தெரிவித்து தன் புகைப்படத்தை தன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்.. “பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன். அது என்ன படம் என்று உங்களுக்கு தெரியும். V என்றால் வெற்றி என (வாரிசு) படத்தையும் விஜய்யையும் மறைமுகமாக புகழ்ந்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது.

More Articles
Follows