நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay arjun sampathநடிகர் விஜய்யின் வீடுகள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

விஜய் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த ‘பிகில்’ படம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்து உள்ளது.
இதற்கு அவர்கள் வரி செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி உள்ளனர்.

BREAKING விஜய்யை விரட்டும் பாஜகவினர்; ‘மாஸ்டர்’ சூட்டிங்கில் பரபரப்பு

எனவே நடிகர் விஜயின் சொத்துகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.

அதேபோல் சினிமா படங்கள் எடுக்கும்போது இந்து சமய விரோத கருத்துகளை திணித்தும், நாட்டுக்கு விரோதமான கருத்துகள் கொண்ட படங்களையும் எடுத்து வருகிறார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

BREAKING விஜய்யை விரட்டும் பாஜகவினர்; ‘மாஸ்டர்’ சூட்டிங்கில் பரபரப்பு

BREAKING விஜய்யை விரட்டும் பாஜகவினர்; ‘மாஸ்டர்’ சூட்டிங்கில் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master shooting spotபிகில் பட வசூலில் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், கல்பாத்தி அகோரம், ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் விஜய் வீட்டில் எந்த ரொக்கமும், ஆவணங்களும் கைப்பற்றவில்லை.

வாக்கு மூலங்கள் மட்டுமே பெறப்பட்டன.

பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

நடிகர் விஜய்யின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யனும்.. – அர்ஜூன் சம்பத்

இரண்டு நாட்கள் விசாரணைக்கு பிறகு அதிகாரிகளின் விசாரணையில் இருந்து மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புக்காக மீண்டும் நெய்வேலிக்கு சென்றார் விஜய்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் சூட்டிங் எடுத்துக்கொண்டிருந்தபோது, பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தது யார்? உடனே அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கத்தில் அங்கு கூடிய பாஜகவினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

சிபிராஜின் “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabadadaariநடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கபடதாரி படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா

சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த “மேட்டுபட்டி” படங்கள் குறிப்பிடதகுந்தவை. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த “ஆரம்பம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

Creative Entertainers & Distributors நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதவாது…

நடிகை சுமன் ரங்கநாதன் எங்கள் படத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி. முன்னதாக நாங்கள் நடிகை பூஜா குமாரை இந்தக்கதாப்பாத்திரத்திற்காக தேர்வு செய்திருந்தோம் அவரும் இக்கதாப்பத்திரத்திற்கு மிகப்பொருத்தமானவரே, ஆனால் அவரின் அவசரமான அமெரிக்க பயணத்தால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது கன்னட பதிப்பில் இந்தக்கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்ட சுமன் ரங்கநாதன் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

சுமன் ரங்கநாதன் வெகு அற்புதமான நடிப்பால் இந்தகதாப்பாத்திரத்தில் ரசிகர் மனங்களை வென்றிருந்தார். தமிழிலும் அவர் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்ப்பார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அவர் அறிமுகமானவர் என்பது கூடுதல் பலம். தமிழில் சில குறிப்பிடதகுந்த வெற்றிபடங்களுக்கு பிறகு அவர் கன்னடத்தில் பிஸியாகிவிட்டார். இப்போது தமிழுக்கு அவரை அழைத்து வந்தததில் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழில் அவர் பங்குபெறும் பகுதியின் படப்பிடிப்பு முழுதாக முடிந்து விட்டது. சென்னையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் அவர் பங்குபெற்ற பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ஜான் மகேந்திரன் அவர்களுடன் இணைந்து தனஞ்செயன் தழுவிய திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.

Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ்,J சதீஷ் குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சைமன் K கிங் இசையமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் K L படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். M.ஹேமந்த் ராவ் கதையில் தழுவல் திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்செயன் எழுதியுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The Beginning ‘உருவாகிறது.

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக ‘2323 The Beginning ‘உருவாகிறது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2323 the beginningமூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத் தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு ‘தமிழனானேன்’ என்றொரு படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்த’ 2323 ‘படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது,

“இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும்.

இப்போது முதல் பாகத்தை உருவாக்கி வருகிறேன். இந்த 2020-ல் தொடங்கும் கதையை இப்போது உருவாக்கி வருகிறேன்.

வெப் சீரிஸ் தயாரிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன்

நம் கண்ணுக்குத் தெரியாத பூதாகரமான பிரச்சினையாக உருவாகி வருகிறது குடிநீர்ப் பஞ்சம். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் எதிர்கால விஸ்வரூபத்தை நினைத்தால் பீதி ஏற்படுத்தும்.
இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் இந்தத் தண்ணீருக்காக நடக்கும் அரசியலையும் திரைமறைவு வணிகத் திட்டங்களையும் சுயநல வியாபாரங்களையும் நினைத்தாலே இப்போதே அச்சம் தருகிறது. அவற்றைத் தோண்டினால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.

இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் இந்த முதல் பாகத்தை எடுத்து வருகிறேன் . ‘வெதர் கண்ட்ரோல்’ எனப்படும் காலநிலையைக் கையில் எடுத்து அதைக் கட்டுப்படுத்துகிறான் வில்லன்., மக்கள் வாழும் சூழ்நிலையையே கட்டுப் படுத்தும் அளவுக்கு அவன் வளர்கிறான் .அவனை எப்படிக் கதாநாயகன் முறியடிக்கிறான் என்பதுதான் கதை.
இதில் ஹீரோயிசத்துடன் தமிழனின் வீரக் கலையான குத்து வரிசையைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் சொல்லியிருக்கிறேன்.

நான் எப்பொழுது படம் எடுத்தாலும் தமிழரின் பெருமை களையும் வீரக்கலைகளையும் இடம்பெறச் செய்து அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் உடையவன்.

இருபதே நாட்களில் இந்த படப்பிடிப்பை முடித்து விட்டோம். இப்போது மெருகேற்றும் பணிகளில், தொழில்நுட்ப.ப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இப்படத்தில் நாயகனாக நான் நடித்து இருக்கிறேன். நாயகிகளாக சாத்விகா ,கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார் .இவர்களுடன் ‘எமன்’ படப் புகழ் அருள் டி சங்கர் ,ராஜேந்திரன் கிருஷ்ணராஜ், ப்ரீத்தா, காசி,ஒரிசா பாலு ,டாக்டர் அபர்ணா, வினீஷ் ,ஆனந்த் ஆர். லிங்கா , சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு D.M.சந்துரு. இசை மகராஜ் தேவர், ஏ.ஆர்.தாமஸ், ஸ்ரீராம் ஆனந்த்.

வெற்றித் தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்.

மசாலா படத்தில் சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும்,” என்று கூறுகிறார் இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணா.

வெப் சீரிஸ் தயாரிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன்

வெப் சீரிஸ் தயாரிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanவிஸ்வரூபம் படத்தை இயக்கி தயாரித்து நடிக்கும் போதே அதை முதலில் வெப் சீரிசாக தயாரிக்கத்தான் கமல் முடிவு செய்திருந்தார்.

ஆனால் அப்போது அது பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை என்பதால் அதனை கைவிட்டார்.

தற்போது வெப் சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஒரே படத்தில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் & உலகநாயகன்

இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது…

‛‛எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக பனிஜே ஆசியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி” என பதிவிட்டுள்ளார்.

அன்புச்செழியன் வீட்டில் 65 கோடியை கைப்பற்றியது வருமான வரித்துறை

அன்புச்செழியன் வீட்டில் 65 கோடியை கைப்பற்றியது வருமான வரித்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

financier anbu chezhiyanகோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை அன்புச்செழியன் நடத்தி வருகிறார்.

மேலும் மதுரை உட்பட தென்மாவட்ட சினிமா விநியோகஸ்தராகவும் உள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

மதுரை கீரைத்துறை, காமராஜர் ரோட்டில் உள்ள அவரது வீடுகள், தெற்கு மாசி வீதி அலுவலகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தலைமறைவான அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

விஜய் நடித்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது.

இதற்கு அன்புச்செழியன் நிதி வழங்கி இருக்கலாம் என்றும், இப்படத் தயாரிப்பில் முறைகேடு நடத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகித்து வருகின்றனர்.

இன்று நடந்த சோதனையில் மதுரையிலிருந்து ரூ.15 கோடியும், சென்னையிலிருந்து ரூ.50 கோடி பணமும் ரொக்கமாக கைப்பற்றி உள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் விஜய் வீட்டிலும் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

More Articles
Follows