தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று ஞாயிற்றுக்கிழமை மே 21ஆம் தேதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தை ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த படம் ஏ ஜி எஸ் நிறுவனத்திற்கு 25வது படமாகும். மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் -யுவன் கூட்டணி இணைகிறது.
இதற்கு முன்பு ‘புதிய கீதை’ என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
தற்போது முதன்முறையாக விஜய் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது
அந்தப் பதிவில், “என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. உங்களிடம் சத்தியம் செய்து கொடுத்தது போலவே இந்த புகைப்படத்தை பட அறிவிப்புக்குப் பிறகு தான் வெளியிடுகிறேன். (இந்த போட்டோ 10 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது) ஆம். கனவுகள் நனவாகியுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
venkat prabhu released a selfie photo with vijay after ten months