‘பார்க்கிங்’ படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்த ‘பிகில்’ பட நடிகை

‘பார்க்கிங்’ படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்த ‘பிகில்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

தற்போது இவரது கைவசம் ‘டீசல்’ மற்றும் ‘எல் ஜி எம்’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் எல்ஜிஎம் படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தன் முதல் படைப்பாக தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் ஹரிஸ் கல்யாண்.

இந்த படத்திற்கு ‘பார்க்கிங்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார்.

இவர் மேயாத மான், நானே வருவேன், மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் இந்துஜா.

இந்த படத்தை ‘பலூன்’ பட இயக்குனர் சினிஸ் ஸ்ரீ தரன் தயாரித்துள்ளார்.

இந்துஜா

Harish Kalyans new movie titled Parking

சட்டை கிழிஞ்சாலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால்.; இதான் காரணமா.?

சட்டை கிழிஞ்சாலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால்.; இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகரத்தில் ஒரு கிராமம் என்ற நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் விஷால்.

அவருக்கு மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் ஆகியவை மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விஷால்

இதன்பின்னர் மாட்டு வண்டியில் பயணம் செய்தார் நடிகர் விஷால்.

மேலும் சில பெண்களுடன் இணைந்து நாத்து நடவும் செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விஷாலின் சட்டை கிழிந்தது. எனவே அவருக்கு உடனடியாக மாற்று உடை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனாலும் சட்டையை மாற்ற மறுத்துவிட்டார் விஷால்.

விவசாயத்தால் கிழிந்த ஆடை. அப்படியே இருக்கட்டும் என்று கூறி, கிழிந்த சட்டையுடனே அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறார் விஷால்.

விஷால்

Actor Vishal participated in event with teared shirt

‘கங்குவா’ குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்த சூர்யா

‘கங்குவா’ குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘கங்குவா’.

இப்படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொடைக்கானலில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் கொடைக்கானல் ஷூட்டிங் நிறைவடைந்ததாகவும், சூர்யா படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக பிரமாண்டமான செட் அமைக்க பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் ‘கங்குவா’ படத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya treats the crew of ‘kanguva’ with biryani

THE POWER MAGNET ARRIVES MIDNIGHT சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டர் மாஸ் அப்டேட்

THE POWER MAGNET ARRIVES MIDNIGHT சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டர் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர்.

ரஜினியின் தங்கையாக முன்னாள் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். 1980-90-களில் ஜீவிதா பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் ரஜினி படத்தில் இணைந்து நடிக்கவில்லை.

தற்போது தான் முதன்முறையாக ரஜினியுடன் ஜீவிதா நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘லால் சலாம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கியது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “34 நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நாட்களள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று என தெரிவித்தார்.

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் இன்று மே 7 ஞாயிறு தங்களது ட்விட்டர் பக்கத்தில் லால் சலாம் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதில் ” நமது பாய் மும்பைக்கு திரும்பியுள்ளார்” என குறிப்பிட்டு இன்று நள்ளிரவு லால் சலாம் படத்தில் ரஜினி கதாபாத்திரம் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தில் மும்பை மாநகரம் இடம்பெற்று இருக்கும். அதில் பாட்ஷா பாய் பாம்பே நகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. எனவே ‘லால் சலாம்’ படத்திலும் இந்த கேரக்டர் பவர்ஃபுல்லாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

#LalSalaam – Superstar #Rajinikanth’s Name & Character Look Reveal at 12AM Tonight..🔥 (08/05/23) l #filmistreet

Waiting..🤩 Bhai is Back to #Mumbai..🤙 Guess name.?!

THE MAN ..THE MANIDHAN…THE POWER MAGNET ARRIVES MIDNIGHT… #Thalaivar #Appa ❤️ # lalsalaam

https://t.co/hX445p0ZLa

Lal Salaam Rajini character look will be released on 8th May midnight

‘கழுவேத்தி மூர்க்கன்’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த நாயகன் அருள்நிதி

‘கழுவேத்தி மூர்க்கன்’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த நாயகன் அருள்நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சை.கௌதமராஜ்.

சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இப்படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில், நடிகர் அருள்நிதி இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ’கழுவேத்தி மூர்க்கன்’ படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என பதிவிட்டுள்ளார்

மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டிருந்தார்கள்

கழுவேத்தி மூர்க்கன்

Arulnithi’s ‘Kazhuvethi Moorkkan’ for May release

ஏவிஎம் நிறுவன மியூசியம்.; ஸ்டாலின் – கமல் – வைரமுத்து பங்கேற்பு.; நீங்களும் பார்க்கலாம்

ஏவிஎம் நிறுவன மியூசியம்.; ஸ்டாலின் – கமல் – வைரமுத்து பங்கேற்பு.; நீங்களும் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை எடுத்து தயாரித்த பிரபல நிறுவனம் ஏவிஎம்.

கடந்த 80 ஆண்டுகளாக தயாரிப்பு துறையில் இருக்கும் இந்த நிறுவனம் ஐந்து தென்னிந்திய முதல்வர்களை வைத்து படம் எடுத்து உள்ளனர்.

எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி ரஜினி, கமல் முதல் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இவர்கள் தயாரித்துள்ளனர்.

இந்திய சினிமாவே பெருமைப்படும் வகையில் பல படங்களை தயாரித்த இந்த நிறுவனம் தற்போது தங்கள் தயாரித்த படங்களில் பயன்படுத்திய கார்கள் பைக்குகள் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் பயன்படுத்திய பொருட்களை தற்போது பார்வைக்கு வைத்துள்ளனர்.

இதற்கு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் (AVM HERITAGE MUSEUM) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த அருங்காட்சியததை தமிழக முதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, வடபழனி, ஏவிஎம் ஸ்டுடியோஸ், 3ஆவது அரங்கில் இன்று (07.05.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் “ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தினை “(AVM Heritage Museum) திறந்து வைத்தார்.

அதோடு அருங்காட்சியததை முழுமையாக பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் T.R. பாலு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. நடிகர் கமல்ஹாசன். நடிகர் சிவகுமார் இயக்குனர் S.P.முத்துராமன் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு AVM நிறுவனத்தின் தலைவர் சரவணன் அவர் மகன் குகன் அருணா குகன் மற்றும் இயக்குனர் S.P.முத்துராமன் வரவேற்றனர்.

இந்த அருங்காட்சியத்தில் A.V. மெய்யப்ப செடடியார் பயன்படுத்திய கார் அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படங்களில் உபயோகப்படுத்திய பொருள்களும் இந்த அருங்காட்சியத்தில் இடம் பிடித்து உள்ளது.

இந்த அருங்காட்சியத்தை பொது மக்கள் பார்வையிட முடியும். இதற்கான நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். செவ்வாய்கிழமை & விடுமுறை தினங்களில் மட்டும் விடுமுறை.

பார்வையாளர்களுக்கு இதுவரை கட்டணம் விதிக்கப்படவில்லை. அது ரூபாய் 100 முதல் 200 வரை இருக்கும் எனவும் குடும்பமாக வருபவர்களுக்கு கட்டணத்தில் சலுகை இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

AVM Heritage Museum inaugurated by CM Stalin

More Articles
Follows