8 வருடங்களுக்கு பிறகு அட்லீ & பிரியா-வின் ‘வீட்ல விசேஷங்க..’

8 வருடங்களுக்கு பிறகு அட்லீ & பிரியா-வின் ‘வீட்ல விசேஷங்க..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ.

அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ.

ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார்.

இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் “ஜவான் ” படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்கை, இவர்களை தாண்டி ரசிகர்களுக்கும் வியக்கும் வண்ணம் இருக்கிறது.

இவர்களது காதல் வாழ்கையின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகும் போது, அதை பார்த்த ரசிகர்கள், அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.

இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்க போகும் மகிழ்ச்சியில் இருவரும் திளைத்து இருக்கின்றனர்.

பலவித உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இந்த தருணத்தில், இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொள்கின்றனர்..

“சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம். ” –

அட்லீ & பிரியா அட்லீ

Oh Mega Treat.; புத்தாண்டுக்கு சன்னி லியோன் தரிசனம்.; மச்சான்ஸ் என்ஜாய்

Oh Mega Treat.; புத்தாண்டுக்கு சன்னி லியோன் தரிசனம்.; மச்சான்ஸ் என்ஜாய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ் நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’ (OMG).

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேச்சு சர்ச்சையானது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 30ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்..

வேற என்னங்க.. புத்தாண்டுக்கு சன்னிலியோன் தரிசனம்.. என்ஜாய் பண்ணுங்க மக்கா

என் நண்பன் திருமலை எப்பவும் சினிமாவுக்காக உழைப்பவன் – RK சுரேஷ்

என் நண்பன் திருமலை எப்பவும் சினிமாவுக்காக உழைப்பவன் – RK சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவான படம் ‘மான் வேட்டை’.

இந்தப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது…

” இந்த படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் ஹீரோ சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பான இசையை கொடுத்துள்ளார். படம் எதிர்ப்பார்பை அதிகரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

R.K. சுரேஷ் பேசியதாவது…

” எனது நண்பன் தான் இந்த படத்தின் கதாநாயகன், அவன் ஒரு கடின உழைப்பாளி, அவன் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். இந்த மான்வேட்டை அந்த வெற்றியை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

திருமலை சினிமாவிற்காக உழைப்பவர். இதில் நடித்து இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. ”

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து இயக்கம் – M.திருமலை
இசை – ஶ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு – விஜய் வில்சன்
வசனம் – வேலு சுப்பிரமணியம்
படத்தொகுப்பு – சுதா, லக்‌ஷ்மணன்
பாடல்கள் – விவேகா , சொற்கோ கருணாநிதி, ஏக்நாத்
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்.

எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்கும் நல்லவர் திருமலை – ரவிமரியா

எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்கும் நல்லவர் திருமலை – ரவிமரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவான படம் ‘மான் வேட்டை’.

இந்தப்பட இசை வெளியீட்டு விழாவில் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசியதாவது…

” எல்லா விஷயங்களும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்த படம் சிறப்பாக உருவாகி இருகிறது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக எடுக்கபட்டு இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

நடிகர் ரவி மரியா பேசியதாவது…

“நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்த படம் வெற்றி பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்.

ஒரு படம் ரிலீசான பிறகுதான் சின்ன படமா.? பெரிய படமா.?ன்னு தெரியும் – PL தேனப்பன்

ஒரு படம் ரிலீசான பிறகுதான் சின்ன படமா.? பெரிய படமா.?ன்னு தெரியும் – PL தேனப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவான படம் ‘மான் வேட்டை’.

இந்தப்பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது..

” படங்களில் சின்ன படம் பெரிய படம் என்று ஒன்னும் இல்லை. படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும். படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது, சிறந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

ஒரு படத்தின் பாடல்களை வைத்தே வருவாய் ஈட்டலாம்.. – தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார்

ஒரு படத்தின் பாடல்களை வைத்தே வருவாய் ஈட்டலாம்.. – தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவான படம் ‘மான் வேட்டை’.

இந்தப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார் பேசியதாவது…

“ஒரு படத்தின் ஆடியோ (இசை) வெற்றி பெற்றாலே அதை வைத்து படத்திற்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டலாம். இதை இந்த படம் சிறப்பாக செய்துள்ளது. நல்ல படங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும்.

அதற்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழி படங்கள் மிகப்பெரிய உதாரணம். இந்த மான் வேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

More Articles
Follows