‘பத்து தல’ சிம்பு பட பாடல் பணிகளை துவங்கினார் ஆஸ்கர் நாயகன்

‘பத்து தல’ சிம்பு பட பாடல் பணிகளை துவங்கினார் ஆஸ்கர் நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu ar rahman‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இதில் சிம்பு கேங்க்ஸ்டராகவும் கௌதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கலையரசன், தீஜே உள்ளிட்டோர் நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

ஏற்கெனவே ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் மற்றும் கிருஷ்ணா இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

தற்போது இந்த ’பத்து தல’ படத்திற்கான பாடல் கம்போசிங் பணிகளை ஏஆர் ரஹ்மான் தொடங்கிவிட்டாராம்.

AR Rahman begun composing for STR’s Pathu Thala

விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோவை வைரலாக்கும் ‘தளபதி்’ ரசிகர்கள்

விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோவை வைரலாக்கும் ‘தளபதி்’ ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with his son sanjayநடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார் என்பது பலருக்கு தெரிந்த ஒன்றுதான்.

விரைவில் அவர் திரையுலகில் தன் தந்தை போலவோ அல்லது தாத்தா போலவோ (நடிகர் அல்லது இயக்குனர்) ஆவார் என தெரிகிறது.

இந்த நிலையில் சஞ்சயின் வீடியோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சஞ்சய் காரில் சென்று கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Vijay son Sanjay video goes viral

இளையராஜாவுக்கு படம் போட்டு காட்ட விரும்பும் நடிகர் விஷால்

இளையராஜாவுக்கு படம் போட்டு காட்ட விரும்பும் நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal ilayarajaமிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இமானுவேல், பிரசன்னா நடிப்பில் 2017ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’.

இந்த படம் சூப்பர் ஹிட்டானதால் , இப்படத்தின் இராண்டாம் பாகத்தை படமாக்கி வந்தனர்.

இதன் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்க விஷால் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமியும் நடித்து வந்தனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலக மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கடந்தாண்டு அறிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைக்கும் இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு விஷால் ஒரு ட்விட் பதிவிட்டார்.

அதில்… இசைஞானிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படத்தை இசையமைப்பாளர் இளையராஜா அவர்களிடம் போட்டு காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார் விஷால்.

Update on Vishal’s Thupparivaalan 2

சிம்புவின் ‘மாநாடு’ மாஸ் அப்டேட்..; ட்விட்டரில் யுவன் வைத்த ட்விஸ்ட்

சிம்புவின் ‘மாநாடு’ மாஸ் அப்டேட்..; ட்விட்டரில் யுவன் வைத்த ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvan simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இதில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரேம்ஜி, எஸ்ஏசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் ரம்ஜான் விருந்தாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்தார்.

எனவே அப்பாடல் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

ஆனாலும் சிம்பு ரசிகர்கள் மாநாடு பட அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில், மாநாடு பட பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ளார்.

மிக விரைவில் ஒரு பாடல் வெளியிடப்படும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு தான் கொரோனா சூழ்நிலையில் ‘மாநாடு’ அப்டேட் கேட்காதீர்கள் என படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maanaadu first single will be released soon says Yuvan

தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருட்களை உதயநிதியிடம் வழங்கிய வரலட்சுமி

தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருட்களை உதயநிதியிடம் வழங்கிய வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களில் வில்லி வேடம் என்றாலும் ஹீரோயின் வேடம் என்றாலும் மிகப் பொருத்தமானவர் வரலட்சுமி.

விஜய்யின் ‘சர்கார்’ & விஷாலின் ‘சண்டக்கோழி’ படங்களில் இவரது வில்லி வேடம் பெரிதாக பேசப்பட்டது.

தற்போது இவரது கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, யானை, உள்ளிட்ட தமிழ் படங்கள் உள்ளது.

மேலும் சேவ் சக்தி எனும் அமைப்பு மூலம் சமூக நலத்திட்டப் பணிகளையும் செய்து வருகிறார் வரலட்சுமி.

தற்போது இந்த அமைப்பு மூலம், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் வரலட்சுமி.

இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டு சேர்க்க அதன் விவரத்தை நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ‘கோவிட் உதவி எண்களையும்’ வரலட்சுமி உருவாக்கியுள்ளார்.

இந்த சேவையையும் உதயநிதி தொடங்கி வைத்தார்.

அது தொடர்பான விவரங்களை நடிகை வரலட்சுமி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.

மேலும் Save Shakti Foundation – International Human Rights Organisation – Sankalp Beautiful World – Islamic Foundation Trust – EK foundation சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டன.

Thank you so much @Udhaystalin for meeting with #saveshakthi , launching our #covid helpline and accepting our 2 ton food for the stray animals on behalf of the government.. @[email protected][email protected] plz use our COVID helpline we are here to help as much as we can.!! pic.twitter.com/731Xe7ug1A

Actress Varalaxmi provided foods to street dogs

Varalaxmi sarathkumar

கமலின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

கமலின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director GN RangaRajanஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘மகராசன்’, ’கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.

இவையில்லாமல் ‘முத்து எங்கள் சொத்து’, ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, ‘மனக்கணக்கு’, ‘பல்லவி மீண்டும் பல்லவி’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது அவருக்கு வயது 90் ஆகிறது.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை காலமானார்.

ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் ‘ஹரிதாஸ்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் தந்தை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Producer GN Ranga Rajan passed away

More Articles
Follows