தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் வருண் தேஜ்.
இவர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் ஆவார்.
தமிழில் சசிகுமாருடன் ‘பிரம்மன்’, சந்தீப் கிஷனுடன் ‘மாயவன்’ படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி.
லாவண்யா திரிபாதியும் தெலுங்கில் இளம் நடிகரான வருண் தேஜூம் ‘மிஸ்டர்’, ‘அந்தாரிக்சம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று (09-06-2023) ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.
இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Varun Tej and Lavanya Tripathi are engage photos trending