தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘விடுதலை – பாகம் 2’படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகிறது. இவர் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கிச்சட்டை’ மற்றும் தனுஷ் நடித்த ‘கொடி’ & ‘பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர்
பெயரிடப்படாத இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார்.
இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள்.
மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் மேற்கொண்டிருக்கிறார். மல்டி ஸ்டார் நடிப்பில் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.
துரை செந்தில்குமார் – வெற்றிமாறன் – சூரி – சசிகுமார் – உன்னி முகுந்தன் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
Vetrimaaran Soori Sasikumar Durai Senthillumar join hands together