தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆண்டு 2023 டிசம்பர் 28ஆம் தேதிமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் காலமானார்.
அவரது மறைவு திரையுலகத்தில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் இழப்பை சந்தித்தது என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு ஷூட்டிங்ல் கலந்து கொண்டு சசிகுமார் அப்போது வர இல்லாத காரணத்தினால் தற்போது விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது..
மறைந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய இல்லத்திற்கு இயக்குநர் சசிக்குமார் அவர்கள் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அன்னாரின் புகைப்படத்தை வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார்!
தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் பேசியதாவது நடிகர் சங்க கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என்று இயக்குநர் சசிக்குமார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
Vijayakanth name for Nadigar Sangam new building says sasikumar