KGF பில்டப் நடிகர் கிருஷ்ணாஜி ராவ் மறைவுக்கு ஹோம்பலே பிலிம்ஸ் இரங்கல்

KGF பில்டப் நடிகர் கிருஷ்ணாஜி ராவ் மறைவுக்கு ஹோம்பலே பிலிம்ஸ் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப்’ முதல் பாகத்தில் கிருஷ்ணாஜி ராவ் கண்பார்வையற்றவராக நடித்திருப்பார்.

இதன் KGF 2-தில், “உங்களுக்கு யோசனை சொல்றேன். நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்” என நாயகன் யாஷூக்கு இவர் பில்டப் கொடுப்பார்.

இந்த காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கும்.

மேலும் கன்னடத்தில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். துணை நடிகராக வலம் வருகிறார் இவர்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவால் காரணமாக கிருஷ்ணாஜி ராவ் அவதிப்பட்டு வந்தார்.

எனவே பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். மேலும், அவருக்கு வயது 73.

கிருஷ்ணா ஜி மறைவுக்கு கேஜிஎஃப் படத் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே இரங்கல் தெரிவித்துள்ளது.

அதில்… “கேஜிஎஃப் பட ரசிகர்களால் தாதா என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணா ஜி ராவின் மறைவுக்கு ஹோம்பலே குழுவினரின் இரங்கல். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளது.

கிருஷ்ணாஜி ராவ்

Hombale Films mourns the demise of KGF actor Krishnaji Rao

இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணைகிறாரா சூர்யா ?

இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணைகிறாரா சூர்யா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா சமீபத்தில் விலகினார்.

இந்த செய்தி அவரது பல ரசிகர்களின் இதயங்களை உடைத்தது.

2020 ஆம் ஆண்டில், இயக்குனர் ஹரியுடன் சூர்யா தனது ‘அருவா’ படத்தை அறிவித்தார்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால், அருவா கடைசி நேரத்தில் கிடப்பில் போடப்பட்டது.

ஆக்‌ஷன் படத்திற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும் என்று சூர்யா கருதுவதால், மீண்டும் அருவா படத்தை சூர்யா கையில் எடுப்பதாக சொல்லப்படுகிறது .

ஒரே நாளில் ரெண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் பிக்பாஸ் ?

ஒரே நாளில் ரெண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் பிக்பாஸ் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸ் 6 தமிழில் தற்போது 13 பிரபலங்களுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது .

இந்த வாரம், ஆயிஷா, அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களில் இருவர் இந்த வார இறுதியில் ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் ராம் மற்றும் ஆயிஷா குறைந்த சதவீத வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட சமமாக உள்ளனர்.

எனவே அவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கேஜிஎஃப்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..!

‘கேஜிஎஃப்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் ‘கேஜிஃப்’ படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

கேஜிஎஃப் படத்தில் பார்வையற்ற வயதானவர் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கிருஷ்ணா ஜி ராவ்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் பெங்களூரில் உள்ள விநாயகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கிருஷ்ணா ஜி ராவ் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.

அவரின் மறைவுக்கு நடிகர் யஷ் மற்றும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கன்னடத்தில் ‘நாமோ நாராயணா’ என்ற படத்தில் கடைசியாக நடித்து இருந்தார்.

கிருஷ்ணா ஜி ராவ்

kgf movie actor krishna g rao passed away

ரஜினியை தொடர்ந்து ‘ஜென்டில்மேன்’ குஞ்சுமோனும் ரீ-ரிலீசில் இறங்கினார்

ரஜினியை தொடர்ந்து ‘ஜென்டில்மேன்’ குஞ்சுமோனும் ரீ-ரிலீசில் இறங்கினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த ‘பாபா’ திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை உண்டாக்கி தோல்வியை தழுவியது. ஆனாலும் ரஜினிகாந்த் இந்த கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கிறார்.

டிசம்பர் 10ஆம் தேதி முதல் இந்த படம் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த நிலையில் ஜென்டில்மேன் குஞ்சுமோன் தயாரித்த ‘காதல் தேசம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பிரேமதேசம்’ படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.

கதிர் இயக்கிய இந்த படத்தில் வினித் அப்பாஸ் தபு நடிக்க ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.

இந்த படம் நாளை டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாகிறது என அறிவித்துள்ளனர்.

இனி பழையப் படங்கள் இதுபோல ரீ ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

என் அடுத்த படத்திற்கும் ஹீரோ பரத்.; அட்வான்ஸ் புக்கிங் செய்த ஆர்.பி. பாலா

என் அடுத்த படத்திற்கும் ஹீரோ பரத்.; அட்வான்ஸ் புக்கிங் செய்த ஆர்.பி. பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்பி பாலா இயக்கத்தில் பரத் வாணி போஜன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘லவ்’.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் தயாரிப்பாளர் R.P.பாலா பேசியதாவது…

பரத்திடம் பல கதைகள் சொல்லி கடைசியில் இந்தக்கதை ஓகே ஆனது. P G முத்தையா சொல்லித்தான் இந்தப்படம் நடந்தது. அவர் என் நெருங்கிய நண்பர். என்னை விட அவர் தான் இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்துள்ளார்.

விவேக்கை கண்டிப்பாக இப்படத்தில் கொண்டு வந்து விடுங்கள் என்று பரத் சொன்னார். விவேக் பிரசன்னா சூப்பராக நடித்துள்ளார். டேனியல் என் நண்பர். பரத், வாணி போஜன் இருவரும் பெரும் உழைப்பைத் தந்துள்ளார்கள்.

நான் அடுத்து எடுக்கும் படத்திற்கும் பரத் சார் தான் ஹீரோ. டிரெய்லர் விழாவில் மீதம் சொல்கிறேன் எல்லோருக்கும் நன்றி.

நடிகர்கள் : பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி, டேனியல் அன்னி போப்,

தயாரிப்பு நிறுவனம் : RP Films
தயாரிப்பு: R.P.பாலா – கௌசல்யா பாலா
இயக்கம்: R.P.பாலா
ஒளிப்பதிவாளர்: P.G.முத்தையா
இசை: ரோனி ரபேல்
எடிட்டர்: அஜய் மனோஜ்
கலை இயக்குனர்: தினேஷ் மோகன் (MFA)
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆண்டோ.எல்
ஸ்டண்ட்: ஸ்டன்னர் சாம்
நடனம்: சந்தோஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( Aim )

More Articles
Follows