ஷங்கர் ஒரு டைரக்டரே கிடையாது… 2.0 பிரஸ்மீட்டில் அக்‌ஷய் ஓபன் டாக்

2 Point 0 Press Meet Photos (20)ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரகுமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவை கையாள, லைகா நிறுவனம் ரூ. 400 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை துபாய் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் இன்று உலக பத்திரிகையாளர்களை துபாய் நாட்டில் படக்குழுவினர் சந்தித்தனர்.

பிரஸ்மீட்டில் அக்‌ஷய்குமார் பேசியதாவது….

இதில் நான் டாக்டர் ரிச்சர்ட் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். என் கேரக்டருக்கு மேக்அப் போட 3.30 மணி நேரம் ஆகும் என்றால் அந்த மேக் அப்பை எடுக்க 1.30 மணி நேரம் ஆகும்.

இதில் ஆன்ட்டி ஹீரோ கேரக்டரில் நடிப்பது புதிய அனுபவமாக இருந்தது.

என்னை பொறுத்தவரை ஷங்கர் ஒரு டைரக்டரே கிடையாது. அவர் ஒரு சயின்டிஸ்ட்.

அவர் இந்த படத்தில் சொல்ல வரும் விஷயத்தை நினைத்து கூட பார்க்க முடியாது.

இதற்கு மேல் படத்தை பற்றி நான் சொல்லக்கூடாது என கான்ட்ராக்டில் கையெழுத்து போட்டுள்ளேன். ஒருவேளை சொன்னால் சம்பளம் தரமாட்டர்கள் என நினைக்கிறேன்.” என்று பேசினார் அக்சய்குமார்.

Akshaykumar speech about his character in 2point0 movie

Overall Rating : Not available

Related News

ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
லைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய்…
...Read More
ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More

Latest Post