தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹிந்தியில் சூப்பர் டூப்பரான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளார் என்ற தகவலை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.
சிறந்த ஹிந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார்.
பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெட்ரிக் இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை பார்த்தோம்.
இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.
இவர் தபு நடித்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1998ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Aishwarya Rai in talks for Prashanth’s upcoming film