‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இணைந்த மோகன்.; கேரக்டர் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளில் விஜய் 68 #Thalapathy68 பட பூஜையுடன் சூட்டிங் தொடங்கியது.

வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க விஜய் நாயகனாக நடிக்கிறார்.

விஜய் நடிக்கும் பாடல் காட்சியுடன் படம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க முக்கிய வேடங்களில் லைலா மற்றும் சினேகா நடிக்கின்றனர்.

இவர்களுடன் டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

மேலும் பிரபல நட்சத்திரங்களும் விஜய் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த மோகனை நாயகனாக வைத்து ‘ஹரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீ ஜி.

இந்த நிலையில் தான் மோகன் தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். இதில் விஜய்யின் தந்தையாக மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரே படத்தின் வில்லன் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது மோகன் ‘ஹரா’ பட ஷூட்டிங்கில் கோவை & ஊட்டி உள்ளிட்ட பகுதியில் பங்கேற்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Mohan character in Thalapathy 68 movie

சந்தானம் – ராதிகா ஜோடிக்கு ‘பில்டப்’ கொடுக்கும் கல்யாண்

சந்தானம் – ராதிகா ஜோடிக்கு ‘பில்டப்’ கொடுக்கும் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் அன்புச் செழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இன்று சந்தானம் படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் கல்யாண் இயக்க உள்ளார்.

இவர் பிரபுதேவா நடித்த குலேபகாவலி மற்றும் ஜோதிகா நடித்த ஜாக்பாட், காஜல் நடித்த கோஷ்டி, யோகி பாபு நடித்த ஷூ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

தற்போது கல்யாண் மற்றும் சந்தானம் இணையும் படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரிக்கிறது.

நாளை மாலை 5 மணிக்கு அக்டோபர் 18ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக ராதிகா பிரித்தா நடிக்கிறார். இவர்களுடன் முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய தகவலுக்கு இணைந்திருங்கள் எங்களுடன்…

தற்போது சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பில்டப்’ என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Actor Santhanams next with Director Kalyan

JUST IN இலங்கையில் ‘லியோ’ வேண்டாம்.; நடிகர் விஜய்க்கு தமிழ் எம்பிக்கள் கடிதம்

JUST IN இலங்கையில் ‘லியோ’ வேண்டாம்.; நடிகர் விஜய்க்கு தமிழ் எம்பிக்கள் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க நாளை அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில்…

இலங்கையில் முல்லைதீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜா ஸ்ரீலங்கா அரசு கொடுத்த அச்சுறுத்தல்களால் பதவி விலகி சென்றுள்ளார். இதற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

எனவே உங்கள் படம் வெளியானால் இந்த போராட்டத்தில் பின்னடைவு ஏற்படும். எனவே அக்டோபர் 20 தேதி வரை தங்கள் படத்தை இலங்கையில் திரையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என அந்த கடிதத்தில் இலங்கை தமிழ் எம்பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Dont release Leo movie in Srilanks Tamil MPs letter to Vijay

‘லியோ’ ரிலீஸாகும் தியேட்டர்களில் இணையும் தனுஷ் – லாரன்ஸ் பட டீசர்கள்

‘லியோ’ ரிலீஸாகும் தியேட்டர்களில் இணையும் தனுஷ் – லாரன்ஸ் பட டீசர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க நாளை அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் இந்தியா தவிர மற்ற நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் & எஸ் ஜே சூர்யா நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் X’ என்ற படத்தின் டீசரும் லியோ வெளியாகும் அயல்நாட்டு தியேட்டர்களில் திரையிடப்படும் என தெரிய வந்துள்ளது.

Captain Miller and Jigarthanda Double X teaser joins with Leo

ரசிகர்கள் எதிர்பார்த்த முக்கிய தியேட்டர்களில் ‘லியோ’ ரிலீஸ் ஆகாது.; காரணம் இதான்.!

ரசிகர்கள் எதிர்பார்த்த முக்கிய தியேட்டர்களில் ‘லியோ’ ரிலீஸ் ஆகாது.; காரணம் இதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க நாளை அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

கடந்த சில தினங்களாகவே ‘லியோ’ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்குமா? இல்லையா? என்பது பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ரோகினி மற்றும் வெற்றி ஆகிய தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ‘லியோ’ தயாரிப்பு நிறுவனம் ஒரு வாரத்தில் 80 சதவிகித லாபத்தை கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு தியேட்டர் நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

இவை மட்டும் இல்லாமல் சென்னையில் இன்னும் சில தியேட்டர்களிலும் இந்த பிரச்சனை நீடித்து வருவதால் லியோ திரைப்படம் ரிலீசாகாது எனவும் கூறப்படுகிறது.

Leo will not be released in Rohini and Vettri theatres

‘லியோ’ விமர்சனம் பதிவிட்டு தளபதி விஜய் அண்ணாவை வாழ்த்திய உதய்ண்ணா

‘லியோ’ விமர்சனம் பதிவிட்டு தளபதி விஜய் அண்ணாவை வாழ்த்திய உதய்ண்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க நாளை அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

கடந்த சில தினங்களாகவே ‘லியோ’ படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்குமா? இல்லையா? என்பது பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகரும் தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி அவர்கள் ‘லியோ’ படத்தை பார்த்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அந்த விமர்சனம் குறித்து பதிவிட்டுள்ளார்.

விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜன் இயக்கம் மிகவும் அருமை. அனிருத்தின் பின்னணி இசை சூப்பர்.. LCU வில் லியோ படம் சூப்பர்.. அன்பறிவ்வின் ஆக்சன் அசத்தல்.. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Udhayanidhi review about Leo movie and wishes Vijay

More Articles
Follows