தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
‘அந்தாதூன்’ படத்தை இயக்கி 3 தேசிய விருதுகளை வென்று பிரபலமான இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது.
பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது.
ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் கடந்த ஆண்டு வெளியாகவில்லை.
மேலும், இந்தாண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுவும் சில காரணங்களால் வெளியாகவில்லை
இந்நிலையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
Katrina Kaif and Vijay Sethupathi starrer ‘Merry Christmas’ to release on December 15th