மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன்…; ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் அப்டேட்ஸ்

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன்…; ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பெரிய எதிர்பார்ப்பு சமீபத்தில் ஒரு படத்துக்கு உருவாகியுள்ளது என்றால் அது ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கிற்குத் தான்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’.

2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார்.

இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் இழைத்து தயாராகி வருகிறார்.

தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘அந்தாதூன்’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது.

தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கண்டிப்பாக இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

அந்தாதூன்’ ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறித்து சிம்ரன் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ‘அந்தாதூன்’.

பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அர்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதர கதாபாத்திரங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காமெடி, த்ரில்லர் என அனைத்தும் கலந்த வித்தியாசமான படமான ‘அந்தாதூன்’ தமிழிலும் மாபெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.

Actress Simran is on board for Andhadhun Tamil remake

Andhadhun Tamil

ஜீவன் ரித்திகா யாஷிகா இணையும் ‘பாம்பாட்டம்’..; 5 மொழிகளில் உருவாக்கம்

ஜீவன் ரித்திகா யாஷிகா இணையும் ‘பாம்பாட்டம்’..; 5 மொழிகளில் உருவாக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pambattamஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாம்பாட்டம் “.

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள் இவர்களுடன் இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ்

இசை – அம்ரிஷ்

பாடல்கள் – பா.விஜய், யுகபாரதி, விவேகா

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை – C.பழனிவேல்

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்

நடனம் – தினேஷ், சிவசங்கர்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

இணை தயாரிப்பு – பண்ணை A இளங்கோவன்

தயாரிப்பு – V.பழனிவேல்

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான்

படம் பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் பகிர்ந்த தகவல்…

1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கி உள்ளேன்.

மிகப்பெரிய C.G நிறுவனம் ஒன்று இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிக பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.

மிகப்பெரிய பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளோம்.

படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் மொத்தம் 120 நாட்கள் நடைபெற இருக்கிறது..

Pambattam will be made in 5 languages

நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் ஒளிபரப்பப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே சித்ரா.

இவர் நேற்று அதிகாலை திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இது தற்கொலை தான் என போலீசார் கூறினாலும் இது கொலையா தற்கொலையா என்னும் விவாதம் நெட்டிசன்கள் மத்தியில் நடந்து வருகிறது.

விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

எங்களால் இனி யாரையும் முல்லை கேரக்டரில் பார்க்கவே முடியாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த சீரியலில் அவருடைய நெருங்கிய தோழியான சரண்யா துராடி என்பவர் நடிக்கப்போகிறார் என கூறப்படுகின்றது.

மரணத்திற்கு முன்பு கடைசியாக சித்ரா அவர்கள் சரண்யா உடன் தான் வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

saranya turadi

Saranya Turadi to play mullai character in pandian stores

கன்னத்தில் இருந்த நகக்கீறல் சித்ராவுடையது தான்..; அவரது மரணம் தற்கொலை தான்..; போலீசார் தகவல்

கன்னத்தில் இருந்த நகக்கீறல் சித்ராவுடையது தான்..; அவரது மரணம் தற்கொலை தான்..; போலீசார் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chitra suicide‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை புகழ் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது கணவர் ஹேமந்த் உடனிருந்துள்ளார்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது அம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

சித்ராவின் உடலை 2 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

இந்த பிரேத பரிசோதனையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என உறுதியாகியுள்ளது.

அவரது கன்னத்தில் இருந்த நகக்கீரல் சித்ராவின் நகக்கீறல் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம்? என போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Police confirms Chitra’s cause of death

விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tik tok rowdy baby suriyaடிக் டாக் மொபைல் ஆப்பை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளது.

ஆனால் இந்த தடை வருவதற்கு முன்பே டிக் டாக் மூலம் பிரபலமானவர் சூர்யா.

இவரை இவரது ரசிகர்கள் ரவுடி பேபி எனவும் அழைக்கின்றனர்.

தற்போது டிக் டாக் செயலிக்கு தடை உள்ளதால் அவர் தன் பொழுதுபோக்குக்காக தொழிலை மாற்றி விபச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

சூர்யா என்ற இந்த சுபுலட்சுமி புரோக்கர் மூலமாக விபச்சார தொழில் செய்து வந்துள்ளார்.

திருச்சி மாவட்ட பகுதியில் ஸ்பா சென்டர்களில் நடந்த சோதனையின் போது அவர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் டிக்டாக் ரவுடி பேபி சூர்யா உட்பட 12 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tik Tok fame Rowdy Baby Suriya arrested for prostitution in Trichy?

போயஸ் கார்டன் வாசிகள் அவதி.. முடிவை மாற்றிய ரஜினி..; போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

போயஸ் கார்டன் வாசிகள் அவதி.. முடிவை மாற்றிய ரஜினி..; போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthவிரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது கட்சிப்பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி.

கட்சி விவரங்களை 2020 டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

போயஸ்கார்டன் இல்லம் வரும் ரசிகர்களின் வருகை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ரஜினியுடைய போயஸ் கார்டன் இல்லம் & தெருவிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

12-15 தமிழக போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினியின் இல்லம் செல்லும் வழியில் இரு இடங்களில் தடுப்புகள் அமைத்து, ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதனால் போயஸ் கார்டனில் வாசிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவர்கள் பாதிக்கப்படுவது ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு, காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

TN Police withdraw security to Rajini’s house after his request

More Articles
Follows