தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் நிறைந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரசாந்த்.
இவர் அறிமுகமான காலகட்டங்களில் தனது திறமைகளை காட்டி முன்னணி நடிகராக உயர்ந்தார்.
அதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் திடீரென சில காரணங்களால் படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் இன்றளவிலும் நடிகர் பிரசாந்த்துக்கு என மிகப் பெரிய ரசிகைகள் பட்டாளம் நிறையவே உண்டு.
இவரது தந்தையும் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தும் உள்ளனர்.
தியாகராஜன் இயக்கிய ‘பொன்னர் சங்கர்’ படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள ‘அந்தகன்’ படத்தை தியாகராஜன் இயக்க பிரசாந்த் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தந்தை மகன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்த நட்சத்திரங்களை கண்ட பக்தர்கள் ஆர்வமுடன் அவர்களிடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த வீடியோக்கள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thiagarajan and Prashanth visited Thirukadaiyur temple