கவுதம் மேனன்-கார்த்திக் சுப்பராஜ்-சுதா கொங்கரா உள்ளிட்டவர்களின் ‘புத்தம் புது காலை’ ரிலீஸ் தேதி இதோ..

கவுதம் மேனன்-கார்த்திக் சுப்பராஜ்-சுதா கொங்கரா உள்ளிட்டவர்களின் ‘புத்தம் புது காலை’ ரிலீஸ் தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான ‘புத்தம் புது காலை’ அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.

இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கள் –

இளமை இதோ இதோ – சுதா கொங்கரா இயக்கியுள்ளார். (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரை போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) ஆகியோர் நடித்துள்ளனர்.

அவரும் நானும்/ அவளும் நானும் – கவுதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்கியத்தில் எம்.எஸ். பாஸ்கர் (சிவாஜி த பாஸ்) மற்றும் ரீத்து வர்மா (பெல்லி சூப்புலு) ஆகியோர் நடிக்கின்றனர்.

காஃபி, எனி ஒன்? – சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதி ஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோர் நடிக்கின்றனர்.

ரீயூனியன் – ராஜீவ் மேனன் (கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்) இயக்கத்தில், ஆண்டிரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கண்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மிராக்கிள் – கார்த்திக் சுப்புராஜ் (பேட்ட) இயக்கத்தில் பாபி சிம்ஹா (பேட்ட), முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடிக்கின்றனர்.

நிஷப்தம், பென்குயின், பொன்மகள் வந்தாள் போன்ற பல தமிழ் படங்கள் மற்றும் அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்டான் செம காமெடி பா போன்றவற்றின் வெற்றிகரமான வெளியீட்டை தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடவுள்ள முதல் ஆந்தாலஜி திரைப்படத்தை 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 16, 2020 முதல் ஸ்டிரீம் செய்ய முடியும்.

புத்தம் புது காலை திரைப்படம் ‘ஊரடங்கு தளர்வின்’ போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது.

“நம்பிக்கை, காதல் மற்றும் புதிய தொடக்கங்களை பற்றி பேசவும் மற்றும் இந்த சவாலான காலக்கட்டத்தில் கலை மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கொள்ளும் நோக்கத்துடனும் புத்தம் புது காலை உருவானது.

மேலும் புத்தம் புது காலை மூலம் தமிழ் பொழுதுபோக்கு துறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் படைப்புக்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

putham pudhu kaalai amazon original movie

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை..; தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை..; தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதி எஸ்.கே யாதவ், 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்குகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்…

● டிசம்பர் 6, 1992 பாபர் மசூதி இடிப்பு நிகழ்வு, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படவில்லை.

● மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ சமர்ப்பித்த ஆதாரங்கள் வலுவானவையாக இல்லை.

குற்றங்களை நிரூபிக்க அவை போதுமானதல்ல.

● மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டவர்கள் நிகழ்த்திய உரை என்று சிபிஐ ஆதாரமாக வழங்கியுள்ள ஒலிப்பதிவு தெளிவானதாக இல்லை.

● சமூக விரோத சக்திகள் பாபர் மசூதியை இடிக்க முற்பட்டபோது, குற்றம் சாட்டவர்கள் அவர்களைத் தடுக்கவே முயற்சி செய்துள்ளனர் என்று தெரிகிறது.

● நீதிமன்றத்தில் சிபிஐ ஆதாரமாக வழங்கிய காணொளி, படங்கள் , ஒலிப்பதிவுகள் ஆகியவற்றின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்படவில்லை.

புகைப்படங்களின் ‘நெகட்டிவ்’ நீதிமன்றத்தில் வழங்கப்படவில்லை. வீடியோ கேசட்டுகள் சேதமாகியிருந்தன.

babri masjid judgement

All acquitted in Babri Masjid 1992 demolition case

விக்ரம் 60 அப்டேட்ஸ்.; கொடைக்கானல் செல்லும் விக்ரம் & கார்த்திக் சுப்பராஜ் & துருவ்

விக்ரம் 60 அப்டேட்ஸ்.; கொடைக்கானல் செல்லும் விக்ரம் & கார்த்திக் சுப்பராஜ் & துருவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram and Dhruv starts shooting for Vikram 60ரஜினியின் ‘பேட்ட’ & தனுஷின் ’ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து விக்ரம் 60 படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

இதில் ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர்.

இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது.

துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க விக்ரம் வில்லன் வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் விரைவில் இப்பட படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இதற்காக படக்குழு கொடைக்கானலில் லொகேஷன் பார்த்து முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே விரைவில் விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் கொடைக்கானல் செல்லவிருக்கிறார்களாம்.

Vikram and Dhruv starts shooting for Vikram 60

ரத யாத்திரை தடை..; மன்னிப்பு கேட்க முடியாது என திவ்யா சத்யராஜ் அதிரடி

ரத யாத்திரை தடை..; மன்னிப்பு கேட்க முடியாது என திவ்யா சத்யராஜ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

divya sathyarajநடிகர் சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌ என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவர்‌ கொரோனா ஊரடங்கில் தமிழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ”மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.

பாஜக சார்பில் திட்டமிடப்பட்ட ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.

இந்த தகவலை நாம் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் ரத யாத்திரை தடை கோரிக்கைக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்‌ திவ்யா.

இதுபற்றி அவர் கூறியதாவது: கொரோனா நேரத்தில்‌ தமிழ்நாட்டில்‌ ரத யாத்திரை நடந்தால்‌ மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள்‌ இருக்கிறது.

கொரோன நேரத்தில்‌ ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம்‌ கிடையாது. தமிழ் மக்களின்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ உயிர்‌ மீதும்‌ அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும்‌, தமிழ்‌ மகளாகவும்‌ ரத யாத்திரையை எதிர்க்கிறேன்‌.

மதத்தை வளர்ப்பதில்‌ இருக்கும்‌ அக்கறை மக்களின்‌ உயிர்‌ மீதும்‌ உடல்‌ நலத்தின்‌ மீதும்‌ இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும்‌ எண்ணம்‌ இல்லை.

இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறி உள்ளார்.

Divya sathyaraj says no apology can be made for opposing the chariot pilgrimage

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் செம லவ்..; ரசிகர்கள் கன்ப்யூஸ்..

ஹரிஷ் கல்யாண் & பிரியா பவானி சங்கர் செம லவ்..; ரசிகர்கள் கன்ப்யூஸ்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyan priya bhavani shankar“பியார் பிரேமா காதல்”, “தாராள பிரபு” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போல் ஹரீஷ் கல்யாண் டுவிட் போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பிரியா பவானி சங்கர்…, ‘லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல… நான்தான் முதலில் சொல்ல நினைத்தேன் என ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்..?

இதற்கு ஹரிஷ் கல்யாண்..

காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக சொல்வோம் என பதிவு செய்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தான் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது ஒரு ரீமேக் படம் தொடர்பான அறிவிப்புதான். எனவே நாமும் காத்திருப்போம்.

Actor Harish Kalyan reveals his new film update tomorrow

#Breaking அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க தடை

#Breaking அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; பள்ளிகள் & தியேட்டர்கள் திறக்க தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Cmகொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதிமுதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் மே, ஜூன், ஜூலை மாதங்களில் சில வணிக நிறுவனத்திற்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஒரு சில வணிகங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீடிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மற்ற விவரங்கள் இதோ…

பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு

திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது

கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்

அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்

உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி.

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிப்பு.

இன்னும் 10 மாசமானாலும் கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்லையாம்; ஓ.. அவிங்களே சொல்லிட்டாங்களா..?

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை தொடரும்

வாரச்சந்தைகள் மட்டும் உரிய வழிகாட்டு நெறிகளை பின்பற்றி இயங்க அனுமதி

அரசு, தனியார் நிறுவனங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுரை.

சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி

TN extends lockdown till october 31st

More Articles
Follows