தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அடுத்த ஆண்டு 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கௌரவத் தோற்றத்தின் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் பொங்கல் சமயத்தில் வெளியாகிறது. இதன் டீசர் கடந்த நவம்பர் 12 தீபாவளி அன்று வெளியானது. இந்த டீசரிலும் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு முன்னரே சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான் இசையமைப்பில் உருவான ‘அயலான்’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ படமும் 2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற திரைப்படமும் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ளனர்.
ப்ரீத்தம் இசையமைக்க தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியிருக்கிறார்.
மது நீலண்டன் ஒளிப்பதிவு செய்ய, பூஜா லதா சூர்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது.
Merry Christmas movie release postponed to Pongal 2024