மீண்டும் இணையும் பிரசாந்த்-சிம்ரன் படத்தில் ‘கபாலி’ பட இசையமைப்பாளர்

மீண்டும் இணையும் பிரசாந்த்-சிம்ரன் படத்தில் ‘கபாலி’ பட இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhosh Narayanan‘தமிழ்’, ‘ஜோடி’ படங்களில் பிரசாந்த் & சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது மீண்டும் அந்த ஜோடி இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான, அந்தாதூன் படம், தமிழில் இந்த ஜோடி ரீமேக்கில் இணைகிறது.

ஹிந்தியில், தபு நடித்த கேரக்டரில், சிம்ரன் நடிக்கிறார்.

இந்த படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் பேட்ரிக் இயக்குகிறார்.

இந்த நிலையில், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

ரஜினியின் ‘கபாலி’, ‘காலா’ படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Santhosh Narayanan to score music for Andhadhun Tamil remake

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த ‘ராங்கி’ த்ரிஷா

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த ‘ராங்கி’ த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan Trisha‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கி பிரபலமானவர் டைரக்டர் சரவணன்.

அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

சரவணன் தற்போது இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார்.

‘ராங்கி’ என்றால் தைரியமானவள்.

இப்பட கதை & வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி உள்ளார்.

இந்த படத்தை லைகா சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், இப்பட சிங்கிள் டிராக்காக ‘பனித்துளி’ எனும் பாடல் வெளியானது.

இந்த பாடலுக்கு சத்யா இசையமைக்க சின்மயி பாடியுள்ளார்.

இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இந்த பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கு டிவிட்டரில் திரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.

Trisha thanked Sivakarthikeyan for launched Raangi single

தமிழ் ஆர்வத்தால் ஐடி வேலையை விட்டு ஒலி புத்தகம் நிறுவிய இராகவிப்பிரியா!

தமிழ் ஆர்வத்தால் ஐடி வேலையை விட்டு ஒலி புத்தகம் நிறுவிய இராகவிப்பிரியா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghavi Priyaஐடி துறையில் வேலை பார்த்தவர் ப. இராகவிப்பிரியா. ஆனால் இவரை பொன்னியின் செல்வன் புதினம் கவர அதற்கு புதுவடிவம் கொடுக்க களமிறங்கி அதைச் செய்தும் முடித்திருக்கிறார்.

இராக கவிப்ரியா மேலும் கூறியதாவது,

இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் 7.5 ஆண்டு காலம் பணி புரிந்த பின்னர் தமிழ் மீது உள்ள ஆர்வமிகுதியின் பேரில் பணியிலிருந்து விலகி கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) என்ற ஒலிப் புத்தகத்தை நிறுவினேன்.

அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தின் ஒலிப் புத்தகம் பாட்காஸ்ட்டு மற்றும் யூட்டியூப் அலைவரிசையில் கட்டணமின்றி வெகு ஜன மக்கள் அதிகம் கேட்கக்கூடியதாக இருக்கிறது.

அந்த ஒலிப் புத்தகங்களைக் கேட்ட வரையில் எதிர்பார்ப்பிற்கு மாறுதலாக கதையின் சாரத்தை ழுமையாக ருசிக்கும் வண்ணம் அமைந்திராத குறையை உணர்ந்தேன்.

2300 பக்கங்கள் உள்ள அமர காவியமான பொன்னியின் செல்வன் புதினத்திற்கு என்னால் இயன்ற நியாயம் சேர்பிக்க நான் விளைந்ததின் முயற்சி தான் கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) ஒலிப் புத்தகம்.

இதில் கடுகளவேனும் வெற்றி பெற்றதின் சாட்சியாக உலகளவில் உள்ள தமிழ் அன்பர்களின் வாழ்த்தொலிகள் மின் அஞ்சல், குறுஞ்செய்திகளின் மூலமாக என்க்கு உந்துதலாக என் கன்னி முயற்சிக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

ஆழ்வார்கடியான், சுந்தர சோழர், நந்தினி ஆகிய கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் குரல் மாற்றி ஒலி சேர்க்கையளித்திருக்கிறோம். பொன்னியின் செல்வன் புதினத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் தோழர் லாவண்யா ராமச்சந்திரன் மெட்டிசைத்து தன் இனிய குரல் வலத்தால் பாடி மேலும் மெருகூட்டியுள்ளார்.

16 வயது பள்ளி மாணவி முதற்கொண்டு ஐந்தாறு முறை பொன்னியின் செல்வன் கதையை படித்தறிந்த மெல்பர்னை சேர்ந்த 80 வயது தமிழ் மூதாட்டி தோட்டு K2kadhaikalam யின் பொன்னியின் செல்வன் ஒலி புத்தகத்தின் வாயிலாக கதையின் உணர்வுகள் சுருங்காமல் கேட்டு மகிழ்வதாக தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற பாட்காஸ்ட்டு தரவரிசை பட்டியல் உருவாக்கும் அமைப்பான சார்டபல்ஸ் / Chartables K2kadhaikalam பாட்காஸ்டை இலங்கையில் முதல் தரம் மற்றும் இந்தியா மலேசியா சிங்கப்பூர் குவைத் பெஹ்ரேன் கத்தார் ஆகிய நாடுகளில் முதல் 50 இடங்களில் தரை வரிசை படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது..

Ponniyin Selvan Tamil Audio books K2 Kadhaikalam by Raghavi Priya

‘ஆஸ்ரம் பள்ளி’ வாடகை பாக்கி விவகாரம்..; கோர்ட் எச்சரிக்கை.. லதா ரஜினி விளக்கம்

‘ஆஸ்ரம் பள்ளி’ வாடகை பாக்கி விவகாரம்..; கோர்ட் எச்சரிக்கை.. லதா ரஜினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajinikanthநடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னையில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறது.

வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் என்பவருக்கு உள்ளிட்டோருக்கு சொந்தமான இந்த இடத்துக்கு இந்த சங்கம் வாடகை பாக்கி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

2013ம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே, 2017 ஆகஸ்ட் 16ம் தேதி இடத்தின் உரிமையாளர்கள் பள்ளியின் கேட்டை பூட்டினர்.

இதனால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வாடகை பிரச்சினை நீடித்த நிலையில் 2018 ஆகஸ்ட் 3ஆம் தேதி இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

எனவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் தான் கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியவில்லை என்று கூறி, மேலும் ஓர் ஆண்டு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கோச்சடையான் நஷ்ட ஈடு விவகாரம்.; லதா ரஜினிக்கு கைது வாரண்ட்..?

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலிசெய்ய ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அதன் செயலாளர் லதாவை நீதிபதி எச்சரித்துள்ளார்.

மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு நீதிபதி தடை விதித்துள்ளார்.

இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக, ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிண்டியில் ஆஷ்ரம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தைக் காலி செய்யாத விவகாரத்தில் நீதிமன்றத்தை லதா ரஜினிகாந்த் அவமதித்து விட்டதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

கரோனா நெருக்கடி காரணமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடியாத காரணத்தினாலும் உடனடியாக அந்த வளாகத்தைக் காலி செய்ய முடியாது என்றும், ஏப்ரல் 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்றும் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நாங்கள் கோரியிருக்கிறோம். மேலும், வாடகை, வரி என எந்த வித பாக்கியும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம்.

நாங்கள் சொன்ன காரணங்களையும், உறுதியையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2021 ஏப்ரல் வரை காலி செய்ய அவகாசம் கொடுத்திருக்கிறது. மேலும், இந்த இடத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என்றும், புதிய இடத்தில் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

எனவே, லதா ரஜினிகாந்த் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பையும் செய்யவில்லை என்றும், அப்படிச் செய்ததாக வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, எங்கள் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே பரப்பப்படுகின்றன.

மாணவர்களின் நலனை மனதில் வைத்து சரியான இடத்தைத் தேடி வருகிறோம். நீதிமன்றத்தில் நாங்கள் கொடுத்த உறுதியின்படி செயல்படுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latha Rajinikanth has clarified that she has paid all the rent for Ashram School

ஒட்டி ஒட்டி நானும் வரேன்..; இணையத்தை சிதறடிக்கும் ‘சியான்கள்’ சிங்கிள்..

ஒட்டி ஒட்டி நானும் வரேன்..; இணையத்தை சிதறடிக்கும் ‘சியான்கள்’ சிங்கிள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiyangalதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தோடு உருவாகிறது.

அந்த வகையில் தற்போது மாறுபட்ட கதை களத்தோடு கரிகாலன் அவர்களின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘சியான்கள்’.

இந்த படத்தை வைகறை பாலன் என்பவர் இயக்கியுள்ளார்.

முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒட்டி ஒட்டி நானும் வரேன் என்ற பாடலை கே கே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் ராஜேஷ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த காதல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சியான்கள் திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Otti Otti Naanum Vaaren from Chiyaangal goes viral

இந்திய மொழிகளில் காம தேவதை படம்..; கவர்ச்சி பாம் ‘ஷகிலா’ வாழ்க்கையும் திரைப்படமானது

இந்திய மொழிகளில் காம தேவதை படம்..; கவர்ச்சி பாம் ‘ஷகிலா’ வாழ்க்கையும் திரைப்படமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shakeela “ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம்.

1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா.

உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது.

அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது.

இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது. இப்படம் நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. மலையாள பதிப்பு கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.

இப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள்.

ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். பிரகாஷ் பழனி இப்படத்தை வழங்குகிறார். சந்தீப் மலானி அஸோசியேட் புரடியூசராக பணிபுரிந்துள்ளார். சந்தோஷ் ராய் பதாஜே ஒலிப்பதிவு செய்ய, பல்லு சலூஜா படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஷம்மியின் Magic Cinema, Innovative Film Academy மற்றும் பழனியின் International Media Works நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகிறது.

கேரளா பகுதிகள் போன்று இருக்கவேண்டுமென கர்நாடகாவின் தீர்த்தஹல்லி பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி பெங்களூருவின் Innovative Film City யில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தில் மூன்று பாடல்கள் அமைந்துள்ளது. டைட்டில் பாடல் பாலிவுட் இசையமைப்பாளர் Meet Bros இசையமைத்துள்ளார். மற்ற இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் வீர் சமர்த் இசையமைத்துள்ளார்.

படத்தில் கையாளப்பட்டுள்ள தீரமான மொழியான்மைக்காவும், மிக கனமான காட்சிகளுக்காகவும் படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மொழிகளிலும் சென்சார் ஃபோர்ட் கமிட்டியால் இப்படம் பாராட்டு பெற்றுள்ளது. அவர்கள் இப்படத்தின் கருத்துக்களை பாரட்டி படத்திற்கு தங்களின் நன்மதிப்பை வழங்கியுள்ளனர்.

இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.

Zee Music நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது. UFO Moviez இப்படத்தை வெளியிடுகின்றனர்.

The rise of Actress Shakeela told in a cinematic way

More Articles
Follows