நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் ஒளிபரப்பப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே சித்ரா.

இவர் நேற்று அதிகாலை திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இது தற்கொலை தான் என போலீசார் கூறினாலும் இது கொலையா தற்கொலையா என்னும் விவாதம் நெட்டிசன்கள் மத்தியில் நடந்து வருகிறது.

விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

எங்களால் இனி யாரையும் முல்லை கேரக்டரில் பார்க்கவே முடியாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த சீரியலில் அவருடைய நெருங்கிய தோழியான சரண்யா துராடி என்பவர் நடிக்கப்போகிறார் என கூறப்படுகின்றது.

மரணத்திற்கு முன்பு கடைசியாக சித்ரா அவர்கள் சரண்யா உடன் தான் வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

saranya turadi

Saranya Turadi to play mullai character in pandian stores

கன்னத்தில் இருந்த நகக்கீறல் சித்ராவுடையது தான்..; அவரது மரணம் தற்கொலை தான்..; போலீசார் தகவல்

கன்னத்தில் இருந்த நகக்கீறல் சித்ராவுடையது தான்..; அவரது மரணம் தற்கொலை தான்..; போலீசார் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chitra suicide‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை புகழ் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது கணவர் ஹேமந்த் உடனிருந்துள்ளார்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது அம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

சித்ராவின் உடலை 2 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..

இந்த பிரேத பரிசோதனையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என உறுதியாகியுள்ளது.

அவரது கன்னத்தில் இருந்த நகக்கீரல் சித்ராவின் நகக்கீறல் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம்? என போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Police confirms Chitra’s cause of death

விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

விபச்சார வழக்கில் ‘டிக் டாக்’ சூர்யா உள்ளிட்ட 12 பெண்கள் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tik tok rowdy baby suriyaடிக் டாக் மொபைல் ஆப்பை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளது.

ஆனால் இந்த தடை வருவதற்கு முன்பே டிக் டாக் மூலம் பிரபலமானவர் சூர்யா.

இவரை இவரது ரசிகர்கள் ரவுடி பேபி எனவும் அழைக்கின்றனர்.

தற்போது டிக் டாக் செயலிக்கு தடை உள்ளதால் அவர் தன் பொழுதுபோக்குக்காக தொழிலை மாற்றி விபச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

சூர்யா என்ற இந்த சுபுலட்சுமி புரோக்கர் மூலமாக விபச்சார தொழில் செய்து வந்துள்ளார்.

திருச்சி மாவட்ட பகுதியில் ஸ்பா சென்டர்களில் நடந்த சோதனையின் போது அவர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் டிக்டாக் ரவுடி பேபி சூர்யா உட்பட 12 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tik Tok fame Rowdy Baby Suriya arrested for prostitution in Trichy?

போயஸ் கார்டன் வாசிகள் அவதி.. முடிவை மாற்றிய ரஜினி..; போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

போயஸ் கார்டன் வாசிகள் அவதி.. முடிவை மாற்றிய ரஜினி..; போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthவிரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது கட்சிப்பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி.

கட்சி விவரங்களை 2020 டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

போயஸ்கார்டன் இல்லம் வரும் ரசிகர்களின் வருகை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ரஜினியுடைய போயஸ் கார்டன் இல்லம் & தெருவிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

12-15 தமிழக போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினியின் இல்லம் செல்லும் வழியில் இரு இடங்களில் தடுப்புகள் அமைத்து, ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதனால் போயஸ் கார்டனில் வாசிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவர்கள் பாதிக்கப்படுவது ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு, காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

TN Police withdraw security to Rajini’s house after his request

‘உறியடி’ உதவி இயக்குனர் அபாஸ் இயக்கத்தில் ஹீரோவாகும் ‘உறியடி’ விஜயகுமார்

‘உறியடி’ உதவி இயக்குனர் அபாஸ் இயக்கத்தில் ஹீரோவாகும் ‘உறியடி’ விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Uriyadi Vijay Kumarஇயக்குநர், நடிகர் விஜய்குமார் ‘உறியடி’ மற்றும் ‘உறியடி 2’ என இரண்டு துணிச்சலான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர்.

சமீபத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதியிருந்தார்.

தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தை ‘உறியடி’ 2 பாகங்களிலும் விஜய்குமாரின் உதவி இயக்குநராக இருந்த அபாஸ் இயக்குகிறார்.

ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸின் முதல் முழுநீள திரைப்படத் தயாரிப்பு இது. முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன.

மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு செல்வதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

Uriyadi Vijay Kumar’s next is with debutant film maker Abbas

JUST IN கமல் பட ஸ்டைலை காப்பியடித்து விஜய் பட அறிவிப்பு. ‘தளபதி 65’ இயக்குனர் & இசையமைப்பாளர் யார்.?

JUST IN கமல் பட ஸ்டைலை காப்பியடித்து விஜய் பட அறிவிப்பு. ‘தளபதி 65’ இயக்குனர் & இசையமைப்பாளர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் அடுத்தாண்டு 2021 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவுள்ள தளபதி 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதலில் ஏஆர் முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில் பின்னர் விலகினார்.

எனவே விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால் கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதாக தகவல்கள் வந்தன என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அனிருத் இசையமைக்கிறார் என கூறப்பட்டது.

அதன்படி இதே கூட்டணியின் படி சற்றுமுன் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ பட அறிவிப்பு வெளியானபோது டைட்டில் மோசன் போஸ்டர் செம ஸ்டைலிஷாக ரிலீசானது.

அதே பாணியை விஜய் 65 படக்குழுவும் காப்பியடித்துள்ளது.

இதற்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இது போல மிக பிரம்மாண்டமான டைட்டில் வீடியோவை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 65 motion poster copied from Vikram title teaser?

thalapathy 65 images

More Articles
Follows