நக்மா ஆன்ட்டி சொல்லக்கூடாது.. சென்சார் விதிகளை மாத்தணும்.. நான் ரஜினி ரசிகன் – கேசவ் தெபுர்

நக்மா ஆன்ட்டி சொல்லக்கூடாது.. சென்சார் விதிகளை மாத்தணும்.. நான் ரஜினி ரசிகன் – கேசவ் தெபுர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.
கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்,இசை ஜி. கே.வி.

9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி
இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி பேசும் போது,

“தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே .ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும் , தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம்.

இப்பொழுது கத்தி , வெட்டு குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் படியாக இருக்கும்.

படத்தை எடுக்கும் போது நாங்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். இதன் படப்பிடிப்பு வேலூரில் நடந்த போது போலீஸ் தொல்லைகள் தினம் தினம் வந்து கொண்டே இருந்தன. சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர், கமிஷனர் வரை எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக ஆதரவாக காட்பாடி ராஜன் அவர்கள் இருந்து வந்திருக்கிறார்.

அதை என்னால் மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.

படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசும்போது,

“நான் இங்கே வரும்போது என்னிடம் இந்தத் தலைப்பை பார்த்து படம் கிளுகிளுப்பாக இருக்குமா என்று கேட்டார்கள். நீங்கள் நினைப்பது போல் கிளுகிளுப்பாக இருக்காது.

ஆனால் சந்தோஷமான கிளுகிளுப்பாக இருக்கும் என்றேன் .நான் சிறு வயது முதல் தலைவர் ரஜினி அவர்களின் ரசிகன். அவர் படங்களில் நடனக் கலைஞராகவும் நடன உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து இருக்கிறேன்.

‘ சந்திரமுகி’ படத்தில் இருந்து அந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டேன் .சரசு என்றால் மோகம் மட்டுமல்ல சந்தோஷம் என்றும் குறிக்கும்.

இந்தத் தலைப்பு பற்றி நான் தயங்கிய போது கூட, தயாரிப்பாளர்தான் உறுதியாக இருந்தார்கள், இதே தலைப்பை மாற்றக்கூடாது என்று.

இந்தப் படத்தை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் எடுத்தோம் .தினசரி ஒரு பிரச்சினை வரும். அப்படி 45 நாட்களும் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது . பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது தான் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும். ஆனால் உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது எங்களுக்கு அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள் .

இப்படி முதல் நாள் 300 நடனக் கலைஞர்களுடன் நாங்கள் தயாராகி விட்டோம் .அனுமதி வேண்டும் என்று எங்களைத் தொந்தரவு கொடுத்தார்கள். இப்படிப் படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களிலும் தொல்லைகள் தொடர்ந்தன.
ஆனால் அப்போதெல்லாம் தயாரிப்பாளர் தைரியமாக அதை எதிர்கொண்டு சமாளித்தார்.

படத்தில் 60 கட்கள் சென்சாரில் கொடுத்தார்கள். அதனால் என்னை “60 கட் டைரக்டர் “என்று கூறுகிறார்கள்.

நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள்.

படத்திற்கு நாங்கள் யூ சர்டிபிகேட் கேட்கவில்லை.ஏ சர்டிபிகேட் தான் வேண்டும் என்று கேட்கிறோம். இது அடல்ட் படம் என்று தான் கூறினோம்.

ஆனால் சென்சாரில் எதுவுமே முடியாது என்று கைவிட்டு விட்டார்கள். எதுவுமே தர முடியாது என்றார்கள்.நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டி செல்லுங்கள் .இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார்கள்.

ரிவைசிங் கமிட்டி சென்றோம் அங்கே நடிகை கௌதமி தான் தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்ல போகிறீர்கள் என்றார்.லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன அப்படி நடக்க கூடாது என்று நாங்கள் சொல்கிறோம் என்றோம்.

பல மணி நேரம் காக்க வைத்தார்கள்.
பிறகு நீங்கள் எதை வெட்ட வேண்டுமோ அதை தாராளமாக வெட்டிக் கொள்ளுங்கள் .ஆனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகள் கேளுங்கள் விளக்கம் சொல்கிறோம் என்றேன்.
அவர்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை. நான்கு பக்கம் அளவில் குறிப்பிட்டு நீக்கச் சொன்னார்கள்.

நக்மா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள் .லலிதா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள். அந்தப் பெயர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்ல சாதாரணமாக இருக்கக்கூடியது தான். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு அவமதித்தார்கள்.

விளக்கிப் பேசும்போது
கையைக் காட்டிப் பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுங்கள் என்றார்கள். கதாநாயகன் கதாநாயகியை மேலே பார்க்கிறான் அந்தக் காட்சியைத் தூக்குங்கள் என்றார்கள். நாங்கள் விளக்கம் சொன்னால் எதுவும் பேசக்கூடாது வெளியே போங்கள் என்று சொன்னார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கே எங்களை நடத்தினார்கள் .

சென்சார் விதிகள் எல்லாம் 1952 -ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன.

ஆனால் அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள் .5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார்விதிகளை மாற்ற வேண்டும் .அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும். இவர்கள் அப்படிப் பெயர்களை எடுக்கச் சொன்னதால் டப்பிங் எல்லாம் மாற்ற வேண்டி இருந்ததால் தயாரிப்பாளருக்கு ஆறு லட்சம் செலவானது. ஒரு புதிய சிறிய தயாரிப்பாளருக்கு இதெல்லாம் அநியாய செலவுதான் .

ஆன்ட்டி என்றால் தப்பு என்கிறார்கள். குள்ளன் என்று கூறக்கூடாது என்கிறார்கள். நாங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் ஏ சர்டிபிகேட் கேட்கிறோம்.யூ ஏ எல்லாம் நாங்கள் கேட்கவில்லை .

நாங்கள் பெண்களைத் தவறாகத் சித்தரிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆறு நடிகைகள் நடித்திருக்க முடியுமா?
என்றோம் அவர்கள் ஆனால் ஒப்புக்கொள்ளவில்லை.

தெருக்கூத்துகளில் நாடகங்களில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்களா? ஆனால் திரைப்படத்தில் இருந்தால் பெரிது படுத்துகிறார்கள் .அதில் இல்லாததையா நாங்கள் கூறுகிறோம்? இன்று சினிமா வெப் சீரிஸ் எல்லாம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இப்படத்தை தமிழ் தெலுங்கு என்று நேரடிப் படம் போலவே எடுத்துள்ளோம் .இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு ஐந்தாறு ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் அலைய வேண்டி உள்ளது. இப்படி சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் நினைத்து நான் கண்கலங்கி அழுதிருக்கிறேன். நம்மை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் காப்பாற்றுவது நமது கடமை அல்லவா?

தயாரிப்பாளர் தந்தை போன்றவர் .அப்படித் தந்தை ஸ்தானத்தில் உள்ளவருக்கு நான் துரோகம் செய்ய முடியுமா ?ஏமாற்ற முடியுமா?

படத்தில் நாங்கள் கருத்து சொல்லவில்லை .ஒரு அடல்ட் காமெடி படம்தான் எடுத்துள்ளோம்” என்றார்.

Nagma and Aunty words banned in censor rules says director Keshav

அழகிய லைலா.. மீண்டு வரும் அழகிய புயலாய்.; ரீ-என்ட்ரீயாகும் ரம்பா

அழகிய லைலா.. மீண்டு வரும் அழகிய புயலாய்.; ரீ-என்ட்ரீயாகும் ரம்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கியவர் நட்சத்திர நடிகை ரம்பா.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தன் நடிப்பாலும் தொடை அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர் ரம்பா.

இவர் திருமணமாகி தற்போது கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.

அவரோடு வந்த சிம்ரன், லைலா, ஜோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான ஆர்வம் மீண்டும் வந்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்.

திரையுலகில் 20 வருடங்கள் 100 படங்களுக்குமேல் நடித்து திரையுலகின் நட்சத்திர நாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரம்பா. 90 கிட்ஸ்களின் உறக்கத்தை கெடுத்தவர், முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவுள்ளார்.

தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா, 1993 ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்திய முழுதும் நட்சத்திரமாக ஜொலித்தார்.

20 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவுத்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நடிகை ரம்பா கூறுகையில்…

“திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன்.

திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன்.

இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினிமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விசயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில், நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்றார்.

Actress Rambha re entry in Cinema like Simran and Jothika

‘லியோ’ வெற்றி விழாவுக்கு ஆதார் கார்டு அவசியம்.; கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.?

‘லியோ’ வெற்றி விழாவுக்கு ஆதார் கார்டு அவசியம்.; கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.

போலியான டிக்கெட் அதிகமாக விற்கப்பட்டதால் இந்த விழா ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘லியோ’ படம் உலக அளவில் 400+ கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால் இதன் வெற்றி விழாவை கொண்டாட படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் முடிவு செய்துள்ளார்.

அதன்படி நாளை நவம்பர் 1ம் தேதி மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழா நடைபெற உள்ளது.

ஏற்கனவே பல சர்ச்சைகளால் லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதால் தற்போது கடும் நிபந்தனைகளை படக்குழுவும் காவல் துறையும் விதித்துள்ளது.

அதன்படி மொத்தம் 5000 + 500 நபர்களுக்கு மட்டுமே விழா அரங்கில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் என்ட்ரீ பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் கேட் எண் 6 வழியாக உள்ளே வர வேண்டும். 4 மணிக்கு மேல் தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் ரசிகர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அரங்கிற்குள்ளே வண்டிகள் நிறுத்த போதுமான இட வசதி உள்ளது. வண்டிகளை வெளியே நிறுத்தினால் அந்த வண்டிகள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் என்ட்ரி பாஸ் உடன் ஒவ்வொரு ரசிகரும் ஆதார் அடையாள அட்டை ஜெராக்ஸ் காப்பியை எடுத்து வர வேண்டும் என ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் போதுமான பாதுகாப்புகளை தயாரிப்பு நிறுவனம் செய்திருக்க வேண்டும் என பல்வேறு அறிக்கைகளை காவல்துறையும் விதித்துள்ளது.

எத்தனையோ இசை & சினிமா விழாக்கள் தமிழகத்திலும் இந்தியாவில் நடைபெற்று உள்ளது. ஆனால் ரசிகர்கள் ஆதார் கார்டுடன் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Aadhar card must for Leo success event entry

ரஜினிக்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனரை தூக்கிய கமல்.; தனுஷுடன் கூட்டணி

ரஜினிக்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனரை தூக்கிய கமல்.; தனுஷுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் திரைக்கு வர தயாராகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.

இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 50வது படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. தனுஷே இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார் தனுஷ். இந்தப் படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தப் படத்தை ‘ஜெயிலர்’ மெகா வெற்றிக்குப் பிறகு நெல்சன் இயக்க உள்ளார்.

நெல்சனின் ராசியான இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம்.. சிலம்பரசன் நடிப்பில் ஒரு படம் என இரண்டு படங்களை தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

தற்போது தனுஷ் படத்தையும் தயாரிக்க உள்ளார் குறிப்பிடத்தக்கது.

Kamal Dhanush Nelson Anirudh combo project

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் ‘ஹரா’.; அனுமோலை மோகனுக்கு ஜோடியாக்கிய விஜய் ஸ்ரீஜி

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் ‘ஹரா’.; அனுமோலை மோகனுக்கு ஜோடியாக்கிய விஜய் ஸ்ரீஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

15 வருடங்களுக்கு பிறகு நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார்.

இதன் காரணமாக, ‘ஹரா’ படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் ‘ஹரா’ வெளியாகும் என்று கூறினார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிக்கிறார்.

‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

Anumol opposite Mohan in Haraa directed by Vijay Sri

ஒரே நாளில் கமல் ரசிகர்களுக்கு 3 விருந்தளிக்கும் மணிரத்னம் & ஷங்கர்

ஒரே நாளில் கமல் ரசிகர்களுக்கு 3 விருந்தளிக்கும் மணிரத்னம் & ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

இதனை முன்னிட்டு நவம்பர் 3ஆம் தேதி கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கின்றனர் அவரது பட இயக்குனர்கள்.

கமல் நடிப்பில் விரைவில் திரைக்கு வர தயாராகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.

லைக்கா தயாரித்துள்ள இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் 3ம் தேதி ‘இந்தியன்2’ படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 36 ஆண்டுகளுக்கு முன் கமல் – மணிரத்னம் இணைந்து பணியாற்றிய ‘நாயகன்’ படமும் இதே தேதியில் (நவம்பர் 3ல்) ரீ-ரிலீஸ் ஆகிறது.

கமலின் மற்றொரு படமான #KH234 கமல் 234 ஆவது படம் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசன் உதயநிதி மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோவும் நவம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது.

ஆக ஒரே தினத்தில் கமல் ரசிகர்களுக்கு 3 மெகா விருந்து கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal fans will have triple treat on 3rd November

More Articles
Follows