தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேசவ் தெபூர் இயக்கத்தில் ஆறு நாயகிகள் அசத்தலாக நடித்துள்ள படம் ‘ரா ரா சரசுக்கு ரா ரா’.
இந்த படத்தின் அறிமுக விழா கூட்டத்தில் இதே படத்தில் நடித்துள்ள நடிகர் கே. ராஜன் பேசியதாவது…
“இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை.அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் . அந்த நாலு பேருக்கு நன்றி.
புதிதாக இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும். இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 முதல் 300 படங்கள் எடுத்து வெளியிட முடியாமல் உள்ளன.
ஏனென்றால் கியூபுக்கு 15 முதல் 20 லட்சம் கட்ட வேண்டும் .விளம்பர செலவுகள் 50 லட்சம் ஆகும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவர்கள் சொந்தப் பணத்தில் படம் எடுத்திருக்கிறார்கள் .சிறிய தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படம் எடுக்கிறார்கள்.
இந்தப் படத்தை வெளியிடும் விநியோகஸ்தரும் தைரியமாக நவம்பர் 3 ஆம் தேதி வெளியீடு என்று அறிவிப்பு செய்துள்ளார்கள்.
இது ஒரு அடல்ட் படம் இது இப்படித்தான் இருக்கும். இதை ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். இதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதற்காக ஒரு படம் எடுப்பது தவறில்லை .பல கோடி ரூபாய் வசூல் செய்யும் பெரிய ஹீரோ படத்தில் நடித்த நடிகையை இதைவிட மோசமாக காட்டியுள்ளார்கள்.
இயக்குநர் கேசவை நான் பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.
அவர் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்?
இந்தக் கதையைப் பார்த்து இப்படி நாட்டில் நடக்குமா? என்று கேட்பார்கள் .இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுங்கள் நம் பண்பாட்டை மறந்து விடக்கூடாது என்கிறார்.
இப்போது பெரிய கதாநாயக நடிகர்களே மோசமாக வசனம் பேசுகிறார்கள். தலை முடியைக் காட்டி வசனம் பேசுகிறார்கள்.
இப்போது வருகிற படங்கள் எல்லாமே பழிவாங்கும் கதைகள். எதற்கெடுத்தாலும் துப்பாக்கி
எதற்கெடுத்தாலும்
கத்தி என்று உள்ளது. சமூகத்தில் 18 வயது பையன் கத்தி தூக்கி கொண்டு திரிகிறான். இப்போது இருக்கிற படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது .
பெரிய கதாநாயகர்களை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இப்படி அதிக வன்முறைகள் வெட்டு குத்து என்று நடிப்பது சிகரெட் புகைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பெரிய கதாநாயகன் செய்யும்போது அதைப் பின்பற்றி ஒரு கூட்டமும் அதையே செய்யும் .
அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம் .அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25ஆயிரம் ரூபாய் லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது.இதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.
நான் 2004 -ல் இதே தலைப்பை என் படத்திற்கு வைத்தேன். ஆனால் அப்போது எதிர்ப்பு இருந்ததால் நான் பின் வாங்கி, விட்டு விட்டேன். ஆனால் ஆனால் இந்த தயாரிப்பாளர் போராடி அதே தலைப்பை வாங்கி இருக்கிறார் .அவருக்கு என் பாராட்டுக்கள்.
இப்போது கூட இருப்பவர்களே உதவியாக இருப்பதில்லை. அவர்களே பெரிய பிரச்சினையாக இருக்கிறார்கள். நிலைமை மாறும் போது எல்லாவற்றையும் போட்டு விட்டு ஓடி விடுகிறார்கள்.
இதுதான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இயக்குநர் தயாரிப்பாளர் உடன் இருப்பதும் அவரது நிலைமை புரிந்திருப்பதும் பாராட்டுக்குரியது.
சினிமா விழாக்களில் போர்த்தப்படும் இந்தப் பொன்னாடைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதனால் ராஜஸ்தான் காரர்களுக்குத்தான் வியாபாரம் நடக்கும்.அந்தப் பொன்னாடையால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.அவை பயனற்றவை எதற்கும் பயன்படாது.
நமது தமிழ்நாட்டின் நெசவாளிகள் பயன்பெறும் வகையில் கைத்தறி ஆடை வாங்கி போர்த்திடுங்கள். அதன்மூலம் அவர்களை வாழ வையுங்கள்.
இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்”
இவ்வாறு கே. ராஜன் பேசினார்.
விழாவில் விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன்,
படத்தின் இசை அமைப்பாளர் ஜி கே வி , எழுத்தாளர் பொன். முருகன், கலை இயக்குநர் ராமச்சந்திரன், சண்டை இயக்குநர் ராஜாசாமி,பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம், படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா, படக் குழுவினருக்கு நெருக்கமான நண்பர்கள் வேலூர் வெங்கடேசன், அண்ணாமலை, சின்னையா, தாமு, காளிராஜன், காத்து கருப்பு கலை, தயாரிப்பாளர் சுப்பிரமணியன் மலைச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்
9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Police bribe at outdoor shooting Actor K Rajan open talk