ரஜினிகாந்துடன் இணையும் காமெடியன் முனீஷ்காந்த்

Rajinikanth and munishkanthகாலா படம் வெளியான அன்றே கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள டேராடூன் சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் சூட்டிங் அங்கு 30 நாட்கள் நடைபெறவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

தற்போதே இந்த பாடல்கள் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது காமெடி நடிகர் முனிஷ்காந்தும் இணைந்துள்ளார்.

இவர் நடித்த முண்டாசுபட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் இவர் ரஜினிகாந்த் ரசிகராக சினிமா வாய்ப்புக்காக முனீஷ்காந்த் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அன்று முதல் இவருடைய ஒரிஜினல் பெயரான ‘ராமதாஸ்’ என்ற பெயரில் யாரும் இவரை அழைப்பது இல்லையாம்.

Overall Rating : Not available

Latest Post