சிம்பு-கெளதம் மேனன் பேச்சுவார்த்தை; இனி தள்ளிப் போகாதே…

சிம்பு-கெளதம் மேனன் பேச்சுவார்த்தை; இனி தள்ளிப் போகாதே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and gautam menon stillsகெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ‘ஒன்றாக என்டர்டெயின்மன்ட்’ சார்பாக கெளதம் மேனன் தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில், திடீரென கெளதம் மேனன் – சிம்பு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் பெரும் ஹிட்டடித்த பாடலான தள்ளிப் போகாதே பாடல் இல்லாமல் படம் வெளியாகும் என செய்திகள் வந்தன.

இந்நிலையில் இருவரும் பேசி சமாதானம் ஆனதை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.

எனவே ‘தள்ளிப் போகாதே’ பாடல் படமாக்கப்பட்டு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க உள்ளனர்.

கபாலியால் மோகன்லாலுக்கு எத்தனை கோடி லாபம்.?

கபாலியால் மோகன்லாலுக்கு எத்தனை கோடி லாபம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohanlal got profit from Kabali theatrical rights in Keralaரஜினி நடித்த கபாலிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாக படத்தின் கேரள உரிமைக்கு பலத்த போட்டி எழுந்தது.

எனவே ரூ. 7.8 கோடி கொடுத்து மோகன்லால் இப்படத்தை வாங்கினார்.

கேரளாவில் உள்ள 400 தியேட்டர்களில் 306 தியேட்டர்களில் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்டார்.

கபாலி வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 10.5 கோடியை வசூல் செய்து கொடுத்திருக்கிறதாம்.

மேலும் ‘ஜனதா காரேஜ்’ என்ற தெலுங்கு படத்தில் ஜுனியர் என்டிஆருடன் நடித்திருக்கும் மோகன்லால் அப்படத்தின் சம்பளத்தின் ஒரு பகுதியாக விநியோக உரிமையையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, சூர்யாவை அடுத்து விஜய், அதர்வாவுடன் இணையும் ரஞ்சித்!

ரஜினி, சூர்யாவை அடுத்து விஜய், அதர்வாவுடன் இணையும் ரஞ்சித்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atharvaa ranjithகபாலி படம் நன்றாக கல்லா கட்டி வருவதால் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தின் க்ளைமாக்ஸில் அடுத்த பாகத்தின் தொடர்ச்சி இருந்த நிலையில் கபாலி 2 உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித். வடசென்னை பாக்ஸர்களை பற்றி இப்படம் தயாராகவுள்ளது.

இதற்கிடையில் தனது உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறாராம் பா. ரஞ்சித்.
இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

இதனிடையில் விஜய்யை சந்தித்து அவரிடமும் ஒரு கதையை சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.

தற்போது விஜய்யின் க்ரீன் சிக்னலுக்காக அறிவிப்பு வெயிட்டிங்.

மீண்டும் ரஜினி-கமல் ரசிகர்கள் மோதல் உருவாகுமா.?

மீண்டும் ரஜினி-கமல் ரசிகர்கள் மோதல் உருவாகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and kamal action20 வருடங்களுக்கு முன்பு ரஜினி-கமல் ரசிகர்களின் மோதல் பட்டி முதல் சிட்டி வரை பரவி இருந்தது.

சமீபகாலமாக ரஜினி-கமல் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது இல்லை என்பதால் மோதலுக்கான சூழலும் குறைந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் அந்த சூழ்நிலை உருவாகிறதா? என்கிற அளவுக்கு சமீபத்திய ஒரு படத்தின் டீசர் இடம் பிடித்துள்ளது.

எங்கிட்ட மோதாதே படத்தில் நட்டி ரஜினி ரசிகராகவும் மற்றும் ராஜாஜி கமல் ரசிகராகவும் நடித்துள்ளனர்.

இந்த டீசரில் ரஜினி, கமலை விட அவர்களது ரசிகர்களுக்கு பவர் அதிகம் என்ற வசனங்களும் இடம்பிடித்துள்ளது.

இப்படம் பார்க்கையில் இவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்களோ என்ற அச்சமும் கூடவே வளர்கிறது.

ராமு செல்லப்பா இயக்கியுள்ள இப்படத்தில் பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

செல்வராகவனை அடுத்து, கௌதம் மேனனுடன் சந்தானம்

செல்வராகவனை அடுத்து, கௌதம் மேனனுடன் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam comedyதில்லுக்கு துட்டு படத்தை தொடர்ந்து, சர்வம் சுந்தரம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.

இதனிடையில் ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

இதன்பின்னர் மீண்டும் ஹீரோவாக செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில நடிக்கும் போதே கௌதம் மேனன் இயக்கும் ஒரு குறுகிய கால படத்திலும் நாயகனாக நடிக்கிறாராம்.

காமெடியான ஜொலித்த சந்தானம் தற்போது முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிப்பது திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

60 நாட்களில் விஜய்சேதுபதியின் 3 படங்கள்; சூப்பர் ஜி..!

60 நாட்களில் விஜய்சேதுபதியின் 3 படங்கள்; சூப்பர் ஜி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi sitllsஇரண்டு வருடங்களுக்கு விஜய்சேதுபதியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி விறுவிறுப்பாக முடித்து கொடுத்து வருகிறார்.

வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி சீனுராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள தர்மதுரை படம் ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து செப்டம்பர் இரண்டாம் வாரத்தில், மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆண்டவன் கட்டளை படம் வெளியாகிறது.

அக்டோபர் 7ஆம் தேதி, ரத்னசிவா இயக்கியுள்ள றெக்க படம் ரிலீஸ் ஆகிறது.

கிட்டதட்ட 60 நாட்களில் விஜய்சேதுபதியின் 3 படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows