அப்பா நீங்க கரெக்டா நடிங்க; ஜெயம்ரவிக்கு சொல்லிக் கொடுத்த ஆரவ்

Jayam ravi with his sonசக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜீனன், ரமேஷ்திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டிக் டிக் டிக்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம்ரவி பேசியதாவது…

‘முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை.

இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். பிறகு நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அதே போல் இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் நம்பிக்கை வந்தது. எங்கள் நடிப்பை அது எளிதாக்கியது.

இதில் என் மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் ஒரு நாள் இயக்குநர் இது போல் ஒரு கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன். ம் நடிக்கலாம் என்றான். அதற்கு டான்ஸ் தெரியவேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான் அவனுடைய இந்த ஆட்டிடியுட் படக்குழுவினரை கவர்ந்தது.

எப்போது ஒரு மணி நேரம் கூட ஒரு இடத்தில் உட்கார மாட்டான். ஆனால் எல்லோரும் நடிக்கும் காட்சியை மானிட்டரில் பார்த்துக் கொண்டே இருப்பான்.

ஒரு காட்சியில் நீங்கள் சரியா நடிக்கவில்லை. வசனம் மறந்து விட்டீர்கள் என்று கூறி இப்படி நடிங்க என்று எனக்கு கற்றுக் கொடுத்தான்’ என்றார்.

Overall Rating : Not available

Related News

தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குனர்களில்…
...Read More
நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தியாவின்…
...Read More
அன்பு மயில்சாமி நடித்துள்ள திரிபுரம், தயாரிப்பாளர்…
...Read More

Latest Post