எங்க படத்த சவுண்ட் இல்லாம ரிலீஸ் செய்யட்டுமா.? கார்த்திக் சுப்பராஜீக்கு டிக்டிக்டிக் தயாரிப்பாளர் கேள்வி

எங்க படத்த சவுண்ட் இல்லாம ரிலீஸ் செய்யட்டுமா.? கார்த்திக் சுப்பராஜீக்கு டிக்டிக்டிக் தயாரிப்பாளர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shall i mute sound and release Tik Tik Tik movie asks Producer to Karthik Subbarajவசனங்களே இல்லாமல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மெர்குரி படத்தை இயக்கி தயாரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால், கடந்த 35 நாட்களாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை.

இருந்தபோதிலும் தடையை மீறி மெர்குரி படத்தை ஏப்ரல் 13ல் வெளியிடுவேன் என அறிவித்தார் கார்த்திக் சுப்பராஜ்.

மேலும் மெர்க்குரி சைலண்ட் படம் என்பதாலும், படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் டிக் டிக் டிக் படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

“கார்த்திக்… இங்கே எல்லாரும் வியர்வையும் ரத்தத்தையும் கொடுத்துதான் படத்தை உருவாக்கி வருகிறோம்.

எங்கள் படத்திலும் 100க்கும் மேற்பட்டவர்கள் உழைத்துள்ளனர்.

நீங்கள் உங்கள் படத்தை சைலண்ட் (வசனங்கள் இல்லாத) படம் என்பதால் வெளியிடுவேன் என்கிறீர்கள்.

நாங்கள் எங்கள் படத்தில் சவுண்டை நிறுத்திவிட்டு சப்டைட்டில் போட்டு படத்தை வௌளியிடட்டுமா.?

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர் குலைக்கலாமா?

நாங்கள் எங்கள் படத்தின் ரிலீஸை இதுவரை 3 முறைக்கு மேல் தள்ளி வைத்துவிட்டோம். எங்கள் படமும் பணத்தால் தான் உருவாக்கப்பட்டது. காற்று மற்றும் தண்ணீரால் படத்தை உருவாக்கவில்லை” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

இவரின் ட்வீட்டை அடுத்து தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடியும் வரை மெர்குரி படத்தை வெளியிட மாட்டேன் என அறிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

ஆனால் சைலண்ட் படம் என்ற போர்வையில் மற்ற மாநிலங்களில் இப்படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shall i mute sound and release Tik Tik Tik movie asks Producer to Karthik Subbaraj

mercury and tik tik tik

ஏப்ரல்-13ல் மெர்குரி ரிலீஸ்; கார்த்திக் சுப்பராஜின் கருத்தால் கடுப்பான திரையுலகம்

ஏப்ரல்-13ல் மெர்குரி ரிலீஸ்; கார்த்திக் சுப்பராஜின் கருத்தால் கடுப்பான திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthik subbarajவசனங்களே இல்லாமல் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்குரி என்பதை பார்த்தோம்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்தத் தயாரிப்பில் இப்படத்தை எடுத்துள்ளார்.

கடந்த 36 நாட்களாக தமிழ்த் திரையுலகில் எந்தவொரு புதுப்படம் வெளியாகவில்லை.

ஆனால் தன் மெர்குரி திரைப்படம் ஏப்ரல் 13ல் ரிலீஸ் ஆகும் எனவும் அதன் ட்ரைலர் இன்று வெளியாகும் எனவும் அறிவித்திருந்தார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, அதன்பின்னர் ட்ரைலரை வெளியீட்டை தள்ளி வைப்பதாகவும் ஆனால் படம் ஏப்ரல் 13ல் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

.

மேலும் மெர்க்குரி சைலண்ட் படம் என்பதாலும், என் படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

இதற்கும் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சற்று முன்பு விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அதில்…ஸ்ட்ரைக் நிறைவடையும் வரை படத்தை வெளியிடமாட்டோம். ஆயிரக்கணக்கான திரையுலகினரைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இது வசனங்களே இல்லாத படம் என்பதால் எல்லா மொழியினரும் இதை பார்ப்பார்கள். எனவே தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இதை வெளியிட உள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இதனையும் அவர் அறிவித்துள்ளார்.

மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salman khan convicted Blackbuck poaching caseபாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரத்தை பார்ப்போம்.

கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு சினிமா சூட்டிங்கில் கலந்துக் கொண்டார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.

அப்போது பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக் என்ற அரிய வகை மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாகவும், அவருடன் நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

பல வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 2007-ம் வருடம் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது,

அதன்பின்னர் சல்மான்கான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனாலும் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.

கடந்த ஜனவரி மாதம், நடிகர்கள் தங்கள் தரப்பின் வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, சென்ற மாதம் 28 -ம் தேதி, இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு, தீர்ப்பு ஏப்ரல் 5- ம் தேதி வழங்கப்படும் என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை கூடிய ஜோத்பூர் நீதிமன்றத்தில், நடிகர்கள் அனைவரும் நேரில் வந்து ஆஜராகினர்.
அப்போது நடிகர் சல்மான்கான் குற்றவாளி என அறிவித்தார் நீதிபதி.

அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டையும் 10,000 ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகர் சயிஃப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Salman khan convicted Blackbuck poaching case

எங்க நாடு குப்பைத் தொட்டியா.? மக்களுக்காக சாட்டை வீசும் சதீஷ்

எங்க நாடு குப்பைத் தொட்டியா.? மக்களுக்காக சாட்டை வீசும் சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Comedy Actor Sathish tweet about Sterlite issueதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதுபோன்ற போராட்டங்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்தே இருக்கும். இந்த முறை மக்களே ஒன்றிணைந்து கடந்த 50 நாட்களாக போராடி வருகின்றனர்.

மக்களின் இந்த புரட்சி போராட்டத்திற்கு நடிகர்கள் ஜிவி. பிரகாஷ், விவேக், ஆரி, ஆகியோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ், தன் ட்விட்டரில் ஆவேசமாகவே இந்த பிரச்சினை குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்… “லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட்.

இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை அல்ல. இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா?” என பதிவிட்டுள்ளார்.

Tamil Comedy Actor Sathish tweet about Sterlite issue

ரசிகர்களுக்காக வெப்சைட் தொடங்கும் ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன்

ரசிகர்களுக்காக வெப்சைட் தொடங்கும் ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Shanmuga Pandian launching website for his fansகேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முக பாண்டியன் அறிமுகமானார்.

தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் திரைப்படத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார்.

திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.

இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார்.

தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி 2018 நாளை காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.

திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு.

நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.

Actor Shanmuga Pandian launching website for his fans

ரஜினியின் காலாவுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; சென்சாரில் நடந்தது என்ன.?

ரஜினியின் காலாவுக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்; சென்சாரில் நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Kaala cleared by the censor board with UA certificate

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இந்திய முழுவதும் பிரபலமானது.

விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் காலா தோனி வெர்சன் என்ற டீசர் வெளியானது.

விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்ட்டது.

இதற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. பெரும்பாலும் ரஜினி படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும் என்பதால் யு சான்றிதழே கிடைக்கும்.

ஆனால் காலாவில் நிறைய ஆக்சன் காட்சிகள் இருப்பதால் இதற்கு யு/ஏ கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் கிட்டதட்ட 14 காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில்… சில காட்சிகளை மட்டுமே வெட்டியுள்ளனர் என்றும் 14 காட்சிகள் வெட்டப்பட்டது என்பது பொய் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Rajinis Kaala cleared by the censor board with U/A certificate

More Articles
Follows