ஆகஸ்டில் ‘இறைவன்’ தரிசனம்.: ஜெயம்ரவி – அஹ்மத் அறிவிப்பு

ஆகஸ்டில் ‘இறைவன்’ தரிசனம்.: ஜெயம்ரவி – அஹ்மத் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இதையடுத்து ‘இறைவன்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

மேலும், இயக்குனர் அஹமத் ஏற்கனவே ‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

jayam ravi’s ‘iraivan’ release from augest 25

பாட்டிலுக்குள் மரம்.. அதற்குள் வாழ்க்கை.; பிரவீன் காந்தை வியக்க வைத்த ‘முகை’ படக்குழு

பாட்டிலுக்குள் மரம்.. அதற்குள் வாழ்க்கை.; பிரவீன் காந்தை வியக்க வைத்த ‘முகை’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முகை’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் *இயக்குநர் பிரவீன் காந்த் பேசியதாவது…*

பாட்டிலுக்குள் மரம் இருக்கிறது, அதற்குள் வாழ்க்கை இருக்கிறது என மேடையிலேயே நிரூபித்து விட்டார்கள். இங்கு பரிசாக தந்த மரத்தை எல்லோரும் பாதுகாப்போம். ‘முகை’ மிகை இல்லாத அருமையான படைப்பாக தெரிகிறது.

இந்தப்படம் நிச்சயம் அனைவரும் கவனிக்கும் படமாக இருக்கும். கன்னடத்தில் இருந்து தமிழ் படம் எடுக்க வந்திருக்கிறார்கள். தமிழகம் எல்லோரையும் ஏற்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும்.

*இயக்குநர் அஜித்குமார் பேசியதாவது…*

இது என் முதல் படம், என் குடும்பத்திற்கு என் நன்றி. என் தயாரிப்பாளருக்கு என்னுடைய மிகப்பெரும் நன்றி. நாயகி நடித்த ஒரு யூடியூப் விடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார்.

ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் குமார் சார் இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். என்னை நம்பி உழைத்த என் படக்குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும், நன்றி.

தயாரிப்பாளர் சந்தோஷ் பேசியதாவது…*

என் வாழ்வின் முதல் மேடை இது. நாங்கள் அழைத்து இங்கு வந்து வாழ்த்திய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை தயாரிக்க ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு என் நன்றி.

லாக்டவுனில் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அஜித்குமார் அப்போது தான் பழக்கமானார். சும்மா இருக்கிறோம் ஏதாவது கதை பண்ணு என்றேன். அவர் உருவாக்கிய கதை தான் இது. இந்தப்படத்திற்கு கிஷோர் குமார் பொருத்தமாக இருப்பார் என அவரை சந்தித்தோம். அவர் எங்கள் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்.

கிஷோர் குமார் சார் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. நாயகி எங்களை நம்பி வந்து நடித்து தந்தார். படம் நன்றாக வரவேண்டுமென தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் உழைத்துள்ளனர். இப்படத்திற்காக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.

Pravinkanth talks about Mugai movie team

விஜய்சேதுபதியை காண திரளும் மலேசியா இந்தோனேசியா தாய்லாந்து மக்கள்

விஜய்சேதுபதியை காண திரளும் மலேசியா இந்தோனேசியா தாய்லாந்து மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

பி. ஆறுமுக குமார்

படத்தொகுப்பு பணிகளை ஆர் கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ. கே. முத்து மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில், இயக்குநரான பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவர்கள் படப்பிடிப்பனை பார்வையிடுவதுடன், படத்தின் நாயகனான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும், விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த தெரியாமல் தவிக்கின்றனர்.

விஜய் சேதுபதி

Malaysia Indonesia Thailand peoples like to see Vijay Sethupathi

சின்ன ரூமுக்குள் படமெடுப்பது சவால்.. கிஷோருக்கு சவால் பிடிக்கும் – ஜெயப்பிரகாஷ்

சின்ன ரூமுக்குள் படமெடுப்பது சவால்.. கிஷோருக்கு சவால் பிடிக்கும் – ஜெயப்பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முகை’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் *நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது…*

ஒரு சின்ன ரூமுக்குள் படம் எடுப்பது மிக சவாலான விஷயம். கிஷோர் அவர்களுக்கு சவால்கள் பிடிக்கும். டிரெய்லர் மிக அருமையாக உள்ளது. திரில்லர் படமாக தெரிகிறது. படக்குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், நன்றி.

*நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ பேசியதாவது…*

இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். என் மீது நம்பிக்கை வைத்த குழுவினருக்கு நன்றி, படம் வந்ததும் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், நன்றி.

*தயாரிப்பாளர் ராஜா பேசியதாவது…*

‘முகை’ திரைப்படத்தின் டிரெய்லர் மிகவும் அருமையாக உள்ளது. இசை சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளர் சக்திக்கு வாழ்த்துகள். இது திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

Its not easy to take shoot at small rooms says Jayaprakash

ஹாலிவுட்டிற்கு இணையாக இன்றைய இயக்குனர்களின் படங்கள் – கே. ராஜன்

ஹாலிவுட்டிற்கு இணையாக இன்றைய இயக்குனர்களின் படங்கள் – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…*

‘முகை’ ஒரு அற்புதமான தமிழ் தலைப்பு. இயக்குநர் அஜித்குமார் அவர்களை வாழ்த்துகிறேன். நல்ல தமிழ் தலைப்புகள் இருக்கின்றன, தமிழில் தலைப்பு வையுங்கள் என்று நான் நீண்டகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மலரின் முன் பருவத்தை குறிக்கும் வகையில் இயக்குநர் தமிழில் தலைப்பு வைத்துள்ளார். இந்த படக்குழுவை வாழ்த்துகிறேன். இந்த காலத்தில் இயக்குநர்கள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக படத்தை உருவாக்குகிறார்கள். தயாரிப்பாளருக்கு கஷ்டம் தராமல் படத்தை உருவாக்குங்கள். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.

*தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியதாவது…*

ரிஷி என்னுடைய நண்பர். அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கனவுகளோடு இவர்கள் வந்துள்ளார்கள். திறமையான இயக்குநர் அஜித்குமார். சினிமாவின் எதிர்காலம் இளைஞர்களிடம் தான் இருக்கிறது. நிறைய புதுமுக தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருவது மகிழ்ச்சி. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

*ஒளிப்பதிவாளர் அர்ஜுன் பேசியதாவது…*

இயக்குநர் அஜித் மிகத்தெளிவான சிந்தனையுடன் இருந்தார், படத்தை பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அதனால் என் வேலை சுலபமாக இருந்தது. படம் நன்றாக இருக்கும், பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், நன்றி.

Young directors movies were upto Hollywood level says K Rajan

‘தேஜாவு’-க்குப் பிறகு அதே போல பண்ணக் கூடாதுன்னு இருந்தேன் – அரவிந்த்

‘தேஜாவு’-க்குப் பிறகு அதே போல பண்ணக் கூடாதுன்னு இருந்தேன் – அரவிந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் ‘தருணம்’.

இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது.

இந்த நிகழ்வில் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் பேசியதாவது..

இன்று காலையில் எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம்.

எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன்.

கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார். என் தேஜாவு பட எடிட்டர் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் நன்றி.

தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன்.

பல கதைகள் பேசினோம். இந்தக் கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும்.

I decided my next should not do like Dejavu says Aravind

நடிகர்கள்

கிஷன் தாஸ்
ஸ்மிருதி வெங்கட்
தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் இ சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
மக்கள் தொடர்பு – சதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM)
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் A, ஈடன் (ழென் ஸ்டுடியோஸ்)
இணை தயாரிப்பு – ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்

More Articles
Follows