டிக் டிக் டிக் மற்றும் செம படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிக் டிக் டிக் மற்றும் செம படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tik Tik Tik and Sema movie release date confirmedநேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’.

இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அவரின் 100வது படமாகும்.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார்.

நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த இப்படம் பல முறை தள்ளிப் போடப்பட்டது.

தற்போது வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதுபோல் பாண்டிராஜ் தயாரிப்பில் ஜீ.வி. பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள செம படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.

இப்படம் இந்த மே மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வள்ளிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் அர்த்தனா நாயகியாக நடிக்க, யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா ஆகியோரும் நடித்துள்ளனர்.

Tik Tik Tik and Sema movie release date confirmed

ஓடிபோய் கல்யாணம் கட்டிக்கலாமா.? த்ரிஷாவிடம் கேட்கும் ஆர்யா

ஓடிபோய் கல்யாணம் கட்டிக்கலாமா.? த்ரிஷாவிடம் கேட்கும் ஆர்யா

Aryas Birthday wishes to Actress Trishaநடிகை த்ரிஷா நேற்று தன் 35வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையொட்டி அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலகினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் த்ரிஷாவை வாழ்த்தும்போது குஞ்சுமணி என்று அன்பாக அழைத்து வாழ்த்தினார் ஆர்யா.

மேலும் இந்த வருடம் உங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு, நன்றி மை டியர் ஜாம் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் “நீங்க இரண்டு பேரும் ஏன் மேரேஜ் பண்ணக் கூடாது” என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் த்ரிஷாவிடம், “கல்யாணம் தான் கட்டிக்கிட்டி ஓடிப்போலமா…. இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா…” என கலாய்க்கும் வகையில் தெரிவித்துள்ளார் ஆர்யா.

Aryas Birthday wishes to Actress Trisha

விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் போராளி டைரக்டர்

விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் போராளி டைரக்டர்

Will director Ameer direct Vijay 63 movieஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை முடித்து விட்டு விஜய் அவர்கள் யார் இயக்கத்தில் நடிப்பார்? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தலைவா 2 படம் தயார் நிலையில் உள்ளதாக இயக்குனர் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும் மோகன்ராஜா, வெற்றிமாறன் ஆகியோரும் விஜய் படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யிடம் கண்ணபிரான் உள்ளிட்ட 2 கதைகளை சொல்லியிருக்கிறாராம் டைரக்டர் அமீர்.

விஜய்க்கும் அந்த கதைகள் பிடித்துவிட்டதாம். எனவே அமீரை தன் அடுத்த படத்தை இயக்க விஜய் அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அண்மைகாலமாக தமிழகத்தின் காவிரி நீர், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து போராடி வருகிறார் டைரக்டர் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.

Will director Ameer direct Vijay 63 movie

ameer

தன் மகள் ஸ்ருதிஹாசனை சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தார் சரிகா

தன் மகள் ஸ்ருதிஹாசனை சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தார் சரிகா

shruti haasan and sarikaநடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர்.

இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், கமலின் முன்னாள் மனைவியுமான நடிகை சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார்.

இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா உண்மையிலேயே சந்தோஷமடைந்தார்.

இயக்குநரின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார்.

அத்துடன் ஸ்ருதியை இது போன்ற தேசிய விருது பெற்ற இயக்குநர்களின் கைகளில் தன்னை ஒப்படைத்ததற்காகவும் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்’’ என்றனர்.

படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த தன் தாயாரை அங்கு பணியாற்றிய அனைவருக்கும் தனித்தனியாக அறிமுகப்படுத்தினார் ஸ்ருதிஹாசன்.

அதன்பின் தன் தாயாரின் எண்ணத்தை நன்றாக உணர்ந்திருந்த ஸ்ருதி, படத்தில் தான் ஏற்றிருக்கும் கேரக்டரைப் பற்றியும், இயக்குநர் தன்னிடம் வேலை வாங்கும் நுட்பத்தையும் அழகாக சரிகாவிடம் விவரித்தார்.

தன் மகளின் நேர்த்தியான விளக்கத்தைக் கேட்ட சரிகா, படபிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தன்னை உற்சாகப்படுத்தியதற்காக நடிகை ஸ்ருதியும் சந்தோஷத்துடனேயே வலம் வந்தார்.

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை கடையை திறந்து வைத்தார் ஸ்ரீ திவ்யா

காஞ்சிபுரத்தில் பட்டு சேலை கடையை திறந்து வைத்தார் ஸ்ரீ திவ்யா

actress sridivyaவருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

இவர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுக்காரத் தெருவில் புதியதாக ஸ்ரீ காஞ்சி பட்டு சேலை விற்பனை கடையை திறந்து வைத்துள்ளார்.

பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பல்வேறு விதமான புத்தம் புது ரக சேலைகளை பார்வையிட்டார்.

மேலும் திரைபடங்களில் மட்டுமே பார்த்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யாவை நேரில் கண்ட கடையின் பெண் ஊழியர்கள் மிக ஆர்வத்துடன் அவருடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

புதியதாக திறக்கப்பட்ட இந்த புதிய பட்டு சேலை கடையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புத்தம் புதிய இரகங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் அவர் அங்குள்ள அம்மன் கோயிலுக்கும் சென்று அம்மனை தரிசித்தார்.

கௌதம் கார்த்திக் உடன் நடிக்கும் ரெஜினாவுக்கு இதுதான் முதன்முறையாம்

கௌதம் கார்த்திக் உடன் நடிக்கும் ரெஜினாவுக்கு இதுதான் முதன்முறையாம்

Regina Cassandra done dubbing for first time in Mr Chandramouli tamil movieதிரு இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் இணைந்துள்ள படம் `மிஸ்டர்.சந்திரமௌலி’.

கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார்.

இதில் நாயகிகளாக ரெஜினா கசாண்ட்ரா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சதீஷ், மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

விரைவில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதால் இதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்திற்காக ரெஜினா அவரது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். ஒரு தமிழ் படத்திற்கு ரெஜினா டப்பிங் பேசியிருப்பது இதுதான் முதன்முறையாம்.

சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கும் இந்த படத்தை விரைவில் வெளியிட உள்ளனர்.

Regina Cassandra done dubbing for first time in Mr Chandramouli tamil movie

regina dub

More Articles
Follows