தன் மனைவிக்காக ஹீரோ ஆசையை கைவிட்ட இசையமைப்பாளர் இமான்

Why Music composer DImman not willing to act in moviesவிஜய் நடித்த தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான்.

தன் மெலோடி இசையால் தென்னிந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளவர் இவர்.

தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படத்தின் மூலம் தன் 100வது படத்தை நிறைவு செய்துள்ளார்.

இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது…

பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சின்னாலும் நான் சாதாரண டிசர்ட் போட்டுக் கொண்டு வந்துடுவேன்.

தற்போது 100 படங்களை கடந்துவிட்டேன். உங்கள சந்திக்க, என்னிடம் இருந்த பழைய கோட் சூட்டை துசி தட்டி போட்டு வந்துள்ளேன்.

எனக்கு இன்றுவரை ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி.

என் ரசிகர்களை நான் ரசிகர்கள் என்றே சொல்ல மாட்டேன். அவர்களை இசை காதலர்கள் என்றே சொல்வேன்.

தமிழன் படத்திற்கு முன்பே ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

ஆனால் அந்த படம் வரவில்லை. அதற்கு முன்பே முன்பே பல விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளேன்.

தற்போது கூட அந்த விளம்பரங்களை டிவிக்களில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

மாப்ள வர்றான் மாப்ள வர்றான் தங்க வண்டியில என்ற பாடல் குமரன் தங்க மாளிகை விளம்பரத்தில் ஒலிக்குதே அது என் பாடல்தான்.

என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் அழைத்தால் எனக்காக வந்து பாடிக் கொடுக்கும் ஸ்ரேயா கோஷலுக்கு நன்றி. அவர் என் தங்கை போன்றவர்.

நான் ஹீரோவாக நடிப்பேனா? என்று பலரும் கேட்கிறார்கள்.

என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தபோது பெண் வீட்டாரிடம் நான் ஒரு இசையமைப்பாளர் என்றுதான் அறிமுகம் செய்துக் கொண்டேன்.

எனவே அதை அடையாளத்துடன் இப்போதும் இருக்க விரும்புகிறேன். இசையமைப்பாளர் என்பதே போதும்” என பேசினார் டி. இமான்.

Why Music composer DImman not willing to act in movies

Overall Rating : Not available

Latest Post