ஹிந்தி நடிகரை கண்டு கொண்ட நயன்தாரா தமிழ் நடிகரை கண்டுக்கலையே

ஹிந்தி நடிகரை கண்டு கொண்ட நயன்தாரா தமிழ் நடிகரை கண்டுக்கலையே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்ட்டாகிராம் என்ற சமூக வலைதள பக்கத்தில் இணைந்தார் நடிகை நயன்தாரா.

அவர் இணைந்தது முதல் அவரது ரசிகர்கள் பலரும் அவரைப் பின் தொடர்ந்தனர். இந்த அக்கௌண்டில் தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் படத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும் இதோ வந்துட்டேன்னு சொல்லு என்ற ரஜினியின் கபாலி பட டயலாக்கையும் பகிர்ந்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘ஜவான்’ படத்தில் ட்ரெய்லரை பகிர்ந்தார் நயன்தாரா. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3 தேதி வெளியான ‘இறைவன்’ பட ட்ரைலரை நயன்தாரா பகிரவில்லை.

‘ஜவான்’ மற்றும் ‘இறைவன்’ ஆகிய இரு படங்களிலும் நாயகி நயன்தாரா தான்.

ஷாருக்கான் பட டிரைலரை பகிர்ந்த நயன்தாரா ஜெயம்ரவி பட ட்ரைலரை மட்டும் பகிராதது ஏன் என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Nayanthara support Hindi Actors not Tamil actors

அர்ஜுன் – ஐஸ்வர்யா இணைந்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ பட சூட்டிங் அப்டேட்

அர்ஜுன் – ஐஸ்வர்யா இணைந்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’.

இதில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தீயவர் குலைகள் நடுங்க

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுத,கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

தீயவர் குலைகள் நடுங்க

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் அடுத்தடுத்து இப்படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.‌

தீயவர் குலைகள் நடுங்க

First time Arjun and Ishwarya Rajesh join hands together

31 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தந்தை பாரதிராஜாவை இளையராஜாவுடன் இணைத்த மனோஜ்

31 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தந்தை பாரதிராஜாவை இளையராஜாவுடன் இணைத்த மனோஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘நாடோடி தென்றல்’ ஆகும்.

தற்போது ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா - இளையராஜா

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு மனோஜ் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குந‌ராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது, அதனையொட்டி அவரை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றார்.

அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று மனோஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

பாரதிராஜா - இளையராஜா

Bharathiraja and Ilaiyaraaja reunite after 31 years

முத்தையா முரளிதரன் பட பயோபிக் பட டிரைலரை வெளியிடும் சச்சின் டெண்டுல்கர்

முத்தையா முரளிதரன் பட பயோபிக் பட டிரைலரை வெளியிடும் சச்சின் டெண்டுல்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ‘800’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.

அதன்பிறகு, இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் படத்தின் முதல் தொற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘800’ படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல் இப்போது முத்தையா முரளிதரனாகவும், மனைவி மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை இன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியிட உள்ளார்.

அதன் படி, மும்பையில் இன்று மதியம் 2.45க்கு ‘800′ படத்தின் ட்ரெய்லரை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

Sachin Tendulkar to unveil Trailer for Muttiah Muralitharan’s Biopic ‘800’ Movie

அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் தனுஷ்.; மீண்டும் கொடி பறக்குமா.?

அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் தனுஷ்.; மீண்டும் கொடி பறக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முடித்துவிட்டார்.

இந்த படத்தை அடுத்து, தனது 50 படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் . தலைப்பிடப்படாத இப்படம் ‘D 51’ என அழைக்கப்படுகிறது.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா நடிக்கிறார் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ‘D 51’ படம் பொலிட்டிக்கல் த்ரில்லர் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.

இதில் நடிகர் தனுஷ் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இதற்கு முன்னதாக அவர் ‘கொடி’ படத்தில் அரசியல் பிரமுகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush to play a politician role again in shekhar kammula directorial d51

CHANDRAMUKHI 2 HIGH LIGHTS சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு குட்டி கதை சொன்ன லாரன்ஸ்.; ரஜினி சாயலை பிரித்தெடுக்க முடியல.!

CHANDRAMUKHI 2 HIGH LIGHTS சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு குட்டி கதை சொன்ன லாரன்ஸ்.; ரஜினி சாயலை பிரித்தெடுக்க முடியல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சந்திரமுகி 2’ ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசுகையில்…

” முதலில் சூப்பர் ஸ்டாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நடிப்பில் ‘சந்திரமுகி’ படம் வெளியாகி பெரிய வெற்றியை பெறவில்லை என்றால், ‘சந்திரமுகி 2’ இல்லை. இதற்காக சூப்பர் ஸ்டார்- இயக்குநர் பி. வாசு -சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஆகியோர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் சந்திரமுகி உருவாக்கவில்லை என்றால், ‘சந்திரமுகி 2’ இல்லை. அவர்கள் ஒரு பெரிய மரத்தை நட்டு வைத்து சென்றிருக்கிறார்கள். அதில் கிடைக்கும் பழங்களையும், பலன்களையும் நாம் சாப்பிட்டு அனுபவிக்கிறோம்.

நடிகர் கூல் சுரேஷ் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவர் பேசும் போது பலமுறை என்னை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்.

சூப்பர் ஸ்டார் பிரச்சனை இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் என்னை இணைத்து பேசியதால், அதற்கு நான் விளக்கம் தர வேண்டி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் எப்போதாவது.. யாரிடமாவது.. கேட்டிருக்கிறாரா? அல்லது அவர் எங்காவது அறிவித்தாரா? எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று.

நான் எப்போது விஜய்யை சந்தித்தாலும், அவர் என்னிடம் தலைவர் நன்றாக இருக்கிறாரா? என்று தான் முதலில் கேட்பார். அதனால் விஜய்க்கு ரஜினி சார் மீது மரியாதை இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் போது, ‘பீஸ்ட் படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. படம் சூப்பராக இருக்கிறது. வசூல் நன்றாக இருக்கிறது. சன் டிவியிலிருந்து சொன்னார்கள் என்று சொல்வார்.. அதனால் இந்த இருவருக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.

இதற்கு ஒரு குட்டி கதை சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு தேங்காய் மரம். ஒரு மாங்காய் மரம். தேங்காய் மரத்தில் மாங்காய் முளைக்குமா? மாங்காய் மரத்தில் தேங்காய் முளைக்குமா?

கடவுளால் விதிக்கப்பட்ட விதி என்பது வேறு வேறு. ஆனால் இரண்டுமே ஒரே மண்ணில் தான் விளைகிறது. எப்படி அதை பிரித்துப் பார்ப்பது.. ஒரே தாயின் இரண்டு பிள்ளைகளை எப்படி பிரித்துப் பார்ப்பது..?

ஆனால் நடுவில் ஒருவர் அந்த மாங்காய் மரத்தில் தேங்காய் முளைக்கிறது..! என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அதைப் பார்த்து அனைவரும் மாங்காய் மரத்தில் தேங்காய்… என்று சொல்லத் தொடங்கி விட்டனர்.

மாங்காய் மரத்திற்கு நன்றாக தெரியும் நான் மாங்காய் மட்டும்தான் கொடுப்பேன் என்று… தேங்காய் மரத்துக்கு நன்றாக தெரியும் நான் தேங்காய் தான் கொடுப்பேன் என்று..

ஆனால் நடுவில் இந்த வியாபாரம் செய்கிறவர் இருக்கிறார்களல்லவா..! அவர்கள் சொன்ன வார்த்தை இது. அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது வேண்டாம் ப்ளீஸ் விட்டு விடுங்கள்.

எல்லோரும் இங்கு அண்ணன் தம்பிகளாய்.. ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரித்து விடாதீர்கள்.

இனி யாராவது வந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று கேட்டால், ‘தேங்காய் மரத்தில் தேங்காய் தான் முளைக்கும். மாங்காய் மரத்தின் மாங்காய் தான் முளைக்கும்’ என்று பதில் சொல்லுங்கள்.

படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். மிக அண்மையில் தான் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். அந்த விழாவில் என்னுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். அந்நிகழ்ச்சி நிறைவடைந்து 15 நாட்களுக்குள் மீண்டும் இப்படி ஒரு பிரம்மாண்டமான முன்னோட்ட வெளியிட்டு விழாவை நடத்துகிறார்.

லைக்கா நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமிதமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். லைகாவை பொருத்தவரை சுபாஸ்கரன் எண்ணம் என்றால்.. அதற்கு செயல் வடிவம் கொடுப்பது ஜி கே எம் தமிழ் குமரன்.

தமிழ் குமரன் படத்தின் முன்னோட்டத்தை பார்த்துவிட்டு, எனக்கு போன் மூலம் ட்ரைலர் வேற லெவலில் இருக்கிறது என உற்சாகத்துடன் சொன்னார். நான் இப்போதுதான் படத்தின் முன்னோட்டத்தை உங்களுடன் அமர்ந்து பார்த்தேன் மிக பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. இந்தப் படத்தை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்றிருக்கும் தமிழ் குமரனுக்கும், அவருடன் பணியாற்றும் மேனேஜர்களுக்கும் என்னுடைய நன்றி.

இயக்குநர் பி. வாசுவை பற்றி கடந்த விழாவின் போது மேடையில் குறிப்பிட்டேன். நான் நடன நடிகராக இருந்த போதும் அவர் இயக்குநர். நான் தயாரிப்பாளராக.. இயக்குநராக.. உயர்ந்த பிறகும் என்றும் அவர் இயக்குநர். நாளை என்னுடைய தம்பியையும் அவர் இயக்கலாம். எதிர்காலத்தில் எனக்கு குழந்தை பிறந்தால்.. அந்த குழந்தையையும் அவர் இயக்குவார். அந்த அளவிற்கு ஆற்றலுடன் இன்றும் இயங்குகிறார் பி. வாசு. படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு வருகை தந்து திட்டமிட்ட பணியை பூர்த்தி செய்வார்.

இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான்.

படத்தில் ஒரு வசனம் இடம் பெறுகிறது. அந்த வசனத்தை பேசிவிட்டு, நான் நடந்து வந்து ஓரிடத்தில் நிற்க வேண்டும். அந்தக் காட்சியை நான் முதல் முறை நடிக்கும் போது.. பி வாசு குறிக்கிட்டு, ‘ராகவா.. சார் தெரிகிறார். அதை தவிர்த்து விடுங்கள் அல்லது அதனை குறைத்து விடுங்கள்’ என்றார்.

அதன் பிறகு அவரிடம் நான் அந்த நடையை நீங்கள் நடந்து காட்டுங்கள். உங்களைப் பார்த்து நான் நடிக்கிறேன் என்றேன்.

அவரும் ஒரு முறை நடந்து காட்டினார். பிறகு அதை போல் நடக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம், சார் நீங்கள் கூட ரஜினி சார் போலத்தான் நடக்கிறீர்கள் என்று சொன்னேன்.

எங்களிடமிருந்த சவாலே இதுதான். எங்களிடமிருந்து ரஜினியை பிரிக்க முடியவில்லை.

இருந்தாலும் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து விமர்சனங்களும், நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சேரும்.

கங்கனா மேடத்தை முதலில் ‘கங்கனா மேடம்’ தான் அழைத்தேன். பிறகு அவரிடம் பழகிய பிறகு ‘ஹாய் கங்கு’ என்றேன். அவர் அதை எளிதாக எடுத்துக்கொண்டு, ‘ஹாய் மாஸ்டர்’ என பேசினார். நான்கு முறை சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா என்னுடன் இணைந்து நடித்திருப்பதை நான் பெருமிதமாக கருதுகிறேன்.

மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குட்டீஸ், ரவி மரியா, விக்னேஷ்.. என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகருக்கும் நன்றி. நான் நேரில் பார்ப்பதற்கும், திரையில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்தான் திரையில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. வேட்டையன் கதாபாத்திரம் பேசும் அந்த வசனம். தூய தமிழில் இருந்தது. நான் ராயபுரத்தில் பிறந்தவன். தமிழ் சுமாராக தான் தெரியும். தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன். ” என்றார்.

Ragava Lawrence speech at Chandramukhi 2 Trailer launch

More Articles
Follows