அஜித் பிறந்தநாளில் AK 62 டைட்டிலை வெளியிட்ட லைக்கா.; செம பொருத்தமாச்சே.!

அஜித் பிறந்தநாளில் AK 62 டைட்டிலை வெளியிட்ட லைக்கா.; செம பொருத்தமாச்சே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிக்கும் அவரின் 62 ஆவது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்.

இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனக் கூறப்பட்டது அதன் பின்னர் அவர் விலகினார்.

அதன்படி இன்று மே 1ம் தேதி 12 மணி துவங்கும் வேளையில் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்திற்கு ‘விடா முயற்சி’ என்று பெயரிட்டுள்ளனர்.

விடா முயற்சி

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமானவர் அஜித். அவர் தன்னுடைய தொடர்ந்து விடாமுயற்சியால் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

எனவே இந்த தலைப்பு அஜித்திற்கு மிகவும் பொருத்தமானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விடா முயற்சி

Ajith 62 movie titled Vidaa Muyarchi Title look released

தெலுங்கில் ரஜினி – கமல் – சூர்யா கார்த்திக்கு ரசிகர்கள் இருக்காங்க – கார்த்திக் வர்மா

தெலுங்கில் ரஜினி – கமல் – சூர்யா கார்த்திக்கு ரசிகர்கள் இருக்காங்க – கார்த்திக் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘விரூபாக்‌ஷா’.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து இந்த படத்தை தமிழில் டப் செய்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

வருகிற மே 5ம் தேதி இந்த படத்தை தமிழில் வெளியிட உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் வர்மா பேசுகையில்..

“‘தமிழ் மொழியில் இயல்பாக பேச வராது. இருந்தாலும் தமிழ் திரைப்பட ஆளுமைகளான மணிரத்னம், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் என ஏராளமான திறமையாளர்கள் மீது அதிக ஈடுபாடு உண்டு.

தமிழ் மக்களின் திரைப்பட ஆர்வம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் வெளியான ‘பீட்சா’, நயன்தாரா நடித்த ‘மாயா’ ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன்.

இந்தப்படத்திற்கு சுகுமார் சாரின் திரைக்கதை வெற்றி பெற வைத்திருக்கிறது.

முதலில் நாயகனை சந்தித்தபோது அவர் என்னிடமிருந்து காதல் கதையைத்தான் எதிர்பார்த்தார்.

ஆனால் நான் ‘‘விரூபாக்‌ஷா’ கதையைச் சொல்லும் போது, முதலில் தயங்கி பிறகு ஒப்புக்கொண்டார். இந்த திரைப்படம், திரையரங்கிற்கு வருகை தந்து கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். தெலுங்கு ரசிகர்கள் ரஜினி சார், கமல் சார், சூர்யா சார், கார்த்தி சார்.. ஆகியோருக்கு வரவேற்பும், ஆதரவும் அளித்தது போல், தமிழ் ரசிகர்கள் சாய் தரம் தேஜுக்கும் ஆதரவும், வரவேற்பும் அளிப்பார்கள். ” என்றார்.

Director Kartik Varma speechat virupaksha event

கேரளா சேலை கட்டினா தமிழ் பசங்கதான் ரொம்ப லைக் பண்றாங்க – சம்யுக்தா

கேரளா சேலை கட்டினா தமிழ் பசங்கதான் ரொம்ப லைக் பண்றாங்க – சம்யுக்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘விரூபாக்‌ஷா’.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 21ல் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து இந்த படத்தை தமிழில் டப் செய்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

வருகிற மே 5ம் தேதி இந்த படத்தை தமிழில் வெளியிட உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகை சம்யுக்தா பேசுகையில்…

”எனக்கு தமிழ் மொழியும், தமிழ்நாடும் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘வாத்தி’ படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த திரைப்படம் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். ஒரு திரைப்படம் வெளியாகி அதனை ஓடிடியில் காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ‘‘விரூபாக்‌ஷா’ திரையரங்கில் கண்டு மகிழ வேண்டிய படம்.

ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், ஒலி… என அனைத்தின் சிறப்பம்சங்களும் திரையரங்கில் மட்டுமே சாத்தியம். இந்த அனுபவம் ஓ டி டி மற்றும் சிறிய திரையில் கிடைக்காது.

நான் பாலகாட்டைச் சேர்ந்த பெண்.. நான் கேரளா சேலை கட்டினால் கேரளா பையன்கள் எனக்கு அதிகம் லைக் செய்வதை விட தமிழ் பசங்க தான் அதிகமாக லைக் பண்றாங்க.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன், தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

Samyktha speech at virupaksha event

தமிழ் ரசிகர்களுக்கு மிஸ்டிக் ஹாரர் ‘விரூபாக்‌ஷா’ பிடிக்கும் – தனஞ்செயன்

தமிழ் ரசிகர்களுக்கு மிஸ்டிக் ஹாரர் ‘விரூபாக்‌ஷா’ பிடிக்கும் – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘விரூபாக்‌ஷா’.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து இந்த படத்தை தமிழில் டப் செய்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

வருகிற மே 5ம் தேதி இந்த படத்தை தமிழில் வெளியிட உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பிரசாத் பேசுகையில்…

”தமிழில் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என முப்பத்தைந்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இயக்குநர் எஸ் பி முத்துராமன், அகத்தியன் உள்ளிட்ட பலருடன் பணியாற்ற விரும்பினேன். ஆனால் சரியான வாய்ப்பு அமையவில்லை.

தற்போது ‘விரூபாக்‌ஷா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். இந்த திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில்…

”இந்தத் திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தெலுங்கில் வெளியானவுடன் அன்றே பார்த்தேன். இரண்டேகால் மணி நேரத்திற்கு ஒரு புதிய உலகத்திற்கு சென்று வந்த அற்புதமான அனுபவத்தை அளித்தது. தயாரிப்பாளர் பி. வி. எஸ். என். பிரசாத் கதையின் மீது நம்பிக்கை வைத்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.

‘புஷ்பா’ இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை, அறிமுக இயக்குநர் கார்த்திக்கின் இயக்கம், சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தாவின் நடிப்பு.. என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை தொடர்புக் கொண்டு இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்த திரைப்படம் தெலுங்கில் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

அதேபோன்ற வெற்றியை தமிழிலும் சாத்தியமாக்க வேண்டும் என ஞானவேல் ராஜா விரும்பினார். இந்தத் திரைப்படம் ‘அருந்ததி’ மாதிரி கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம்.

தமிழ் ரசிகர்களுக்கு மிஸ்டிக் ஹாரர் திரில்லர் படமான ‘விரூபாக்‌ஷா’ ‘நிச்சயமாக பிடிக்கும். ‘விரூபாக்‌ஷா’ எனும் டைட்டில் பவர்ஃபுல்லாக இருக்கிறது.

படத்தின் டப்பிங் பணிகளை விரைவாக நிறைவு செய்து படத்தை மே மாதம் 5 ஆம் தேதிக்கு வெளியாகும் வகையில் திட்டமிட்டு உழைத்த தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். தமிழில் ‘அருந்ததி முதல் ஆர் ஆர் ஆர் ‘படம் வரை ஏராளமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இந்த ‘விரூபாக்‌ஷா’ படமும் இடம்பெறும்.” என்றார்.

Tamil audience will like virupaksha says dhananjayan

எனக்கு ரஜினிதான் இன்ஸ்பிரேசன் – ‘விரூபாக்‌ஷா’ சாய் தரம் தேஜ் டாக்

எனக்கு ரஜினிதான் இன்ஸ்பிரேசன் – ‘விரூபாக்‌ஷா’ சாய் தரம் தேஜ் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘விரூபாக்‌ஷா’. இந்த திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று தெலுங்கில் வெளியான இந்த திரைப்படம், வெளியான ஒரு வாரத்திற்குள் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதன் போது தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் பி. வி. எஸ். என். பிரசாத், இயக்குநர் கார்த்திக் வர்மா, நடிகை சம்யுக்தா, படத்தின் நாயகனான சாய் தரம் தேஜ் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாயகன் சாய் தரம் தேஜ் பேசுகையில்…

”நான் சாதாரண சென்னை தி. நகர் பையன் தான். 91ல் அடையாறில் உள்ள பள்ளியில் தான் படித்தேன். தெலுங்கில் நாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் தமிழில் நாயகனாக வெற்றி பெற வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன்.

அந்தக் கனவு ‘விரூபாக்‌ஷா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்தத் திரைப்படம் தெலுங்கில் வெற்றியை பெற்றது போல், தமிழிலும் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்.

தமிழில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்த்து, எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்ததற்கு ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன். அவர் நடித்த ‘சந்திரமுகி’ படம், கதையின் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.

அதே போல் இந்த படத்திலும் கதையின் நாயகிக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு வித்தியாசமான கதையும், சுகுமாரின் விறுவிறுப்பான திரைக்கதையும் தான் காரணம்” என்றார்.

Virupaksha sai tharan tej about rajinikanth

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரஜினி நடித்திருந்தால் விக்ரம் நிலை.?! சரத்குமார் சரவெடி பதில்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரஜினி நடித்திருந்தால் விக்ரம் நிலை.?! சரத்குமார் சரவெடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர் சரத்குமார்.

இவரது நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

இதில் பழுவேட்டையராய் நடித்திருந்தார் சரத்குமார். அவரது கேரக்டர் பலரின் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களின் வெற்றிக்காக நன்றி கூறும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சரத்குமார்.

அப்போது தான் நடித்து வரும் படங்கள் குறித்து பேசினார்.

அப்போது சரத்குமாரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.

நீங்கள் நடித்த பழுவேட்டையார் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஒருவேளை அவர் நடித்திருந்தால் படத்தில் ப்ரமோஷன் எனும் போஸ்டரிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சரத்குமார் பதில் அளிக்கையில்… “நிச்சயமாக நான் நடித்த கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலும் படத்தின் விளம்பர போஸ்டர்களில் ரஜினிகாந்தின் முகம் பெரிய அளவில் இருக்கும். அவருக்கு அடுத்து ஐஸ்வர்யா ராய் இருப்பார்.

ஆதித்ய கரிகாலன் நடித்த விக்ரம் போஸ்டர் சிறியதாக அமைந்திருக்கும்” என ஓப்பனாக பதிலளித்தார் சரத்குமார்.

Sarath Kumar about if rajini acted in ponniyin selvan

More Articles
Follows