வி சென்டிமென்டை விடாத அஜித்..; ‘விடாமுயற்சி’ சூட்டிங் அப்டேட்

வி சென்டிமென்டை விடாத அஜித்..; ‘விடாமுயற்சி’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்திற்குப் பிறகு அஜித்தின் புதிய பட அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதை அடுத்து மகிழ் திருமேனி இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அப்சட்டில் இருந்து வருகின்றனர்.

மேலும் அஜித் பைக் டூர் சுற்றுப்பயணம் என பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை துபாய் நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் பின்னர் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ‘விடாமுயற்சி’ பட் ஷூட்டிங்கை மகிழ் திருமேனி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அஜித்தின் பெரும்பாலான பட பெயர்கள் வி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். தற்போது விநாயகர் சதுர்த்தி அன்றுதான் விடாமுயற்சி சூட்டிங் தொடங்கப்படுகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Ajith and V letter sentiment and Vidamuyarchi shooting news

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்றவர் ரஜினி..; மலேசிய பிரதமர் சந்தித்து பாராட்டு

சர்வதேச கலையுலகில் புகழ்பெற்றவர் ரஜினி..; மலேசிய பிரதமர் சந்தித்து பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் கடந்த மாதம் செப்டம்பர் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி உலகமெங்கும் 600 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளது.

மேலும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படம் இந்த ஆண்டு 2021 டிசம்பருக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு படங்களின் சூட்டிங்கை முடித்துவிட்டு ரஜினிகாந்த் இமயமலை பயணம் சென்றிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர் ‘ஜெயிலர்’ பட வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் கிருஷ்ணகிரியில் தான் பிறந்த ஊரான நாச்சிக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்ட தாய், தந்தையர் மண்டபத்திற்கு சென்று வணங்கி வந்தார்.

ரஜினிகாந்த்

இந்த நிலையில் தற்போது மலேசியா சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அங்கு அவர் மலேசியா பிரதமரை சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

ரஜினியுடன் சந்திப்பு குறித்து பிரதமர் பதிவிட்டுள்ளதாவது

ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த்

Rajinikanth and Malaysia Prime Minister meeting

‘ஜெயிலர்’ குழுவினருக்கு தங்க காசுகளை பிரியாணியுடன் வழங்கிய தயாரிப்பாளர்

‘ஜெயிலர்’ குழுவினருக்கு தங்க காசுகளை பிரியாணியுடன் வழங்கிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு உயர்ரக கார்களை பரிசாக வழங்கினார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

மேலும் இலாபத்தில் ஒரு பங்கை காசோலையாகவும் வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் பணியாற்றிய 300+ நபர்களுக்கு அனைத்து கலைஞர்களுக்கும் 2 கிராம் தங்க நாணயங்களை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.

அதில் ஒரு பக்கம் ‘ஜெயிலர்’ லோகோவும் மறுபக்கம் சன் டிவி லோகோவும் இடம் பெற்றுள்ளது.

மேலும் சுவையான பிரியாணியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கலாநிதி மாறன் மற்றும் நெல்சன் ஆகியோர் பணியாற்றிய கலைஞர்களுடன் அமர்ந்து உணவை ருசித்து சாப்பிட்டனர்.

ஜெயிலர்

Jailer producer gifted 2 grams gold coin to team

‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா யார் தெரியுமா.?

‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

ஜி வி பிரகாஷ் இசையமைக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் தயாரித்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

இந்த படத்தில் சில்க் ஸ்மிதா தோற்றத்தில் ஒருவர் நடித்துள்ளார். அவர் யார்? என்பது பல ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

அவர் வேறு யாருமல்ல ஆந்திராவை சேர்ந்த டிக் டாக் பிரபலம் விஷ்ணுபிரியா காந்தி என்ற பெண்தான். இவரை பலரும் நடிகை சில்க் ஸ்மிதா போலவே உள்ளனர் என கருத்து தெரிவித்திருந்த நிலையில் இவர் மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா ஆக நடித்துள்ளார்.

மேலும் சில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் நிஜ சில்க் ஸ்மிதா போலவே இவரை மாற்றி உள்ளதாக இயக்குனர் ஆதிக் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக சில்க் ஸ்மிதா ரசிகர்களுக்கு மீண்டும் சில்க் தரிசனம் செப்டம்பர் 15ல் கிடைக்கப் போவது உறுதி ..

 விஷ்ணுபிரியா காந்தி

Who is Silk Smitha in Mark Antony movie

வெளியே நடந்தது தெரியல.. – ஏஆர் ரஹ்மான்..; பொறுப்பற்ற பேச்சு – தீனா.; ACTC மோசடி நபர்கள் இவர்களா.?

வெளியே நடந்தது தெரியல.. – ஏஆர் ரஹ்மான்..; பொறுப்பற்ற பேச்சு – தீனா.; ACTC மோசடி நபர்கள் இவர்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை அருகே உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்..’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 40 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் மாறாக ஒரு லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.

ரூ 2000 5000 10,000 விலையிலான டிக்கெட் அதிகப்படியாக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ சி டி சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

ஏ சி டி சி நிறுவனர் ஹேமந்த் ராஜா மற்றும் பூங்கொடி இருவருமே நிகழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

நிகழ்ச்சியில் முறையான ஏற்பாடுகள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை. மேலும் டைமண்ட் பிளாட்டினம் என இருக்கைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் குளறுபடி காரணமாக வெவ்வேறு பிரிவுகளில் ரசிகர்கள் அமர்ந்தனர்.

மேலும் முறையான பார்க்கிங் வசதிகள் அமைக்கப்படவில்லை

இதனால் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வெளியே மிகவும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. போக்குவரத்து நெரிசல் காரணமாக தமிழக முதலமைச்சரின் வாகனமும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடந்த இடத்தை தாம்பரம் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை செய்த பின் விவரங்கள் தெரியவரும்.

இந்த நிலையில் “இந்த குளறுபடிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.” என ஏ ஆர் ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து ஏ சி டி சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேசமயம் நாங்கள் அரங்கத்திற்கு உள்ளே இருந்ததால் வெளியே என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை என ஏஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஹ்மானின் இந்த பதிலுக்கு இசை அமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கருத்து தெரிவிக்கையில்..

“அங்கு உள்ள எவருக்காகவும் மக்கள் வரவில்லை.. ஏ ஆர் ரகுமான் என்ற ஒருவருக்காகவே மக்கள் திரண்டனர். அப்படி இருக்கையில் ரகுமானின் இந்த பேச்சு பொறுப்பேற்ற பேச்சாகும்.

இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் முறையான ஏற்பாடுகளை செய்து இசையமைப்பாளர்கள் நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹேமந்த் ராஜா மற்றும் பூங்கொடி ஆகியோரின் படங்கள் தற்போது கிடைத்துள்ளன..

Music composer AR Rahman concert issue goes viral

மனசிலாயோ சாரே.. செப்டம்பர் 15ல் ‘ஜெயிலர்’ வில்லன் வர்மா மீண்டும் வர்றார்

மனசிலாயோ சாரே.. செப்டம்பர் 15ல் ‘ஜெயிலர்’ வில்லன் வர்மா மீண்டும் வர்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரை உலகில் மிகப் பிரபலமான நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இவரது மிரட்டலான நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

‘மனசிலாயோ சாரே.. என்று இவர் பேசும் வசனம் தமிழக மக்களையும் கவர்ந்துள்ளது. வர்மா என்ற கொடூரமான வில்லன் கேரக்டரில் இவர் அசத்தியிருந்தார்.

அண்மையில் ஒரு வீடியோவில்.. “ரஜினிக்கும் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் மிக்க நன்றி எனவும் உருக்கமாக பேசியிருந்தார்”.

இந்த நிலையில் இவரது அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன

‘காசர்கோல்ட்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார் விநாயகன். இந்த படத்தில் நாயகனாக ஆசிப் அலி நடிக்க மாளவிகா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்க மிருதுள்நாயர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஸ்டைலிஷான ஹைடெக் வில்லனாக விநாயகன் நடித்துள்ளார். இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாகிறது.

விநாயகன்

Jailer baddie Vinayakans next movie Kasargold release

More Articles
Follows