தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டைம் லூப் கதையை மையப்படுத்தி உருவான ‘மாநாடு’ படம் கடந்த 25 நவம்பர் 2021ல் ரிலீசானது.
வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் சிம்புக்கு நிகராக அசத்தலான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார்.
கல்யாணி ப்ரியதர்சன், ப்ரேம்ஜி, கருணாகரன், எஸ்ஏசி, ஒய்ஜிமகேந்திரன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் வேகமான திரைக்கதையும் அதற்கு ஏற்ப அமைக்கப்பட்ட பின்னணி இசையும் பெரியளவில் பேசப்பட்டது.
‘மாநாடு’ 100 நாட்கள்.: ரசிகர்கள் முன்னிலையில் மாஸ் காட்டிய சிலம்பரசன்
சில மாதங்களுக்கு முன்பே இப்பட வசூல் ரூ.100 கோடியை கடந்து விட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் தயாரிப்பாளர் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ‘மாநாடு’ படம் உலகளவில் 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு பெரிய வெற்றியை கொடுத்திருப்பதால் இந்த மகா வசூல் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.
சிம்பு நடித்து முடித்துள்ள வெந்து தணிந்தது காடு விரைவில் வெளியாக உள்ளது. தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார் .
மேலும் கொரோனா குமார் படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிம்பு.
தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா தனுஷ் சிம்பு சிவகார்த்திகேயன் லாரன்ஸ் உள்ளிட்ட சில நடிகர்களே ரூ 100 கோடி கிளப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Simbu joins Rs 100 crore box office club