தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை இயக்கி வருகிறார் தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி.
இப்பட பூஜையின் போது நடிகர் விஜய்யுடன் இப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் இணைந்து நடிகர் ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.
இப்படம் மூலம் முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் தமன்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.
அதன் பின்னர் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
அப்போதே விஜய் உடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.
இந்த நிலையில் விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பபு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் பிறந்தநாளில் தளபதி 66 – 67 ட்ரீட்க்கு ரெடியா இருங்க
சென்னை ஏர்போட்டில் மாஸ்க் அணிந்தபடி விஜய் இருக்கும் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
எனவே ‘தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
Thalapathy Vijay latest pic goes viral