தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கா செந்தில் வேலன் தயாரித்து வரும் பெயரிடப்படாத திரைப்படம் தான் “Production No : 1”.
நட்டி, நிஷாந்த் ரஸ்சோ, சிவன்யா, நிழல்கள் ரவி, ஆதேஷ் பாலா, ஜீவா ரவி, அரவிந்த் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தினை குணா சுப்ரமணியம் இயக்க ஒளிப்பதிவை மணி பெருமாள் செய்ய சரண்குமார் இசையமைத்து வருகிறார்
இந்தப் படத்தில் போலீஸ் வேடம் போட்டு அசத்தப்போகிறாராம் ஆதேஷ் பாலா. சின்ன வேடம் என்றாலும் தனி முத்திரை பதிப்பவர் ஆதேஷ் பாலா.
இந்தப் படத்திலும் அவரின் நடிப்பு திறமையை நிச்சயம் காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
மேலும் நட்டி மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களோடு நடித்த அனுபவம் தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் ஆதேஷ் பாலா.
அசத்துங்க ஆதேஷ் ஜீ..
Aadesh Bala with Natty and Nizhalgal Ravi