நடிகர் சிவகுமார் & எடிட்டர் மோகன் ஃபேமிலி போல அழகப்பன் ஃபேமிலி – அஜயன்பாலா

நடிகர் சிவகுமார் & எடிட்டர் மோகன் ஃபேமிலி போல அழகப்பன் ஃபேமிலி – அஜயன்பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘ரங்கோலி’. இதில் அமரேஷ் – பிரார்த்தனா ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசியதாவது…

இந்தப்படம் பார்த்துவிட்டேன், மிக அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் முதல் டீம் மொத்தமும் அட்டகாசமாக உழைத்துள்ளனர். ஹமரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார், புதுமுகம் மாதிரி தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவரும் படத்தைத் தாங்கியுள்ளனர். ஹமரேஷ் மிகப்பெரிய இடத்திற்கு வருவார். ஸ்கூல் பசங்களா நடித்தவர்களும் நன்றாகச் நடித்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது…

கேலக்ஸி என்றால் நட்சத்திர கூட்டம் என அர்த்தம். தமிழ் சினிமாவில் சிவகுமார் ஃபேமிலி, எடிட்டர் மோகன் ஃபேமிலி என கேலக்ஸி இருக்கிறது.

அது போல் அழகப்பன் விஜய் ஃபேமிலி ஒரு கேலக்ஸி, அவர்களோடு நானும் இணைந்து இருக்கிறேன். இந்தப்படம் எனக்கு முக்கியமான படம். இந்தப்படம் இன்றைய மிக முக்கியமான பிரச்சனையை பேசுகிறது. கல்வியில் இருக்கும் பெரிய பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசுகிறது. ஹமரேஷ் மிக நன்றாக நடித்திருக்கிறார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ரங்கோலி

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…

வருகை புரிந்த மூத்த இயக்குநர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. ன்னை நம்பி வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என்னுடன் இணைந்து உழைத்த உதவியாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். எல்லோரும் தங்கள் படம் போல் நினைத்து உழைத்தார்கள்.

ஹமரேஷை வஸந்த் சார் படத்திலிருந்து பார்த்து வருகிறேன் மிக அற்புதமான கலைஞன். எதையும் புரிந்து கொள்ளும் தன்மை அவருக்கு அதிகம். முருகதாஸ் அண்ணனிடம் கதை சொன்ன போது அவருக்கு ஆச்சரியம், நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார்.

எப்போது டேட் கேட்டாலும் ஓடி வந்துவிடுவார். மேலும் என்னை நம்பிய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. உங்களுக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஹமரேஷ் பேசியதாவது…

உங்கள் ஆதரவு எங்கள் எல்லோருக்கும் வேண்டும், இது ஒரு சரியான மொமண்ட். இந்த மேடையை நினைத்துப் பார்த்ததில்லை. படத்தில் எல்லோரும் எனக்குப் பெரிய ஆதரவாக இருந்தார்கள். நண்பர்களாக நடித்த அனைவரும் உதவியாக இருந்தார்கள். ஆடுகளம் முருகதாஸ் உடன் நடிக்க வேண்டுமே என முதலில் பயமாக இருந்தது ஆனால் அவர் நிறையச் சொல்லித்தந்தார்.

வாலி அண்ணா அவருக்குப் படம் தான் முக்கியம், கட் சொல்லும் வரை எதையும் கண்டுகொள்ள மாட்டார். படம் நன்றாக வர மிகக் கடினமாக உழைத்துள்ளார். பிரார்த்தனாவிற்கு நன்றி. வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உதய் மாமா, விஜய் மாமா, அய்யா மூவரும் தான் நான் நடிக்கக் காரணம் அனைவருக்கும் நன்றி.

ரங்கோலி

Connection between Sivakumar Mohan Azhagappan families

சினிமாவுக்கு கிடைத்த சின்ன தனுஷ் தான் ஹமரேஷ் – ‘ஆடுகளம்’ முருகதாஸ்

சினிமாவுக்கு கிடைத்த சின்ன தனுஷ் தான் ஹமரேஷ் – ‘ஆடுகளம்’ முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.

செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

பாடலாசிரியர் கார்த்திக் மேத்தா பேசியதாவது..

இந்த மேடையைப் பாடலாசிரியர் வேல்முருகன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாகக் கதாநாயகன் ஹமரேஷ் அவருக்கு வாழ்த்துக்கள். பாடல்கள் அனைத்தும் அற்புதமாக வந்துள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ரங்கோலி

நடிகர் சாய் ஶ்ரீ பேசியதாவது…

எனக்கு இது முதல் படம். திரையுலகத்தில் அறிமுகம் இல்லாத எங்களுக்கு, இப்படி ஒரு வாய்ப்பு அளித்ததற்கு எங்கள் தயாரிப்பாளர்களுகும் இயக்குநர் வாலி சாருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் எங்களை அழகாகக் காட்டியுள்ளார், காட்சியை அழகாக வடிவமைத்துள்ளார்.

சினிமா என்பது பலரது உழைப்பில் உருவாவது, இப்படத்திற்காக தங்கள் உழைப்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. முருகதாஸ் சார் உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குத் தமிழ் தெரியாது, ஆனால் எனக்குப் பொறுமையாகச் சொல்லித்தந்து கதாபாத்திரத்தை எனக்குள் கொண்டு வந்த இயக்குநர் வாலி சாருக்கு நன்றி. ஹமரேஷ் தனது வேலையைத் திறம்பட செய்துள்ளார். ஒட்டு மொத்த குழுவிற்கும் எனது நன்றி.

நடிகை அக்ஷயா பேசியதாவது…

நான் முதலில் வேறு ஒரு படத்திற்காகத்தான் ஆடிசன் செய்திருந்தேன். ஆனால் இப்பட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ஹமரேஷ் சிறப்பாக நடித்துள்ளார், அதிக உழைப்பைத் தந்துள்ளார். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்ததற்கு இயக்குநர் வாலி சாருக்கு நன்றி.

ஆடுகளம் முருகதாஸ் பேசியதாவது…

இந்த ‘ரங்கோலி-யில் வாய்ப்பு கிடைத்ததே மிக சந்தோஷம். ஹமரேஷ் இவ்வளவு படம் பண்ணியிருக்கிறான் என்பதே இப்போது தான் தெரிகிறது. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சின்ன தனுஷ் அவர். அவருக்கு வாழ்த்துக்கள். படம் நன்றாக வந்துள்ளது.

ரங்கோலி

நடிகர் அமித் பார்கவ் பேசியதாவது…

இதுவரை நல்ல மருமகன், போலீஸ் இப்படித் தான் கேரக்டர் செய்துள்ளேன், தமிழ் வாத்தியாராக இப்போது தான் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை தந்த வாலி மோகன் தாஸுக்கு நன்றி. ஹமரேஷ் செட்டில் ரொம்ப சின்சியராக மிக அமைதியாக இருப்பார். கண்டிப்பாகப் பெரிய இடத்திற்குச் செல்வார்.

இயக்குநர் வாலி கடினமான உழைப்பாளி. அவர் வைக்கும் ஃபிரேமே அவ்வளவு அழகாக இருக்கும். அந்த உலகத்திற்குள் போகும் ஆசையைத் தருவார். படம் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

கதை நாயகி பிரார்த்தனா பேசியதாவது…

எனக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. வாலி சார் என் குரு மாதிரி அவர் தான் எல்லாம் சொல்லித்தந்தார். ஹமரேஷ் நிறைய உதவியாக இருந்தார். இந்தப்படத்தை எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் நன்றி.

ரங்கோலி

Amaresh is like chinna Dhanush says Murugadoss

‘பராக்ரமம்’ டீசர் வெளியிட்டு படத்தை அறிவித்த பண்டி சரோஜ்குமார்

‘பராக்ரமம்’ டீசர் வெளியிட்டு படத்தை அறிவித்த பண்டி சரோஜ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2010 ஆம் ஆண்டு வெளியான ‘போர்க்களம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பண்டி சரோஜ்குமார்.

மிரட்டலான மேக்கிங் மூலம் முதல் படத்திலேயே ஒட்டு மொத்த கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்ததோடு, பத்திரிகையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். படத்தின் ஒவ்வொரு ஷாட்களும் பார்வையாளர்கள் கண் சிமிட்டாமல் பார்க்க கூடிய விதத்தில் இருந்ததோடு, விறுவிறுப்பான திரைக்கதையோடு மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாகவும் இருந்தது.

அப்படத்தை பார்த்த பலர் இயக்குநர் பண்டி சரோஜ்குமார், மிகப்பெரிய இயக்குநராக உருவெடுப்பார் என்று பாராட்டினார்கள்.

பராக்ரமம்

இதற்கிடையே, இயக்குநர் பண்டி சரோஜ்குமாரின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு “கலை எனது, விலை உனது” என்ற கருத்தோடு டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியான ’மாங்கல்யம்’ என்ற திரைப்படத்தை இயக்கியதோடு, அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.

இயக்குநராக ஏற்கனவே பாராட்டு பெற்ற பண்டி சரோஜ்குமார், தற்போது நடிகராகவும் ரசிகர்களிடம் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, புதிய படம் ஒன்றை இயக்கி தயாரிப்பதோடு, அதில் நாயகனாகவும் நடிக்கிறார்.

பராக்ரமம்

‘பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்’ (BSK MAINSTREAM) என்ற நிறுவனம் சார்பில் பண்டி சரோஜ்குமார் தயாரித்து, இயக்கி நடிக்க இருக்கும் படத்திற்கு ’பராக்ரமம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

“I ME MYSELF” என்ற டேக்லைன் கொண்ட ‘பராக்ரமம்’ படத்தின் தலைப்பை அசத்தலான டீசர் மூலம் பண்டி சரோஜ்குமார் அறிவித்துள்ளார்.

பராக்ரமம்

இப்படம் குறித்து இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் பண்டி சரோஜ்குமார் கூறுகையில்…

”மதுரையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த துரைராஜா என்கின்ற இளைஞனின் வாழ்க்கையில் உள்ளூர் கிரிக்கெட், காதல், நாடக வாழ்க்கை மற்றும் அரசியல் ஆகியவை எப்படிப்பட்ட பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பது தான் இந்த படத்தின் முக்கிய கதையம்சம்.

இளைஞர்களை அனைத்து விதத்திலும் எண்டர்டெயின் செய்யும் விதமாக மட்டும் இன்றி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து பார்க்க கூடிய படமாகவும் ‘பராக்ரமம்’ இருக்கும்.

பராக்ரமம்

இந்த படத்தை நான் இயக்கி, தயாரித்து, நாயகனாக நடிப்பதோடு, இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் நானே செய்யப் போகிறேன். மேலும், என்னுடன் பல திறமையான புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்கள்.” என்றார்.

பண்டி சரோஜ்குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனாமிகா, கிரிட்டி, மோகன் சேனாபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

‘பி.எஸ்.கே மெயின்ஸ்ட்ரீம்’ நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி நடிப்பதோடு, இசை, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் பண்டி சரோஜ்குமாரே கவனிக்கிறார்.

பராக்ரமம்

விஎப்.எக்ஸ் பணிகளை அயேக்ரா ஸ்டுடியோஸ் மேற்கொள்ள, கலை இயக்குநராக கிரிட்டி முசி பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பு மற்றும் மிக்ஸிங் பணியை காளி எஸ்.ஆர்.அசோக் கவனிக்க, சசாங் வெண்ணெலகண்டி பாடல்கள் எழுதுகிறார்.

லைன் புரொடியூசராக பிரவீன் குதூரி பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக ஹஸ்வத் சரவணன் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக மனராஜு பணியாற்றுகிறார். புகைப்படக் கலைஞராக நவீன் கல்யாண் பணியாற்றுகிறார்.

தற்போது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் பண்டி சரோஜ்குமார், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, அக்டோபர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

பராக்ரமம்

Pandi Sarojkumar new movie Parakramam

தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா.; ‘Gentleman 2’ விழாவில் கீரவாணி உருக்கம்

தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா.; ‘Gentleman 2’ விழாவில் கீரவாணி உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேடி. குஞ்சுமோன் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஜென்டில்மேன் 2’.

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது,*

“தமிழ்நாட்டுக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. என் தந்தை இங்கே சென்னையில் பணி செய்தபோது என் தாயின் கருவில் உருவானவன் நான். ஆனால் திடீரென பணி மாற்றம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றபோது அங்கே பிறந்தேன்.

அந்த வகையில் என்னுடையது தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்பேன். 22 வருடமாக சென்னையில் தான் இருந்தேன். அதன்பிறகு தெலுங்கு படங்களுக்கு எல்லாம் அங்கே தான் பணியாற்ற வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் இருந்ததால் தொழில் நிமித்தம் காரணமாக ஹைதராபாத்திற்கு மாறினேன். மீண்டும் என்னை தமிழுக்கு அழைத்து வந்த குஞ்சுமோன் சாருக்கு நன்றி.

குஞ்சுமோனை பார்க்கும்போது ஒரு போலீஸ் அதிகாரி தோரணை இருக்கும். அப்படி ஒரு போலீஸ் அதிகாரி ‘யூ ஆர் அண்டர் அரெஸ்ட்’ என சொல்வது போல என்னை அவர் அரெஸ்ட் பண்ணி விட்டார். அவரது இதயச்சிறையில் ஒரு கைதியாக நான் எப்போதும் இருப்பேன்.

எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவர்கள் மூவர் எழுதிய பாடல்களையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் கேட்கும்போது நமக்கு எனர்ஜி கிடைக்கும்.

இப்போதும் வானமே எல்லை படத்தின் பாடலைக் கேட்டால் மன அழுத்தம் ஓடிப்போய் விடுகிறது. அப்படி நான் பூஜிக்கும் பாடல்களை எழுதிய பாடலாசிரியரே மீண்டும் என் படத்திற்கு பாடல் எழுதுவதை ஒரு ஆசிர்வாதமாக நினைக்கிறேன்.

நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இந்த படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக கொடுப்பேன்” என்றார்.

இப்படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் முக்கிய வேடங்களில் சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, சத்ய பிரியா, காளி வெங்கட், முனீஸ் ராஜா, படவா கோபி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

இயக்கம் ; ஏ.கோகுல் கிருஷ்ணா

இசை ; எம்.எம் கீரவாணி

பாடல்கள் ; கவிப்பேரரசு வைரமுத்து

ஒளிப்பதிவு ; அஜயன் வின்சென்ட்

படத்தொகுப்பு ; சதீஷ் சூர்யா

கலை ; தோட்டா தரணி

சண்டை பயிற்சி ; தினேஷ் கார்த்திக்

சவுண்ட் டிசைனர் ; தபஸ் நாயக்

ஆடை வடிவமைப்பு ; பூர்ணிமா ராமசாமி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : CK. அஜய்குமார்

மக்கள் தொடர்பு ; ஜான்சன்

MM Keeravaani emotional speech about his cinema journey

குஞ்சுமோன் இடத்தில் யாராவது இருந்தால் துறவி / அரசியல்வாதியாக இருப்பார் – வைரமுத்து

குஞ்சுமோன் இடத்தில் யாராவது இருந்தால் துறவி / அரசியல்வாதியாக இருப்பார் – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேடி. குஞ்சுமோன் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஜென்டில்மேன் 2’.

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது,…

“தயாரிப்பாளர் குஞ்சுமோன் படம் எடுக்க மூலதனமாக பயன்படுத்துவது பொன், பொருள், நிலம், பணம் எதுவும் அல்ல.. அவரது துணிச்சலை மட்டும் தான். 33 வருடமாக இந்த திரை உலகில் ஒரு தலைமுறையை கடந்துவிட்டார்.

இத்தனை வருடங்களில் அவர் பட்ட துன்பத்தை போல வேறு ஒரு மனிதனுக்கு நேர்ந்திருந்திருந்தால் ஒன்று அவன் துறவியாக சென்று இருப்பான்.. இல்லை அரசியல்வாதியாகி இருப்பான். ஆனால் குஞ்சுமோன் மீண்டும் படம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டுவேன் என்கிற லட்சியத்துடன் வந்துள்ளார்.

ஒரு தலைமுறையில் ஒரு வெற்றி பெற்றவர், இந்த இரண்டாவது தலைமுறையில் இரண்டு மடங்கு வெற்றி பெறுவேன் என்றுதான் ஜென்டில்மேன் 2 என தலைப்பு வைத்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது டென்சிங்கிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூட திரும்பிச் செல்லாமல், “சிகரத்தை தொட்டாலும் சரி, சிகரத்தை தொட்டு இறந்தாலும் சரி.. முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என உறுதியாக இருந்தார்.

அந்தவிதமாக வெற்றியோ தோல்வியோ சினிமாவில் நானே உச்சமாக இருக்க வேண்டும் என உறுதியாக இருப்பவர் குஞ்சுமோன். அவரைப் பற்றி பேசுவதனால் ஒரு தனி அரங்கமே அமைத்து பேசலாம்.

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் ஒரு புதிய இசையமைப்பாளரை அறிமுகம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டபோது தனக்கு தோதான தன்னை புரிந்து கொண்டு, தன்னுடைய உயரத்திற்கு தன்னுடன் இணைந்து பயணிக்கின்ற ஒரு நபர் வேண்டும் என்று கேட்டபோது எஸ்.பி.பாலசுப்ரமணியம் கைகாட்டிய ஒரே நபர் இசையமைப்பாளர் கீரவாணி தான்.

அப்படி தன்னிடம் வந்த கீரவாணியைத்தான் மரகதமணி என்று பெயர் மாற்றி என்னிடம் ஒப்படைத்தார் பாலச்சந்தர்.

33 வருடங்களுக்கு முன்பு அவரிடம் நான் கண்ட அதே இசை இப்போது இல்லை அதைவிட பெரிய இசை இருக்கிறது அதே பண்பாடு, பணிவு, கனிவு எல்லாமே இருக்கிறது.

ஜென்டில்மேன் என குஞ்சுமோனுக்கு அடுத்ததாக நான் கருத வேண்டியவர் கீரவாணி தான். இந்த படத்தில் கதாநாயகி பரதநாட்டியம் ஆடும் விதமாக உருவாகி உள்ள ஒரு பாடலுக்கு பூமி வெப்பமயமாதல் பற்றி உள்ளடக்கமாக வைத்துள்ளோம். இந்த பாடல் வெளியான பிறகு ஐநா சபையிலே திரையிட்டால் அவர்களே நிச்சயம் கைதட்டுவார்கள்.

ஆஸ்கர் விருது கீரவாணியிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.. ஆனால் ஆஸ்கர் விருது வாங்கிய பிறகு அதிகம் உழைத்தாக வேண்டும். இல்லையென்றால் இவருக்கா ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இந்தப்படத்திற்காக’ ஏற்கனவே மூன்று பாடல்களை கொடுத்து விட்டேன் வரும் செப்டம்பர்-1க்குள் மீதம் இருக்கும் மூன்று பாடல்களையும் கொடுத்து விடுவேன் என குஞ்சுமோனுக்கு உறுதி அளிக்கிறேன்.. நிச்சயமாக இந்த படத்திற்கும் கீரவாணிக்கு ஒரு ஆஸ்கர் விருது கிடைக்கும்” என்றார்

Vairamuthu praises KT Kunjumon and Keeravaani habits

ஒரு பாடலுக்கு 8 கோடி பட்ஜெட்.; ஐநா-சபை திரும்பி பார்க்கும் – கே டி குஞ்சுமோன்

ஒரு பாடலுக்கு 8 கோடி பட்ஜெட்.; ஐநா-சபை திரும்பி பார்க்கும் – கே டி குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று ஆகஸ்ட் 19 காலை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ, தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார், பி.வாசு, கதிர், இசையமைப்பாளர் தினா, நாஞ்சில் சம்பத், நடிகைகள் சித்தாரா, சத்யபிரியா, ஸ்ரீரஞ்சனி, விஜி சந்திரசேகர், குட்டி பத்மினி, காணேஷ், ஹாரத்தி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் துவக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜப்பான் துணை தூதர் திரு தாகா மஸாயூகி, வங்கதேச குடியரசின் துணை உயர் கமிஷனர் MD.அரிபுர் ரஹ்மான், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, திருமதி ஐரின் குஞ்சுமோன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி ஜென்டில்மேன்-ll படத்தை துவங்கி வைத்தனர்.

படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கிளாப் போர்டை இயக்குநர் ஏ.கோகுல் கிருஷ்ணாவிடம் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் வழங்கினார்.

இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆளுயர மாலை அணிவித்து தலைப்பாகையும் சூட்டப்பட்டு கவுரவம் செய்யப்பட்டது.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என கணித்து சொன்ன மூன்று நபர்களில் இருவருக்கு இசையமைப்பாளர் கீரவாணியின் கைகளால் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.

இன்று வருகை தர இயலாத ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபருக்கு அங்கே படப்பிடிப்பு நடக்கும்போது தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது,

இந்த நிகழ்வில் *மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசும்போது…

“இங்கே தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் இந்த ஜென்டில்மேன் 2 படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்த வந்திருக்கின்றனர். இந்த படத்தின் பணிகளை கொரோனாவுக்கு முன்பே ஆரம்பித்தோம்.

நானும் இயக்குனர் செந்தமிழனும் இந்த படத்திற்கான கதையை உருவாக்கினோம். எப்போதுமே கதைக்கு ஏற்ற மாதிரியான ஆட்களை தான் தேர்வு செய்வேன். அதில் நான் பிடிவாதக்காரன். ஒவ்வொரு நபருமே ஜென்டில்மேன் ஆக இருந்து விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது. அதைத்தான் இந்த கதை சொல்கிறது..

இந்த படத்திற்காக நான் அட்வான்ஸ் கொடுத்தபோது கீரவாணி, வைரமுத்து இருவருமே அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

என்னுடைய குருவாக இருந்த ஜீவி ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை தாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். பிரச்சனைக்கு அது தீர்வு அல்ல.. எனக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து நான் மீண்டு வர வேண்டும் என்பதற்காக தான் இங்கே அனைவரும் வந்துள்ளனர்.

ஏ.ஆர் ரகுமானை வைத்து நான்கு படங்களை எடுத்துள்ளேன். இயக்குனர் ஷங்கரை வைத்து படம் பண்ணியுள்ளேன்.

100 படங்களுக்கு மேல் விநியோகஸ்தராக பணியாற்றி தான், தயாரிப்பாளர் என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளேன். அதனால் எந்த படம் எப்படி ஓடும் என்கிற பல்ஸ் எனக்கு தெரியும். எப்போதுமே படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு நஷ்டம் வராத மாதிரி தான் படம் எடுக்க வேண்டும்.

ஹீரோ ஹீரோயினுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ந்து வருகின்ற இளம் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படம் எடுப்பதுதான் எனது பாணி. அப்படித்தான் ஷங்கர், ஏ.ஆர் ரகுமான், கதிர் ஆகியோர் உருவானார்கள்.

இப்படத்தை துவங்குவதற்கான காரணம் என்று சொன்னால் அது இசையமைப்பாளர் கீரவாணி தான். இப்படத்தில் பணியாற்ற வேண்டுமென இசையமைப்பாளர் கீரவாணியிடம் நேரில் சென்று பேசியபோது அவர் படத்தின் கதை, கதாநாயகன், இயக்குனர் யாரென்று எல்லாம் கேட்கவில்லை. குஞ்சுமோன் சாருக்காக இந்த படம் பண்ணுகிறேன் என்றார்.

இப்படத்திற்காக வைரமுத்து எழுதியுள்ள ஒரு பாடல் வரிகளை படமாக்க வேண்டும் என்றால் ஐநா சபையை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றால் கிட்டதட்ட எட்டு கோடியாவது அந்த பாடலுக்கு செலவு பண்ண வேண்டும்” என்றார்.

KT Kunjumon plan to spend Rs 8 crores for Gentleman2 single song

More Articles
Follows