இந்திய சினிமாவின் சக்தியை உலகுக்கு காட்ட போகும் ’2.O’ டீம்!

2pointO teamலைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘2.0’.

ஷங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினியுடன் அக்‌ஷய் குமார், எமிஜாக்சன், ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்த நவம்பர் மாதம் 20-ந்தேதி வெளியிட உள்ளனர்.

இத்துடன் இப்படத்தின் டீசரும் வெளியாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து லைக்கா நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில்…

‘‘இந்திய சினிமா எப்படி பட்டது என்பதை உலகுக்கு காட்டும் நேரம் நெருங்கி விட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும், கில்லாடியும் இந்திய சினிமா என்ன என்று உலகுக்கு தெரிவிப்பார்கள். அதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது’ என்று கூறியுள்ளார்.

Overall Rating : Not available

Related News

ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
லைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய்…
...Read More
ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More

Latest Post