விநாயகர் சதுர்த்தியன்று ரஜினிகாந்த் தரும் மெகா டீசர் விருந்து

2Point0 teaser will be released on 13th September as Vinayakar Chathuruthiலைகா தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமாரும் ஹீரோயினாக எமி ஜாக்‌ஷனும் நடித்துள்ளனர்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த வருட இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இறுதியாக நவம்பர் மாதம் 29-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ. 500 கோடி பொருட்செலவில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இப்படம் 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2Point0 teaser will be released on 13th September as Vinayakar Chathuruthi special

Overall Rating : Not available

Latest Post