’16 வயதினிலே’ முதலாளி ராஜ்கண்ணு இறுதி ஊர்வலத்தில் 20 பேர் பங்கேற்பு

’16 வயதினிலே’ முதலாளி ராஜ்கண்ணு இறுதி ஊர்வலத்தில் 20 பேர் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் இமயம் என ரசிகர்களால் திரையுலகினரால் அன்பாக அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவர் அறிமுகமான முதல் தமிழ் படம் ’16 வயதினிலே’. இதில் கமல் ரஜினி ஸ்ரீதேவி கவுண்டமணி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை எஸ்ஏ. ராஜ்கண்ணு என்பவர் தயாரித்திருந்தார். இந்த படம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு மட்டுமல்லாமல் கமல் ரஜினி ஸ்ரீதேவி கவுண்டமணி இளையராஜா உள்ளிட்ட பலருக்கும் சினிமாவில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கியது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ஜூலை 11ஆம் தேதி மரணம் அடைந்தார் ராஜ்கண்ணு. இதனை அடுத்து பாரதிராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்…

“16 வயதினிலே”திரைப்படத்தின்
வாயிலாக என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது.
அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்.

கமல் தன் ட்விட்டரில்…

ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும்… https://t.co/YYwiEYc8YJ https://t.co/MZPjVay0rc

கமல் மற்றும் பாரதிராஜா இருவரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் ரஜினிகாந்த் எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை. அவர் உதயநிதி – மாரி செல்வராஜ் இணைந்த ‘மாமன்னன்’ படத்தை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கன்னிப்பருவத்திலே, மகாநதி போன்ற 8 திரைப்படங்களை தயாரித்தவர் திரு.எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்கள்.

இவர் 11.7.2023 தாம்பரம் அடுத்துள்ள சிட்லபாக்கத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி போன்ற சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய இவரது இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள் உறவினர்களை தவிர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் உட்பட சுமார் 20 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

தமிழ் திரையுலகை சார்ந்தோர் யாரும் அஞ்சலி செலுத்த வராதது வேதனைக்குரியதாகும்.

திரையுலக வரலாற்றில் 16 வயதினிலே எனும் திரைப்படம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இப்படம் 1977 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகும் எல்லோராலும் இன்றளவும் பேசப்படக்கூடிய படமாக உள்ளது.

இவருடைய மரணம் வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை போதிப்பதாக அமைந்துள்ளது. அன்னாரது ஆத்மா இறைவனடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

16 Vayadhinilae Producer SA Rajkannu passes away

‘மாவீரன்’ படத்திற்கு ஐ.ஜே.கே கட்சி பிரமுகர் தடை கேட்டு வழக்கு.; கோர்ட் அதிரடி உத்தரவு

‘மாவீரன்’ படத்திற்கு ஐ.ஜே.கே கட்சி பிரமுகர் தடை கேட்டு வழக்கு.; கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்துக்கு எதிராக ஐஜேகே (IJK) கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதை பார்த்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என படத்தின் தொடக்கத்தில் 15 விநாடிகள், இடைவேளைக்கு பிறகு 15 விநாடிகள், படம் முடியும் போது 10 விநாடிகள் என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) வெளியிட வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், காட்சிகளை மாற்றியமைத்த பின்னரே ஓடிடி, சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Chennai High Court Orders maaveeran Film Crew To Remove Controversial Footages

HIGH ON U1.. யுவன் இசையில் நனைய ரெடியா.? 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு ஆட்டம்

HIGH ON U1.. யுவன் இசையில் நனைய ரெடியா.? 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

இவர் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக மக்கள் அனைவரையும் இசையால் கவர்ந்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்றால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ரசிகர்களை உற்சாகம் படுத்தும் விதமாக இவருடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் டி.ஆர்., இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.

திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர். இருவரும் ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்கிறார்கள். மலேசியாவில் ஜூலை 15 ஆம் தேதி ஹை ஆன் யுவன் என்ற இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

இதில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் டி.ஆர். மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதால் ரசிகர்களிடையே ஹை ஆன் யுவன் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹை ஆன் யுவன் இசை நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் பெரும் பொருட்செலவில் நடத்துகிறார்கள். ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கவே யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர் இருவரையும் ஒன்று சேர்த்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் யுவன் சங்கர் ராஜாவை வைத்து அமெரிக்காவில் உள்ள 6 மாநகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்து இருப்பதாக கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் கூறியிருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா

Simbu joins High on U1 Yuvan concert in Malaysia

திருமணத்திற்கு பிறகான காதலை பாடும் விஜய் – சமந்தா.; ரசிகர்கள் ‘குஷி’

திருமணத்திற்கு பிறகான காதலை பாடும் விஜய் – சமந்தா.; ரசிகர்கள் ‘குஷி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத், பிரபு நடிப்பில் உருவாகி வரும் ‘குஷி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இரண்டாவது சிங்கிளான ‘ஆராத்யா’வை வெளியிட்டனர்.

ப்ரமோவில் உறுதியளித்தபடி, இது திருமணத்திற்கு பிறகு முதன்மையான நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஒரு மாயாஜால காதல் பாடலாக இருக்கும்.

இந்த காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி போன்ற பரபரப்பான பாடகர்கள் பாடியுள்ளனர்.’ நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை…’ என்ற மந்திர வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.

விஜய் தேவாரகொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி இனிமையான மெட்டினைப் போலவே மாயாஜாலமாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்த விரும்பும் அனைத்து காதலர்களுக்கும் இது ஒரு கீதமாக இருக்கும்.

‘ஹிருதயம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹே ஷாம் அப்துல்லா வஹாப் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். படத்தின் இயக்குநர் சிவ நிர்வாணா தெலுங்கு பாடல்களை எழுத, மதன் கார்க்கி தமிழ் பாடல்களை எழுதி இருக்கிறார்.

இந்தி பதிப்பில் ஜூபின் நௌடியல் மற்றும் பாலக் முச்சல் ஆகியோர் பாடியுள்ளனர். கன்னட மதிப்பில் ஹரிசரண் சேஷாத்திரி மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர்.

மலையாள பதிப்பில் கே. எஸ். ஹரிசங்கர் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பிலும் உணர்வும், மந்திரமும் அப்படியே இருக்கும்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘குஷி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, ஜெயராம் சச்சின் கெடகர், சரண்யா பிரதீப், வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Vijay Deverakonda and Samanthas Kushi 2nd Single Aradhya

நானி – மிருணாள் தாக்கூர் இணைந்த ”Hi நான்னா’.; பான் இந்தியா பட ரிலீஸ் அப்டேட்

நானி – மிருணாள் தாக்கூர் இணைந்த ”Hi நான்னா’.; பான் இந்தியா பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் பான் இந்தியா படமாக உருவாகுகிறது.

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நானியின் 30வது படமான ‘hi நான்னா’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.

#Nani30 என்று அழைக்கப்படும் இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

வித்தியாசமான கதைக்களம் உள்ள திரைப்படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி அவ்வாறான ஒரு கதையையே தற்போதும் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது முதல் பார்வை மூலம் புலனாகிறது.

தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

இயக்குநராக அறிமுகமாகும் ஷௌர்யுவ் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவார் என்று அவர்கள் மேலும் கூறினர்.

தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் இந்தியில் ‘hi பப்பா’ என்ற தலைப்பில் உருவாகிறது.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் நானியின் தோள்களில் அமர்ந்திருக்கும் குழந்தை அவர்களுக்குப் பின்னால் நிற்கும் மிருணாலுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுக்கிறது. பார்ப்போரை கவரும் வகையில் வண்ணமயமாக முதல் பார்வை அமைந்துள்ளது.

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் ‘hi நான்னா’ உருவாகிறது. அப்பா-மகள் பாசத்தை திரையில் சொல்ல மொழி ஒரு தடையல்ல என்பதால் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் எளிதாக சென்றடையும். ‘Hi நான்னா’ இவ்வருடம் டிசம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும்.

படக்குழுவினர்:

நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர்
இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
சிஓஓ: கோட்டி பருச்சூரி
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா

Hi நான்னா

First Look and Title Glimpse of Hi Nanna

Jailer 2nd Single Update : தமன்னாவுக்கு ‘காவாலா..’.. சூப்பர் ஸ்டாருக்கு..??

Jailer 2nd Single Update : தமன்னாவுக்கு ‘காவாலா..’.. சூப்பர் ஸ்டாருக்கு..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.

இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மிர்னா மேனன், நாக பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

ஜெயிலர்

Update on Jailer’s second single to drop today evening

More Articles
Follows