தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவை தனது அழகான நடிப்பால் 1950 – 60-களில் கலக்கியவர் சாவித்ரி.
300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரை ரசிகர்கள் நடிகையர் திலகம் என அழைப்பது உண்டு.
மிகவும் பிரபலமான பின்னர் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார் இந்த நடிகையர் திலகம்.
தற்போது அவரது வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் புதிய சினிமா படமாகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார்.
சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடித்து வருகின்றனர்.
சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்.
மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.
முக்கிய கேரக்டரான பத்திரிகை நிருபராக சமந்தா நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என கூறியிருந்தார்.
சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து தெரிந்துகொண்டுதான் நடிக்கிறேன் என்று கீர்த்தி இதற்கு விளக்கம் அளித்திருந்தார்.
தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் சாவித்திரி தோற்றமும், ஜெமினிகணேசனாக நடிக்கும் துல்கர்சல்மான் தோற்றமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த போட்டோ நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Dulquer and Keerthi role of Gemini and Savitri photos goes viral