தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.
இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.
இதன் பர்ஸ்ட் வெளியானவுடன் இவர்களின் மேக் அப்பை பலரும் பாராட்டினர்.
மேலும் சமந்தா, விஜய் தேவரகொண்டா, மோகன்பாபு, பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.
மதுரவாணி என்ற பத்திரிகை நிருபராக நடிக்கிறார் சமந்தா.
இதனிடையில் விஜய் தேவரகொண்டாவின் போஸ்டரை வெளியிட்டனர்.
படத்தில் இவருடைய பெயர் விஜய் ஆண்டனியாம். இவரும் சமந்தாவும் படத்தில் காதலர்களாக வருகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
வருகிற மே 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
Vijay Deverakonda as Vijay Antony romance with Samantha in Mahanati movie