நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள்

நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக அமைந்திருக்கிறது. ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தடுத்து, 3 மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இந்த நிலையில் தர்மா புரடக்சனில் ‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’ எனும் புதிய திரைப்படத்தையும் அறிவித்துள்ளார். வளரும் இளம் நட்சத்திரமாக, இளைஞர்களைக் கொள்ளைக்கொண்டு வரும் நாயகி ஜான்வி கபூர், தற்போது தென்னிந்தியாவிலும் கால் பதித்துள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர், தான் தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி கூறியதாவது..,

ஒரு மிகப்பெரிய படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும் இப்போது தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜான்வி கபூரின் தாயார், பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி, ஜூனியர் என்டிஆரின் தாத்தா – என்.டி ராமாராவ் உடன் தனது தென்னிந்திய அறிமுகத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீதேவி போல ஜான்வியும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருப்பதன் மூலம், வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்பது நிரூபணமாகியுள்ளது.

மேலும் ஒரு சிறப்பாக நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடிகை ஜான்வி கபூர், நடிகர் ஜூனியர் என்டிஆருடன் அறிமுகமாகிறார்!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி, தேவாரா, உலஜ் போன்ற பிரமாண்டமான வெளியீடுகளுடன், சன்னி சங்கிகாரி கி துளசி குமாரி என ஜான்வி கபூரின் திரைப்பட வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.

Janvi Kapoor movies in south indian languages

நானி – பிரியங்கா – SJ சூர்யா இணைந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்

நானி – பிரியங்கா – SJ சூர்யா இணைந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக இணைந்த பான் இந்திய திரைப்படம் ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’.

‘அன்டே சுந்தரானிகி’ படத்தில் நானி மென்மையான வேடத்தில் தோன்றினாலும், இந்த திரைப்படத்தில் தனித்துவமான சாகசம் நிறைந்த இதுவரை அவர் ஏற்றிராத அதிரடியான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். ‘நேச்சுரல் ஸ்டார்’ நானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த படக் குழுவினர், இப்படத்தின் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர்.

சூர்யா'ஸ் சாட்டர் டே

க்ளிம்ப்ஸ்.. எஸ். ஜே. சூர்யாவின் பின்னணி குரலுடன் தொடங்குகிறது. அவர் நானியின் தனித்தன்மையை ‘சூர்யா’ என்று குறிப்பிடுகிறார். மற்ற மனிதர்களைப் போலவே கதாநாயகனும் கோபப்படுகிறான். ஆனால் அவன் அதை ஒவ்வொரு நாளும் காட்டுவதில்லை.

அவனிடம் உள்ள தனி சிறப்பு என்னவென்றால்… எல்லா சம்பவங்களையும் பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு, சனிக்கிழமைகளில் தன்னை தொந்தரவு செய்தவர்களை வேட்டையாடத் தொடங்குகிறான்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா நானியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன் கிளிம்ப்ஸ் நிறைவடைகிறது.

ஆரம்பம் முதலில் விவேக் ஆத்ரேயா தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டு, முதல் தரமான கான்செப்ட்டுகளுடன் படங்களை உருவாக்கி வருகிறார். மேலும் முதன் முறையாக முழு நீள கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

சூர்யா'ஸ் சாட்டர் டே

அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்.. அந்த கதாபாத்திரத்திற்கு பிரத்யேகத் தோற்றத்தைக் கொண்டு வருகிறது. பின்னர் அஜய் கோஷுடன் அவர் ரிக்ஷா ஓட்டும் காட்சி ரசிக்க வைக்கிறது. இப்படத்தின் தொகுப்பும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.‌

முரளி. ஜி யின் ஒளிப்பதிவும், கார்த்திகா ஸ்ரீனிவாசின் படத்தொகுப்பும், ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் காட்சிகளை மேம்படுத்தி இருக்கிறது. பின்னணியில் இடம் பெறும் ‘சமவர்த்தி..’ எனும் பாடல் நானியின் கதாபாத்திரத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன் பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Suryas Saturday movie set to release on 29th August

கலைஞர் நினைவிடம்.: இப்படி வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம் – வைரமுத்து

கலைஞர் நினைவிடம்.: இப்படி வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம் – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து தன்னுடைய twitter பதிவில்…

கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்

கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

“இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்”

கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்

நன்றி தளபதி

@mkstalin | @CMOTamilnadu
#KalaignarMemorial #கலைஞர்_நினைவிடம்

Lyricist Vairamuthu visited Kalaignar Memorial

சோனாவின் ‘ஸ்மோக்’.; 14 வயதில் வாழ்க்கை எதிர்நோக்கினேன்.. யாரும் எனக்கு இல்லை.!

சோனாவின் ‘ஸ்மோக்’.; 14 வயதில் வாழ்க்கை எதிர்நோக்கினேன்.. யாரும் எனக்கு இல்லை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன்.

கடந்த இருபது வருடங்களில் நன்கு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் தன்னை பன்முக திறமை கொண்ட நடிகையாக தன்னை செதுக்கிக் கொண்டுள்ளார்.

தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது டைரக்சன் பயணத்தையும் துவங்கியுள்ளார்.

ஷார்ட்பிளிக்ஸுடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலமாக இந்த வெப் சீரிஸை அவர் தயாரித்திருப்பதுடன் இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார்.

‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து திரையுலகை சேர்ந்தவர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுவான பார்வையாளர்கள் அனைவருமே இந்த வெப்சீரிஸ் எதைப்பற்றியதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது ‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் தயாரிப்பாளர்கள் அதன் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சோனாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக இந்த வெப்சீரிஸில் அவரது வெவ்வேறு வயது காலகட்டங்களில் மூன்று வெவ்வேறு நடிகைகள் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

“இளமை பூக்கும் பதினான்காம் வயதில் நான் ஒரு அழகான வாழ்க்கையை எதிர்நோக்கி கொண்டிருந்தேன், ஆனால் அந்த கரம் என்னை பிடித்தது.. என்னை தள்ளியது.. நான் பேசுவதற்கு யாருமே கிடைக்கவில்லை. நான் ஏதோ உயிர் வாழ்கிறேன்” என்கிற வாசகங்களுடன் நடிகை சோனாவின் 14 வயதான இளம் பருவத்தை இந்த பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் காட்டுகிறது.

‘மத்தகம்’ என்கிற வெப்சீரிஸில் கவுதம் வாசுதேவ் மேனனின் மகளாக நடித்திருந்த நடிகை ஜனனி விஜயகுமார், சோனாவின் இந்த 14 வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் சோனா ஹைடனால் எழுதி (எனக்குள் இருக்கும் குழந்தை சொல்லச்சொல்ல எழுதப்பட்டது) இயக்கப்பட்டுள்ளதுடன் அவரது யுனிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் ஷார்ட்பிளிக்ஸுடன் இணைந்து இதை தயாரித்துள்ளது. ஆல்வின் புருனோ இசையமைக்க, வெங்கி தர்ஷன் ஒளிப்பதிவை கையாள, படத்தொகுப்பு பணிகளை அருள் மேற்கொண்டுள்ளார்.

இந்த வெப் சீரிஸ் நன்கு பிரபலமான திறமையான நட்சத்திரங்களை தன்னுள் உள்ளடக்கியுள்ளது. விரைவில் அவர்களை பற்றிய விவரங்களை ஷார்ட்பிளிக்சில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஸ்மோக்’ வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கிறது.

*தொழில்நுட்ப கலைஞர்கள்*

எழுத்து – இயக்கம் – சோனா ஹைடன்
ஒளிப்பதிவு – வெங்கி தர்ஷன்
இசை – ஆல்வின் புருனோ
படத்தொகுப்பு – அருள்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
மேலாளர் – கே.எஸ்.சங்கர்
இணை இயக்குநர் – மருதுவேல் பாண்டியன்
இணை இயக்குநர் – பாலமுரளி
உதவி இயக்குநர்கள் – அருண் குமார், அபிநய செல்வ விநாயகம்
அலுவலக மேலாளர்/காசாளர் – பிரவீன் குமார் N,
ஆடை வடிவமைப்பாளர்-சோனா ஹைடன்
கலை இயக்குனர் – ராமு
நடன இயக்குனர் – பூபதி
டிசைனர் – நவ்நீத்
மோஷன் டிசைனர் – அருண் சிவம்
போஸ்ட் புரொடக்சன்ஸ் – சித்திரம் ஸ்டுடியோஸ்

ஸ்மோக்

Sonas Smoke movie first look

வெண்பா – விஷ்வந்த் இணையும் ‘அக்கரன்’.; பாலியல் டார்ச்சர் தந்தவர்களை பழிவாங்கும் பாஸ்கர்

வெண்பா – விஷ்வந்த் இணையும் ‘அக்கரன்’.; பாலியல் டார்ச்சர் தந்தவர்களை பழிவாங்கும் பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற ‘பார்க்கிங்’ படத்தில் தன் அசத்தலான நடிப்பை வழங்கியவர் எம்.எஸ். பாஸ்கர்.

தற்போது இவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. அருண் கே.பிரசாத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அவரது மகள்களாக வெண்பா, பிரியதர்ஷினி நடித்துள்ளனர்.

இவர்களுடன் ‘கபாலி’ விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ், பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடித்துள்ளனர். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.ஹரி இசை அமைத்துள்ளார்.

அக்கரன்

படம் குறித்து அருண் கே.பிரசாத் கூறும்போது…

அக்கரன் என்றால் நிலையானவன், அழிக்க முடியாதவன், கடவுள் என்று பல அர்த்தங்கள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி எம்.எஸ்.பாஸ்கரின் மகள்கள் வெண்பா & பிரியதர்ஷனி..

மகள்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இச்செயலை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். தந்தை எம்.எஸ்.பாஸ்கர் தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி அவர்களை கண்டுபிடித்து பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. மார்ச் மாதம் படம் திரைக்கு வருகிறது” என்றார்.

மார்ச் 1ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா திரை உலக பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கரன்

MS Baskar Venba Vishwanth starring Akkaran

நடிகைகள் நம் வீட்டு பெண்கள்.; ஆண்கள் அழுதாலும் அழகே.. – மிஷ்கின்

நடிகைகள் நம் வீட்டு பெண்கள்.; ஆண்கள் அழுதாலும் அழகே.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீரா மஹத் இயக்கத்தில் தீரஜ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள படம் ‘டபுள் டக்கர்’.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசும் போது…

காலதாமதமாக வந்ததற்கு முதலில் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட்.

என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன்.

இந்தப் பட டாக்டர் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன்.

உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார்.

அது போல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் இரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான்.

என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான். மிக எளிமையாக எனக்கு அது குறித்து விளக்கம் கொடுப்பான். இயல்பாகவே கலகலப்பான பையன் அவன். படங்களும் ஜனரஞ்சகமாக, கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். அவனுடன் இருந்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய விசிறி, உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன்.

அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. வெட்கமில்லாமல் ஆண்கள் அழுவது என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன்..

ஒரு 50 எம் எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம் எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம், ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்து கொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை.

தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான்.

விஜய் சேதுபதியின் படத்தை இயக்கி வருகிறேன். அவர் ஒரு மகா நடிகன்.

சமீபத்தில் நடிகை பற்றி ஒருவர் பேசியிருந்தார்.. அவர் என்ன பேசி இருந்தார் என்பதை விட நடிகை நாம் மதிக்க வேண்டும் அவர்கள் நம் வீட்டு பெண்கள் போல நம் சகோதரி அம்மா போல.. நடிகை காதலியாக கூட நினைக்கலாம். ஆனால் அதில் கண்ணியம் இருக்க வேண்டும். எனவே யாரும் நடிகை பற்றி தவறாக பேச வேண்டாம்.

த்ரிஷாவிடன் ஓரிரு படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.. ரொம்ப அர்ப்பணிப்பான நடிகை.. சரோஜாதேவி சாவித்திரி உள்ளிட்ட பல நடிகைகளை பற்றி எங்கள் அம்மா சொல்வதைக் கேட்டு இருக்கிறேன்.. அவர்கள் எங்களுக்கு பெரியம்மா போல..

நீங்கள் நடிகர் நடிகைகள் பற்றி எழுதும் போதும் கவனமாக எழுதுங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள். நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவீர்கள் என்று தெரியும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது…

என்ன பேசுவது, எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. மிஷ்கின் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய பேச்சு இன்று அட்டகாசமாக இருந்தது. Heartல் துவங்கி Art வரைக்கும் எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டீர்கள்.

இன்று நீங்கள் இந்த மேடையிலிருப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது. சந்துரு என் முதல் படத்தின் இயக்குநர். திரைப்படத்திற்கு சென்சிட்டிவ் ஆன விசயங்கள் மட்டும் போதாது, கமர்ஷியல் சக்சஸ் அடைய வேறு ஏதோவொன்று தேவை என்பதைப் புரிந்து கொண்டு, பேப்பர் ராக்கெட் நிறுவனத்தில் போய் புரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றிவிட்டு வந்தார். ‘பிள்ளையார் சுழி’ படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது தான் இயக்குநர் மீரா என்னிடம் கதை சொல்ல வந்தார்.

ஐந்து நிமிடத்துக்குள் என்னை இம்ப்ரஸ் செய் என்று சொன்னேன். அவர் நான் ஸ்டாப்பாக என்னை சிரிக்க வைக்கத் துவங்கினார். உடனே சரி கண்டிப்பாக நாம் இதை பண்ணுகிறோம் என்று சொன்னேன்.

என்னுடன் நடித்த ஸ்மிருதி வெங்கட் அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்கு நன்றி. இன்னொரு விழாவை அவருக்காகவே முன்னெடுக்க இருக்கிறோம். எடிட்டர் வெற்றிக்கு நன்றி. அட்லி அங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். மீரான் இங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம்.

இப்படத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது பத்திரிகையாளர்களாகிய உங்களுடைய கடமை. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நாங்கள் கேட்காமலே நீங்கள் செய்வீர்கள் என்று அறிவோம். இருப்பினும் இப்படத்திற்கு உங்களின் ஆதரவைத் தந்து உதவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Actress were like our family members says Mysskin

More Articles
Follows