தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவை தன் நடிப்பால் கட்டிப்போட்ட பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்தார்.
குழந்தை நட்சத்திரமாக துணைவன் என்ற படத்தில் நடித்தார்.
அதன்பின்னர் பல படங்களை தொடர்ந்து இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
’16 வயதினிலே’ மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்தவர்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது..
“நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனது அன்பான தோழியை இழந்துவிட்டேன். திரைத்துறை ஒரு உண்மையான நடிகையை இழந்துவிட்டது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் வலியை நான் உணர்கிறேன். உங்களை இழந்துவிட்டோம் ஸ்ரீதேவி” என்று வேதனையோடு ட்வீட் செய்துள்ளார்.
மேலும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Sridevi passes away Rajinikanth condolences
I’m shocked and very disturbed. I’ve lost a dear friend and the industry has lost a true legend. My heart goes out to her family and friends. I feel the pain with them #RIPSridev … you will be missed.
— Rajinikanth (@superstarrajini) 25 February 2018