மீண்டும் இணையும் கமல்-ஸ்ரீதேவி-ரஜினி

rajini kamal srideviதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடிகளில் கமல்-ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.

அதுபோல் ரஜினியுடனும் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

மேலும் இவர்கள் மூவரும் 16 வயதினிலே, மூன்று முடிச்சு உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் விரைவில் ஸ்ரீ தேவியின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாம்.

இந்த விழாவிற்கு வருமாறு ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1967ம் ஆண்டு சினிமாவில் ‘துணைவன்’ என்னும் படத்தில் அறிமுகமான ஸ்ரீதேவி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நம்பர்1 நடிகையாக வலம் வந்தவர்.

அவர் தற்போது நடித்திருக்கும் படம் ‘மாம்’. இந்தப் படம் ஸ்ரீதேவியின் 300வது படம் ஆகும்.

இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. ஸ்ரீதேவியின் இந்த சாதனையை, மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட இருக்கிறார் கணவர் போனி கபூர்.

இந்த விழாவில் நிச்சயம் ரஜினி கமல் கலந்துக் கொள்வார்கள் என உறுதியாக நம்பலாம்.

சினிமாவில் ஒன்றாக பார்த்த இந்த மெகா ஹிட் ஜோடியை விரைவில் மேடையில் பார்க்கலாம்.

Kamal and Rajini likely to join for Sri Devi 50 years function

Overall Rating : Not available

Latest Post