கிழக்கே போகும் ரயில் சுதாகர் ஐசியூ வில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு?

கிழக்கே போகும் ரயில் சுதாகர் ஐசியூ வில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சுதாகர். தமிழில் கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதனிடையே அவருக்கு உடல் நலம் சரி இல்லாததாகவும் அதனால் அவர் ஐசியூ வில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே நேற்று பிற்பகல் ஒரு வீடியோவை வெளியிட்டார் நடிகர் சுதாகர். அதில் அவர் உடல்நிலை குறித்த வதந்திகளை மறுத்தார்.

அந்த வீடியோவில், சுதாகர் மகிழ்ச்சியான முகத்துடனும் ஆரோக்கியமான உடலுடனும் காணப்படுகிறார்.

Actor Sudhakar refutes the rumours on his health condition

‘லூசிஃபர் & புலி முருகன்’ ரெக்கார்டுகளை பெரு வெள்ளத்தில் அடித்துச் சென்ற ‘2018’

‘லூசிஃபர் & புலி முருகன்’ ரெக்கார்டுகளை பெரு வெள்ளத்தில் அடித்துச் சென்ற ‘2018’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 5-ம் தேதி ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘2018’.

நோபின் பால் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெரும் வெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவானது.

இந்த படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியான முதலே மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதுபோல வசூல் வேட்டையும் பன்மடங்காக உயர்ந்து வருகிறது.

இதற்கு முன் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படம் 12 நாட்களில் 100 கோடியை கடந்து இருந்தது. அதனை முறியடித்து பத்தே நாட்களில் 2018 படம் 100 கோடியை வேகமாக கடந்து முன்னேறி உள்ளது.

இந்த நிலையில் அடுத்த சாதனையாக புலி முருகன் பட வசூலையும் 2018 படம் முறியடித்துள்ளது.

அதாவது ‘புலிமுருகன்’ படம் ரூ.136 கோடியை வசூலித்து மலையாளத்தின் அதிகபட்ச வசூலை எட்டியிருந்தது.

தற்போது ‘2018’ படம் வெளியாகி 18 நாட்களில் உலக அளவில் ரூ.140 கோடி வரை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Malayalam film 2018 crossed lucifer and puli murugan box office collection

234 தொகுதிகளையும் ஒரே நேரத்தில் குறி வைக்கும் விஜய்.; மே 28ல் தளபதி விருந்து.!

234 தொகுதிகளையும் ஒரே நேரத்தில் குறி வைக்கும் விஜய்.; மே 28ல் தளபதி விருந்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் பிசியான நடிகராக இருந்தாலும் தன்னுடைய அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் விஜய்.

விரைவில் தமிழக முழுவதும் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஓர் அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் வருகிற மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு்தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வரும் 28 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் காலை 11 மணியில் இருந்து இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

மே-28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Makkal Iyakkam provide food to poor people

பிச்சைக்காரர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய் ஆண்டனி.. நெட்டிசன்கள் பாராட்டு..

பிச்சைக்காரர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய் ஆண்டனி.. நெட்டிசன்கள் பாராட்டு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர் ஜோடியாக நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படம் மே 19ஆம் தேதி திரைக்கு வந்தது. நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் திடமான வருவாயைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் விஜய் ஆண்டனி புரமோஷன் நிகழ்ச்சிக்கு திருமலை சென்றார். அங்கு பிச்சைக்காரர்களுடன் விஜய் ஆண்டனி எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கில் இப்படம் எதிர்பார்ப்பை தாண்டி வெற்றி பெற்று, வாங்குபவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

Pichaikkaran 2: Vijay Antony takes a selfie with beggars

விடாமுயற்சியில் அஜீத்துடன் 4 வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை

விடாமுயற்சியில் அஜீத்துடன் 4 வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் எவர்கிரீன் நடிகையான த்ரிஷா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ படங்களுக்குப் பிறகு அஜீத்தும் த்ரிஷாவும் நான்காவது முறையாக இணையும் படம் இது.

அவர்களின் குறைபாடற்ற ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவர்களை கோலிவுட்டின் ஹாட் ஜோடிகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகர்கள் யார் என்பது ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தெரியவரும்.

Ajith to romance evergreen actress for the fourth time in ‘Vidaamuyarchi’?

வாணி ராணி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை. என்ன காரணம் ?

வாணி ராணி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை. என்ன காரணம் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகு’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியல்களை இயக்கியவர் ஓ.என்.ரத்னம்.

ரத்னத்தின் மனைவி பிரியா திடீரென தூக்குப்போட்டு இறந்தது தொலைக்காட்சி துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. . இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று திரும்பி வந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்னம் அவர்களை பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைத்து வருவதற்காக காலையில் சென்றிருந்தார், அவர் திரும்பி வரும்போது ப்ரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Famous Tamil serial director’s wife dies by suicide

More Articles
Follows