வில்லன் ரஜினிக்கே முதன்முதலாக மன்றம் தொடங்கிய ரசிகர் மரணம்

வில்லன் ரஜினிக்கே முதன்முதலாக மன்றம் தொடங்கிய ரசிகர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் பல நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளன.

மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒரு தமிழ் நடிகருக்கு ரசிகர் மன்றம் இருப்பது ரஜினிக்கு மட்டுமே.

இவர் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே உள்ளிட்ட தன் ஆரம்பகாலங்களில் வில்லனாகவே நடித்தார்.

அப்போதே ‘கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் தன் 18 வயதில் முதல் ரசிகர் மன்றத்தை மதுரையில் தொடங்கியவர் ஏ.பி.முத்துமணி.

குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் இடம்பெற்ற முத்துமணி சுடரே வா.. என்ற பாடல் கூட இந்த ரசிகர் பெயரிலேயே உருவானதாக கூறப்படுகிறது.

ரஜினியின் வீட்டு பூஜை அறையில் தான் முத்துமணியின் திருமணம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி நேற்று மார்ச் 8ல் உயிரிழந்தார்.

இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் முத்துமணி அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்து இருந்தார் ரஜினிகாந்த் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini die hard fan Muthumani died who launched 1st fan club

அப்பா வயதுள்ள பாலகிருஷ்ணா-சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

அப்பா வயதுள்ள பாலகிருஷ்ணா-சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் பின்னணி பாடகியும் கூட.

இவர் தமிழில் விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, சூர்யாவுடன் ‘ஏழாம் அறிவு’, தனுஷ்டன் ‘3’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. எனவே தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது பிரபாஸ் உடன் பான்–இந்தியா படமான ‘சலார்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ஒரு தெலுங்கு படத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். பாபி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

இது சிரஞ்சீவியின் 154வது படமாக உருவாகிறது. நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

ஸ்ருதிக்கு தற்போது 36 வயதாகிறது. தமிழில் 45 வயதுள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் 60 வயதை கடந்தவர்கள். இவர்கள் ஸ்ருதியின் அப்பா கமல் வயதை உடைய நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruti Haasan to pair opposite with senior actors

‘கோலிவுட் டஸ்கி பியூட்டி’ நடிகையுடன் இணையும் ‘லாக்கப்’ டைரக்டர்

‘கோலிவுட் டஸ்கி பியூட்டி’ நடிகையுடன் இணையும் ‘லாக்கப்’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி’ என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விருது விருந்து இரண்டையும் படைக்கும். வித்தியாசமான கதை களத்தை தேர்ந்து எடுத்துள்ளார்.

பல திருப்பங்கள் நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கின்றன.

இதனை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் SG. சார்லஸ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார். படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

Aishwarya Rajesh joins with lock up director’s next ?

EXCLUSIVE – Silence is Violence… காந்திஜி.. அரசியல்.. சூப்பர் ஹீரோ.. பாலியல் குறித்து சூர்யா ஓபன் டாக்

EXCLUSIVE – Silence is Violence… காந்திஜி.. அரசியல்.. சூப்பர் ஹீரோ.. பாலியல் குறித்து சூர்யா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை மார்ச் 10ல் உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

இதில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, வினய், சரண்யா, திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்துள்ளார்.

இதனையொட்டி படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு.

இந்த நிலையில் கேரளாவில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார்.

அவர் பேசியதாவது…

இந்த நவீன உலகத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது வேதனையளிக்கிறது. இந்த சமூகம் மாறவேண்டும். அதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்.

அநியாயங்களை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க கூடாது. மௌனம் கூட வன்முறையாகும். மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து தள்ளி விட்டபோது தான் அவர் எதிர்த்து பேச ஆரம்பித்தார். அதன்பின்னரே வரலாறு உருவானது.

நான் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. கல்வி குறித்து அறிந்துள்ளேன். அதனால் அது தொடர்பான சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்

மின்னல் முரளி படம் பார்த்தேன். மிகவும் அருமை. சூப்பர் ஹீரோ கதை அனைவருக்கும் பிடித்துள்ளது.”

இவ்வாறு சூர்யா பேசினார்.

EXCLUSIVE – Silence is Violence says Actor Suriya

ரஹ்மானின் கோரிக்கையை ஏற்ற இளையராஜா..; துபாயில் நடக்குமா?

ரஹ்மானின் கோரிக்கையை ஏற்ற இளையராஜா..; துபாயில் நடக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துபாய் நாட்டில் நடைபெறும் கண்காட்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதன்பின்னர் அந்த நாட்டில் உள்ள ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கே சென்று ரஹ்மான் சந்தித்தார் இளையராஜா என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

“எங்கள் ஃபிரதோஸ் ஸ்டுடியோவுக்கு மேஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் எங்கள் ஸ்டுடியோவுக்காக அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார் ரஹ்மான்.

“ரஹ்மானின் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு தொடங்கும்” என இளையராஜாவும் பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து ஃபிரதோஸ் ஸ்டுடியோ ட்விட்டர் பக்கத்தில், “எங்களால் காத்திருக்க முடியவில்லை. இந்த துபாய் கண்காட்சியிலேயே அது நடக்குமா?” என பதிவிட்டுள்ளது.

Ilaiyaraaja Meets AR Rahman – Surprise Visit To Firdaus Studio

தானே இயக்கி தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் செல்வராகவன்

தானே இயக்கி தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் ‘நானே வருவேன்’. இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார்.

யுவன் இசையமைத்து வரும் இந்தப்பட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதில் முக்கிய வேடத்தில் செல்வராகவனும் நடிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான அவரின் பிறந்தநாள் போஸ்டரில் அவரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

சாணிக் காயிதம், பீஸ்ட் படங்களில் செல்வராகவன் நடித்து வந்தாலும் தனது இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் ‘நானே வருவேன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Selva Raghavan to act with Dhanush in his new film

More Articles
Follows