நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் ஜோடி விஜய்

நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் ஜோடி விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dulquer Salmaan to romance with Keerthy Sureshசாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகவுள்ளது.

‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதனை நாக் அஷ்வின் இயக்குகிறார்.

தற்போது இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் சாவித்ரியின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷும், ரிப்போர்டராக சமந்தாவும் நடிக்கின்றனர்.

‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

இந்நிலையில், சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா என்ற தெலுங்கு நடிகர் நடிக்கிறாராம்.

பெல்லி சொப்புலு என்ற ஒரு படத்தின் மூலம் நிறைய இளம் ரசிகைகளை இவர் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda romance with Samantha for Savitri Biopic

Samantha Vijay Devarakonda

தனுஷ் படத்தில் நடிப்பதற்கு முன்பே ரஜினிக்கு தாதா பேரன் மிரட்டல்.?

தனுஷ் படத்தில் நடிப்பதற்கு முன்பே ரஜினிக்கு தாதா பேரன் மிரட்டல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Haji Masthan Foster Son send legal Notice to Rajinikanth for the Story issue of Thalaivar 161ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தை ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ரஞ்சித் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

அதாவது மும்பையில் வாழ்ந்த பிரபல தமிழரான தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கைத்தான் இதன் கதைக்களமாக இருக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் ஹாஜி மஸ்தான் அவர்கள் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் என்பவர் ரஜினிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்…

என் தாத்தாவின் வாழ்க்கையை நீங்கள் படமாக எடுக்கவுள்ளதை பத்திரிக்கை மூலம் அறிந்தேன்.

அவர் ஒன்றும் தாதா அல்ல. மக்களுக்காக வாழ்ந்தவர்.

நீங்கள் படமாக எடுக்க விரும்பினால் என்னால் ஆன உதவிகளை செய்வேன். நானும் ஒரு தயாரிப்பாளர்தான்.

அவரது வாழ்க்கை வரலாறை நீங்கள் மாறாக சித்தரித்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கடிதம் அனுப்பியுள்ளார்.

Haji Masthan Foster Son send legal Notice to Rajinikanth for the Story issue of Thalaivar 161

rajini haji masthan 1

அட்லி இயக்கும் படத்தில் விஜய்யின் 3 கேரக்டர்கள் இதுதான்

அட்லி இயக்கும் படத்தில் விஜய்யின் 3 கேரக்டர்கள் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays 3 character updates from Thalapathy 61 movieஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், சத்யன், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என விஜய் 3 கேரக்டர்களில் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

முதல் கேரக்டரில் விஜய் ஒரு கிராமத்தில் இருப்பது போன்றும், அது பழைய காலத்து கெட்டப்பில் இருக்கும் என கூறியிருந்தோம். இவருக்கு ஜோடி நித்யா மேனன்.

அந்த கேரக்டருன்தான் எஸ்ஜே சூர்யா டாக்ராக நடித்திருந்தார்.

இதனையடுத்து மற்றொரு விஜய் டாக்டராவும் அவருக்கு ஜோடியான காஜலும் டாக்டராக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் 3வது விஜய் கேரக்டர் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

இந்த கேரக்டர் மாயஜாலங்கள் செய்யும் ஒரு மேஜிக் மேனாக வருகிறாராம்.

இந்த கேரக்டர்தான் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

ரஜினியை சந்திக்க உள்ள ரசிகர்களுக்கு அன்பு கட்டளைகள்

ரஜினியை சந்திக்க உள்ள ரசிகர்களுக்கு அன்பு கட்டளைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rules and Regulation for Fans to meet Super Star Rajinikanthஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தின் வெளியீட்டின் போது ரஜினியை சந்தித்து ரசிகர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

தற்போது நீ…..ண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வருகிற மே 15 முதல் 19 வரை ரசிகர்களை சந்திக்க உள்ளார் ரஜினி.

இதன் முதற்கட்டமாக திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் உள்பட 17 மாவட்ட ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார் சூப்பர் ஸ்டார்.

ஒரு மாவட்டத்திற்கு 200 முதல் 250 ரசிகர்களை ரஜினியே தேர்வு செய்து அவர்களுக்கு ஐடி கார்டும் முறைப்படி ஸ்கேன் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கார்ட்டை போலியாக தயாரிக்க முடியாத வகையில் உருவாக்கியிருக்கிறார்களாம்.

அது தொடர்பான சில விதிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில்…

தலைவரை சந்திக்க வரும் ரசிகர்கள் தாமதமாக வரக்கூடாது.

மே 15 அன்று காலை 7 மணிக்கே ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இருக்க வேண்டும்.

காலை டிபன் முடிந்த பின்னர் 9 மணி முதல் ரசிகர்களை சந்திப்பார் ரஜினிகாந்த்.

சந்திக்கும்போது அரசியல் குறித்தோ மற்ற ஆலோசனையோ கூடாது-

யாரும் பரிசுப் பொருள்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது ஆகியவை கூடாது.

மேலும் குறிப்பாக தலைவர் ரஜினிகாந்த் காலில் விழவே கூடாது என அதிரடியான அன்புக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைவர் எத்தனை கட்டளைகள் போட்டாலும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு என்ன செய்யப்போகிறார்களோ..?

Rules and Regulation for Fans to meet Super Star Rajinikanth

விவேகம் டீசர் சாதனையால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்

விவேகம் டீசர் சாதனையால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini ajith

சிவா இயக்கி வரும் விவேகம் படத்திற்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில வாரங்களாக பல்கேரியா நாட்டில் உள்ளனர்.

இதன் சூட்டிங் இன்றுடன் முடிவடையும் என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இன்னும் சில தினங்களில் விவேகம் படக்ழுவினர் சென்னை திரும்ப உள்ளனர்.

இதனிடையில் விவேகம் டீசர் நேற்று வெளியானது.

தென்னிந்தியளவில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.

எனவே இதன் தமிழக உரிமையும் ரூ.55 கோடி வரை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் வியாபாரத்தில் ரஜினி அடுத்த இடத்தை அஜித் பிடித்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.

Vivegam movie Tamil Nadu Business rights goes for huge price

போக்கிரி 2… விஜய் ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா..?

போக்கிரி 2… விஜய் ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pokkiri 2மகேஷ்பாபு நடிப்பில் உருவான போக்கிரி (தெலுங்கு) மாபெரும் பெற்றிப் பெற்றது.

இந்த படத்தை விஜய்-அசின் நடிப்பில் தமிழில் இதே பெயரில் ரீமேக் செய்தார் பிரபுதேவா.

இதன்பின்னர் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பில் சல்மான்கான் நடிப்பில் ‘வாண்டட்’ என்ற பெயரில் இந்தியிலும் ரீமேக்கானது.

இந்நிலையில் கனடா பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் மும்பை இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போனிகபூர், விரைவில் ‘வாண்டட் 2’ படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சல்மான்கான் இல்லாமல் வாண்டட் 2 இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியில் உருவாகவிருப்பதால், தமிழிலும் விஜய் நடிப்பில் ‘போக்கிரி 2’ உருவாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More Articles
Follows